அம்மா...! அப்பா வந்திட்டார் என்றேன்.
தெருவில போரவனையெல்லாம்
அப்பான்னு சொல்லாத என்றாள்.
சிறிது நேரத்தில் ...
டேய் அண்ணன் வந்திருக்கிறான்
கதவைத் திறந்து விடு
எந்தச் சத்தமும் கேட்காமலே
அடுப்படியிலிருந்து சொன்னாள்..
சரியாகத் தான் இருந்தது .
எப்படிம்மா...? எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
அம்மா ..கொலுசு சத்தம் கேட்குது
அக்கா வந்திருக்கா போல
திறக்கிறேன் என்றேன்.
டேய் தம்பி ....
அது அடுத்தத்தெரு அகிலா
அவள் சொல்வதை காதில் கேட்காமலே
திறந்தேன் ..
இதுவும் சரிதான்...!
ஆட்டோ சத்தம் கேட்கிறது
தம்பி ...இந்த பால் பக்கெட்டை
பக்கத்து வீட்டு மாமிகிட்ட கொடு
மாமி குடும்ப சகிதமாக இறங்கினாள்
எப்படி இது சாத்தியம் ....!
டேய் மாடியில டி.வி. பார்க்கிற
உன் அண்ணனை நிறுத்தச் சொல்லு
பரிட்சைக்கு படிக்கச் சொல்லு
எப்படி மியூட்டில் டி.வி பார்ப்பதைக் கண்டாள்
எல்லாம் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது
ஹாலில் துணிமடித்துக் கொண்டே
அப்பா வந்துட்டாரு போய் பையை வாங்கு....
பைக் சத்தமில்லாமல் வந்த அப்பாவை எப்படி கண்டுபிடித்தாள்..?
பாட்டி பாத்ரூம் லைட்ட ஆப் செய்யல
போய் ஆப் செய்துட்டு வா..
எப்படி அத்தனையும் பார்க்காமலே
என படுக்கையில் யோசித்தேன்
டேய் என்ன யோசனை
எப்படி எதையும் பார்க்காமலே சொல்லுகிறேன்னுதானே...?
பாய்ந்து போய் கட்டியணைத்து
எப்படி என கண்ணால் எறிட்ட என்னை
முத்தமிட்டே சொன்னாள்
நான் உன் அம்மாடா ....
அப்போது தான் உணர்ந்தேன்
அம்மாவின் முழு அர்த்தத்தை..!
28 comments:
arumai!!!
ரசித்தேன்... நண்பா...
மிக அருமை!! வாழ்த்துக்கள்!
அம்மாவின் உணர்வையும் அன்பையும் அழகாக வடித்துள்ளீர்கள்... வாழ்த்துகள்....
Nice post.
ஹா...இன்னமும் என் அம்மாவிடம் இப்படி சில விஷயங்களை கண்டு வியப்பதுண்டு. நமக்கு அதெல்லாம் சரி வராத வேலை. சில சமயம் எங்க வீட்டு வாண்டு 'பாபா', 'பாபா'ன்னு ஓடி வந்தாதேன்...ஓ அவர் வந்துட்டார்னே தெரியும். என் அம்மாவுக்கு இன்னும் இப்படி தமிழில் கவிதை படிக்கவோ அல்லது அதன் அர்த்தத்தை விளங்கிக்கவோ தெரியாது. இல்லைன்னா காட்டிடுவேன். ஹ்ம்ம்..அப்படியும் அழகானவள். !!
மிக ரசித்தேன். அருமை. அருமை.
இதுதான் தாய்மையின் மகத்துவம்........அருமை நண்பரே....
ஒரு தாயாய் பெருமை கொள்கிறேன் கவிதை பார்த்து.
நுணுக்கமாய் கவனிக்கும் போது தான் சில
நுண்ணிய விஷயங்கள் புலப்படும்
அழகான கவிதை சரவணன் சார்
பெண்கள் இயல்பிலேயே multi tasking என்று உளவியல் கூறுகிறது.அதாவது சமையல் செய்துகொண்டே தெருவில் நடப்பவற்றையும் மாடியில் படிக்காது டிவி பார்க்கிற உங்களையும் அவர்களால் கண்காணிக்க முடியும்.அவர்கள் மூளையே அவ்விதம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.தாய்மை தரும் உணர்வுக் கூர்மையும் பொறுப்பும் இதை மேலும் அதிகரிக்கக் கூடும்.சரியான அவதானிப்பு.
:) நல்லா இருக்கு.
சூப்பருங்க சரவணன்! அம்மா அம்மாதான்!
அம்மா என்றால் சும்மாவா???
அருமை நண்பரே..
அதுதான் அம்மா! அருமை!
தாய்மையை அழகாக உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.
நல்லாயிருக்கு ஐயா!
அம்மா அம்மாதான்!
அம்மா ...அம்மா... அம்மா.. அம்மா...
அவள் பெயரே மந்திரம்..
அவள் பெயரே கவிதை..
அவள் பெயரே விருந்து..
அவள் பெயரே மருந்து..
அவள் பெயரே அனைத்தும்
அழகான பதிவு அம்மா பதிவு
அருமை..
present, sir
அருமை..
என் தாய் போல் என்னை அரவணைத்து என் எழுத்துக்களை ஊக்குவிக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...
அருமை சரவணன்... அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்து அர்த்தங்களும் வந்து விடுகின்றன.. நமக்குத் தான் தெரிவதில்லை..
Good one!!
Hari Rajagopalan
ரொம்ப நல்லாருக்குங்க.
அருமையான கவிதை எளிமையான நடை,
அ - அன்பு
ம் - மரியாதை
மா - மாயை
I liked it very much Sir...
அடடா இவ்வளவு அர்த்தத்தையும் சாதரணமாக சொல்லறிங்களே...
Post a Comment