அப்பள்ளியின் தலைமையாசிரியர் சோசாகு கோபயாஷி ,மதிய உண்வு வேளையில் மாணவர்களின் மதிய உணவு பெட்டியை திறந்து பார்த்து ,’கடலிலிருந்து கொஞ்சமும் , மலையிலிருந்து கொஞ்சமும் ’எல்லாரும் கொண்டு வந்திருக்கிறார்களா? என பார்வையிடுகிறார். கடலிலிருந்து கொஞ்சம் என்றால் கடல் உணவு .மலைகளிலிருந்து கோஞ்சம் என்றால் நாட்டு உணவு. அதாவது காய்கறிகள் , மாடு, பன்றி, கோழி இறைச்சி.
போன்றவைகள்.
மாணவர்களிடம் இது கடலிலிருந்து வந்ததா, இல்லை மலைகளிலிருந்து வந்ததா? என்று வினாவுவதுடன் , அதற்கான விளக்கம் கூறுவது அதிசயம். பூமியின் நிறத்தை கொண்டிருப்பதால், அவ்வுணவு மலையிலிருந்து வந்ததாகவும் இருக்கலாம் என்ற விளக்கம் , மாணவர்களுடன் மதிய உணவு வேளையில் தலைமையாசிரியரின் செயல் இவை தற்போதைய சூழலில் என்னை ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.
காமராசரின் மதிய உணவு திட்டம் பள்ளி மாணவர்களை இடைநிற்றல் இன்றி பள்ளி வர உதவியது என்பதுடன்., அது இன்று மூன்று நாட்கள் முட்டைகளுடன் இரண்டு நாள் உருளைக்கிழங்கு, ஒரு நாள் கொண்டைக்கடலை என அற்புதமாய் ஒரு தரமான சத்துள்ள உணவாக உருமாறியுள்ளது. திட்டத்திலும் , உணவிலும் சத்து இருந்தால் போதுமா..?
அது முறையாக மாணவனுக்கு போய் சேருகிறதா...?( அய்யா நான் சொல்லும் போய்ச் சேருகிறதா..?என்பது நீங்கள் நினைக்கும் ஒன்று அல்ல)
டோமோயிப் பள்ளியின் தலைமையாசிரியரைப் போன்று முறையாக மதிய உணவு கண்காணிக்கப்படுகிறதா....? மனச்சாட்சியுள்ள ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று. மதிய உணவு பெல் அடித்தவுடன் , மாணவர்கள் விரைந்து சென்று டிபன் பாக்ஸ் திறப்பார்கள். பாதி மாணவர்கள் ஓடிச்சென்று மதிய உணவு வாங்குவார்கள். ஆசிரியர்கள் அருகில் உள்ள ஆசிரியருடன் ஒரு பள்ளி சம்பந்தம் இல்லா ஒன்றை உரையாடி , தங்கள் டிபன் பாக்ஸை திறந்து உணவருந்த செல்வர். (பொதுவாக நான் பார்த்த மட்டும்.உங்கள் பள்ளி நாட்களை எண்ணிப் பாருங்கள் )
தயவு செய்து ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மைதானத்தில், மரத்தடியில் ,வகுப்பறையில் உணவருந்தும் மாணவர்களைப் பாருங்கள். அநேகம் மாணவர்கள் முட்டைகளை வீணடித்து இருப்பார்கள். பலர் தங்கள் உணவுத் தட்டை, அல்லது உணவுப் பெட்டியை சுற்றி உணவை சிதறி உண்பதுடன் காய்கறிகளை வீணடித்து இருப்பார்கள். உணவுகளை அப்படியே குப்பைத் தொட்டிகளில் கொட்டியிருப்பார்கள். சிலர் உணவுப் பெட்டியை
திறக்காமலே வைத்திருப்பர். இவையெல்லாம் நிஜம். நான் தலைமையாசிரியராக பணிநியமனம் செய்யப்பட்ட போது கோபயாஷியைப் போன்றே உலவிய போது கண்கூடக் கண்டவை.
பெற்றோர்களும் தங்கள் மகன்/மகள் பள்ளியில் முறையாக உணவு அருந்துகின்றனரா? என்று விசாரிக்க வேண்டும். நவீன தொலைதொடர்பு வசதிகளைக் கொண்டுள்ள நாம், நம் குழந்தைகளுக்காக தலைமையாசிரியருடனோ, வகுப்பு ஆசிரியருடனோ தொடர்புக் கொண்டு மாணவனின் உணவு முறையை அறிந்துக் கொள்வதில் தவறு இல்லை. மாலை வீட்டுக்கு வந்தவுடன் அனைத்து காய்கறிகள், முட்டைப்போன்ற உணவுகளை அவன் தான் உண்டானா? என கேட்டால் நிச்சயம் அவன் உணவை வீணடிக்க மாட்டான்.
’சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது’. ’உணவே மருந்து’.என்பதெல்லாம் ஏட்டுடனே முடிந்து விடக்கூடாது. அது முறையாக குழந்தைகளுக்கு சென்றடைய வேண்டும். சரிவிகித உணவு கிடைக்கிறதா? என்பதை ஆராய்ந்து , அவ்வுணவு மதிய உணவு திட்டம் மூலமாகவோ இல்லை பெற்றோர்கள் மூலமாகவோ கிடைத்திட ஆசிரியர்கள் உதவ வேண்டும். விட்டமின் சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து கிடைத்திட ஏற்றவகையில் டோமோயி பள்ளியைப் போன்று ஆசிரியர்கள் முனைப்புடன் செயல் பட வேண்டும்.கீரை, முட்டை, காய்கறிகள், பழங்கள், கொண்டைக்கடலை போன்றவைகள் மாணவனுக்கு தினமும் கிடைக்கச் செய்வதன் மூலம் மாணவனை ஆரோக்கியம் உள்ளவனாக இருக்கச் செய்யலாம்.
என் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பி பிரிவைச் சார்ந்த சுமதி என்ற ஆசிரியர் எப்போதும் மாணவர்களுடனே அமர்ந்து உணவருந்துவார். அவர்களிடம் வேற்றுமை பகிர்வது கிடையாது. எந்நேரமும் அவரை சுற்றி ஈ மொய்ப்பதுப்போன்று மாணவர்கள் மொய்த்திருப்பர். அனைவரும் உணவு கொண்டு வந்த பின் , உணவை சிந்தாமல், சிதறாமல் சாப்பிடுவதைப் பார்க்கும் போது நமக்கு பொறாமை உண்டாகும். அது மட்டுமல்ல அவர் முதல் நாள் ஒருவன் ஒரு காயை சாப்பிட வில்லை என்றால் மறுநாள் அதே காய் கொண்டு வரச் செய்து அதை வற்புறுத்து உண்ணச் செய்வார். அவன்/அவள் அதை சுவைத்து உண்டவுடன் அவனை ஒரு தாயைப் போன்று அணைத்து முத்தம் கொடுப்பார். அதே சமயம் கண்டிப்புடன் செயல்படுவார்.தற்சமயம் அவரைப் போன்று பல ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர். அதற்கு அவர் ஒரு முன் உதாரணம். காசுக்காக , கடமைக்காக ஆசிரியர் (தொழிலுக்கு) பணிக்கு வந்தவர்களை யாராலும் மாற்ற முடியாது.
எவ்வகையான உணவு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் பெற்றோரும் , அவ் உணவை மாணவர்கள் சிந்தாமல், சிதறாமல், ஒதுக்காமல் உண்பதற்கு வேண்டிய உதவிகளை பள்ளியின் தலைமையாசிரியரும் , உதவி ஆசிரியர்களும் செய்ய வேண்டும். அது நாளைய மாணவனின் உடல் மற்றும் உள்ள நலனைப் போணுவதாக அமையும்.
(டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி என்ற புத்தகம் புத்தகப்பூங்கொத்து திட்டத்தின் கீழ் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.)
21 comments:
நல்லதொரு புத்தகம் போலத் தெரிகிறது..
உங்கள் ஆசிரியை சுமதிக்கு என் வணக்கமும் வாழ்த்துகளும்..:-)))
எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த பொழுது,வீடு அருகிலேயே இருந்த பொழுதும்,இடைவேளையின் பொழுது உணவுண்ண வர மாட்டார். சத்துணவுக் கூடத்தில் ,மாணவர்களின் உணவறையில்,ஹாஸ்டலில் என மாணவ மாணவியருடனே செலவிடுவார் ...அன்று காலையில் யாரவது மாணவ மாணவியரை அவர் அடித்தோ திட்டியோ விட்டால் எங்கள் வீட்டிலிருந்து அம்மாணவனுக்கு உணவு போகும் ... அடுத்த நாள் அம்மாணவனின் வீட்டினர் மொத்தமாக வீட்டிற்கு வந்து அப்பாவை பார்த்து நெகிழ்வதும் எப்போதும் நடப்பது !
ஆசிரியர் சுமதி அவர்கள் மீது வாஞ்சையான ப்ரியம் பிறக்கின்றது ... தாங்கள் தலைமை ஆசிரியரா !..மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தாம்!
நியோ என் தாய் ஒரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியை, என் தந்தை ஓய்வு பெற்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் என்பதில் உங்களைப்போல் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அதனால் தான் கல்வி மீது ஒரு ஆர்வமோ என்றும் தெரியவில்லை.
நல்ல தகவல் சரவணன் சார்..
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அக்கரை வைத்து ஊட்டச்சத்து உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்துவிடனும்.. ஈசி டூ குக், பேக்கெட் ஐயிட்டம் னு ரெடி மிக்சை தான் இன்று நிறைய தாய்மார்கள் கொடுத்து விடுராங்க குழந்தைக்கு. இது குழந்தையின் ஆரோக்கியம் கெடும் என்பதனை மறந்துவிடுராங்க. பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகள் எந்த உணவு கொண்டு வராங்க என்று கவனிப்பது மிக முக்கியம்.
