மதுரை தூங்கிபோனது
இரவுத் தொழிலாளிகள்
இரவும்
பகலாய் நீண்டு போனது
ஆவிபறக்கும் இட்டலியும்
அவித்த முட்டையும்
அலைந்தாலும் கிடைக்கவில்லை
மனிதன் அலைந்த
இரவு வீதிகளில்
ஆடுகளும் , மாடுகளும்
நிர்வாணமாய்
காவலுக்குத் துணையாய்
உறுப்புக்கள் வீரியமாகவே
தெனவெடுத்த உடம்புகள்
உறவுகளுக்கு ஏங்கி
வீதிகளுக்கு இறங்கிவரப்பயந்து
விடுதிக்கட்டிலில் விரைப்புடனே
விலைமாதுவும் விலைபோகாமல்
இரவும் பகலாய்
வேதனையில்
மதுரை உறங்குகிறது ...!
10 comments:
கெட்டுப் போயாச்சா நீங்களும் ... ஹும்ம் .. ம்..
சேர்க்கை சரியில்லை !!
:)
நல்லா இருக்கு சரவணன்
தொடர்ந்து எழுதுங்க !
தேவைக்கு ஏற்றாற் போல் மட்டும் சில சொற்களைப் பயன்படுத்துங்க
தொ(க)லை நோக்குப் பார்வை அருமை........
//
மதுரை உறங்குகிறது ...!
//
ம்ம்ம்......
ஃஃஃ...மனிதன் அலைந்த
இரவு வீதிகளில்
ஆடுகளும் , மாடுகளும்
நிர்வாணமாய்
காவலுக்குத் துணையாய்...ஃஃஃ
மனதில் எங்கோ ஓரிடத்தில் அழுத்தமான ஒரு நெருடல்...
ஆக்கம் பல விடயங்களைக் கூற முனைந்தாலும் முகம் சுழிக்க வைக்கும் சொற்கள் நெருடலாக இருக்கிறது.
சில சொற்கள் மாற்றப்பட்டுள்ளன. இனி முகம் சுழிக்க தேவையிருக்காது நண்பரே...!
"....இரவுத் தொழிலாளிகள்
இரவும்
பகலாய் நீண்டு போனது.."
நல்ல கருத்துள்ள கவிதை. பாராட்டுக்கள்
அன்பின் சரவணன்
1963-72 - இரவில் மதுரை - மகிழ்ச்சிகரமான இயல்பான மதுரை. கொசுவத்தி சுத்தி மகிழ வேண்டியது தான்
என்ன செய்வது
நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா
சொன்ன விதம் நல்லாயிருக்கு
Post a Comment