அண்ணன் , தம்பி
அக்காள், தங்கை
அம்மா, அப்பா
மாமா, மாமி
தாத்தா , பாட்டி
என குடும்பமே
சேர்ந்து அழுகிறது ...
சிரித்தாலும் அப்படித் தான்...
கீழே விழுந்து
இரத்தம் வழியும்
என்னை கேட்க
நாதியில்லை
ஒரு நாள் ....
இல்லை இல்லை
ஒரு கால் மணி நேரம்
அது தெரியவில்லை
என்றால்...
அப்பா போன் போடுகிறார்...
அண்ணன் அலறுகிறான்
அம்மா ஆட்டோவில்
தூக்கி சுமக்கிறாள்...
பாட்டி அதுக்கு என்னாச்சுன்னு
கொஞ்சம் பாரேன்
என பரிந்து பேசுகிறாள்
மச மசன்னு நிக்காம
மெக்கானிக்க கூப்பிடுங்க
என அழைக்கிறார் தாத்தா
நித்தம் அதை துடைக்கிறார்கள்
என் தங்கையும் அண்ணணும்
அதனுடன் சண்டைபோட்டு
விளையாடுகின்றனர்...
அதன் முகத்திலேயே முழித்து
அதன் ஒளியிலேயே உறங்குகின்றனர்...
நானே பொறாமைக் கொண்டு
தினமும் அதை அணைக்கிறேன்....
நான் விழுந்த இடத்தில்
புல் முளைத்து விட்டது
இருப்பினும் என்னைக் கவனிக்க
யாரும் இல்லை...
பேசாமல் என்னை
அந்த டி.வி.பெட்டியாகவே
பெற்றிருக்கலாம்....
கடவுள் எனக்கு வரம் தந்தால்
நான் டி.வி பெட்டியாகவே மாற ஆசைப்படுகிறேன்...!
10 comments:
பல வீடுகளில், அதுதானே நிலைமை. அருமையாக எழுதி இருக்கீங்க.....
அடடா.. டிவி கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..
அதற்கு கொடுக்கிற மரியாதையும், முக்கியத்துவமும்... வீட்டு மனுசங்களுக்கே கிடைக்கிறதில்ல..:-))
:)
நல்ல சிந்தனை
புதிய கோணத்தில். நிரம்ப ரசனை
:) அப்படித் தானே இருக்கிறது.
Ha ha ha :)
ஓ...சிரித்துவிட்டாலும் உண்மையான சிந்தனைதான் !
நிஜம் தான் :)
இந்த வரம் போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?
வித்தியாசமான கவிதை அருமை.
Post a Comment