சுமதி ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.
சரவணன்
நான்கூட ஆசிரியர் குடும்பம்தான் ... ஆனாலும் நான் உங்களைப் போல அல்லவோ?!
நானும் ஆசிரியர் குடும்பத்தை சேர்ந்தவன். என் பெற்றோர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். என் அன்னையின் இரு சகோதரிகள் ஆசிரியைகள்,... நல்ல ஆசிரியர்களைப் பற்றிய பகிர்வு மிகவும் இன்பமாக இருந்தது.
அதே வேளையில் மாணவிகளிடம் சில்மிசத்தின் ஈடுபடும் ஆசிரியர்களை வன்மையாக கண்டிக்க வேண்டும். இது போன்ற செய்திகள் இப்போது அடிக்கடி வருகின்றன. அதைப்படித்த என் அம்மா சொல்லுவார். "இந்த பயலுக குறியை நெருப்புல வைச்சு பொசுக்கனும்".
என்ன எங்க அம்மா சொன்னதை சட்டமாக்கிடலாமா சரவணன் சார்.
- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com
அந்த நூலினைப் பற்றி விமர்சனங்களை வைப்பதோடு,. அதன் சாரம்சத்தையும் முடிந்தால் சிரமம் பாராமல் மொழிமாற்றம் செய்யவும் முயலுங்கள். எங்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.
திருமதி சுமதி போன்ற ஆசிரியர்களுக்கு ஒரு பூங்கொத்து....
மாணவர்கள் மேல் அக்கறையுடன் இருக்கும் ஆசிரியர்களை, எந்த காலத்திலும் மாணவர்கள் மறப்பதில்லை.
அருமையான இடுகை!
Hi, came across your blog accidentally. Found it to be pretty interesting. Me and a couple of my friends have developed a website called imoviehall.com It works on the lines of IMDB but exclusively for Indian movies and it is entirely user editable. It ll be nice if you could visit the site and provide us with feedback. Looking forward to hearing from you.
அருமையான இடுகை!
உங்கள் பள்ளி ஆசிரியைக்கு என் சார்பாக வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள் :)
சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_
(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
மிக அவசியமான பதிவு.
சுமதி ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.
தங்களுக்கும் சேர்த்து..
Nalla Pagirvu.
we need urgently o-ve blood on dindugal. if u can pls call 09942087127, pls forward this message to your friends on dindugal.
ஆசிரியர்களின் கையில் தான் எதிர்கால உலகமே இருக்கிறது சகொதரா.. பதிவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..
நிஜம்தான்.. சத்துக்குறைபாடு கொண்டுவரும் இழப்புகள் நிறையவே இருக்கு..
சுமதி டீச்சருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். இப்படி பாசமுள்ள ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்...
தாய்வீட்டு சைடில் அம்மாவைத் தவிர்த்து பாட்டி, சித்திகள், அனைவரும் ஆசிரியர்களே.
ஆனால் அப்போது இருந்த கவனிப்பு இப்போது ரொம்பவே குறைந்துவிட்டதாகத்தான் தெரிகிறது.
ஜெகதீஸ்வரன் ’துளசி கோபால், அமைதிச்சாரல், தீபா, அன்புடன் மல்லிகா, கருத்துகந்தசாமி, ம்.தி.சுதா, கா.பா, தருமி ,சித்ரா அனைவருக்கும் வருகைக்கு நன்றி... பலர் ஆசிரியர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக உள்ளது.
எத்தனை பள்ளிகளில் இதனைச் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை, மழழையர் பள்ளிகளில் (pre-KG, LKG, UKG) இது நடப்பதாக அறிகின்றேன், ஆனால், ஒன்றாம் வகுப்பு வரும்போது (after they go to I standard), அவர்கள் உணவு உண்பது கவனிக்கப்படுவதில்லை . . .
உங்கள் பதிவு மூலன் இந்நற்சிந்தனை நன்கு சென்று சேரட்டும் . . . .
இங்கும் சில பாடசாலைகளில் பாஸ்ட் பூட் உணவுகள் கொண்டு செல்வதற்கு தடை விதித்திருந்தார்கள்.
படிக்கும் பிள்ளைகள் உடல் நலத்தில் அக்கறை எடுப்பவர்களைப் பாராட்டுவோம்.
அருமையான தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சரவணன். சத்துள்ள உணவு குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் பெற்றோரும் ஆசிரியர்களும் அதில் எவ்வளவு அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
எண்ணங்களை எழுத்தில் தடங்கலின்றிக் கொண்டு வரும் கலையில் நன்கு முன்னேறி வருகிறீர்கள். வாழ்த்துகள்!
Post a Comment