அறிவிலியானேன்
புனைவுகளின் வாழ்வில் 
கண் திறந்த கனவுகளில் 
மார்கழி கோலமாய்
வண்ணமிட்டு வந்தாய் 
இதயத்தில் நீ(ர்) தெளித்து 
குப்பைக் கூடைகள் நிரம்பின 
வார்த்தைகள் வந்து விழாமல் 
வார்த்தைகள் கை கூடும் போது 
பாதை மறந்த வழிப்போக்கனாய் 
அம்மாவசை இரவுகள் 
உன்னை காணாத நாட்கள் 
நீ நின்று சென்ற இடங்களில் 
வசிக்கிறேன் நம்பிக்கையுடன் 
உயிர்பெறுகிறது ஒரு துளி 
பெரு மழைக்காக ...

12 comments:
//உயிர்பெறுகிறது ஒரு துளி
பெரு மழைக்காக//
நல்ல நம்பிக்கை
வாழ்த்துக்கள் :-)
நம்பிக்கைதான் வாழ்க்கை !
வணக்கம் சார்.நலம்தானே?நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
///நீ நின்று சென்ற இடங்களில்
வசிக்கிறேன் நம்பிக்கையுடன்///
நம்பிக்கைதான் வாழ்க்கை ..
நல்லா இருக்குங்க கவிதை.. :-)
நல்ல கவிதை.
இது இல்லை என்றால் வாழ்க்கை ??
சிறப்பாக இருக்கிறது
நல்ல கவிதை.
//மார்கழி கோலமாய்
வண்ணமிட்டு வந்தாய்
இதயத்தில் நீ(ர்) தெளித்து
குப்பைக் கூடைகள் நிரம்பின//
நான் ரசித்த வரிகள்.. தொடருங்கள், நன்றி.
அருமை. அழகு.
அருமை அருமை...
Post a Comment