அகிலம் பார்க்க கற்றுக் கொடுத்தவன்...
ஆறுவது சினம் என்றே
ஆக்கம் தந்தவன்...
இனிமையாய் இருந்தே
இயல்பாய் என்னுடன் ஒட்டிக்கொண்டவன்
ஈ மொய்த்த பண்டம் சாப்பிடும் போது
ஈட்டியாய் பாய்ச்சி தீமை அகற்றியவன்
உரிமை கொண்டே உதவிகள் பல செய்து
உண்மை உணர்த்தியவன்
ஊதியத்தில் சில பகுதியை பரிசாய் தந்து
ஊக்கப்படுத்தியவன்
எறும்பாய் தேய்ந்தே எங்களுக்காக
எந்நேரமும் உழைப்பவன்
ஏணியாய் இருந்தே எங்களை
ஏற்றி மகிழ்ச்சி கொள்பவன்
ஐயம் நீக்கி
ஐம்பத்தெட்டு வரை கற்றுத்தருபவன்
ஒழுக்கம் தந்தே
ஓதியவன் ஒருநாளும் மறப்போமா
அஃதே முடியுமோ....?
என்னை பாராட்டி சீராட்டி நல்லவனாக , வல்லவனாக வளர்த்த என் முதல் வகுப்பு முதல் இன்று வரை உள்ள அனைத்து ஆசானுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.
11 comments:
//என்னை பாராட்டி சீராட்டி நல்லவனாக , வல்லவனாக வளர்த்த என் முதல் வகுப்பு முதல் இன்று வரை உள்ள அனைத்து ஆசானுக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.//
மிக அருமை.....
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் சரவணன் சார்
அட அட... ஆதியில் ஆரம்பித்த "அ" முதல் தொடங்கி... உயிர் எழுத்தில் ஒன்றும் விடாமல்....
அதிலயே உங்கள் நன்றி சமர்ப்பித்த விதம் அருமை..அருமை...
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சரவணன்!
உயிரெழுத்துக்களில் தொடங்கி உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். அருமை!
உயிரெழுத்துக்களில் ஒரு உயிர் கவிதை...
ஆசிரியரை கவிதையிலேயே வாழ்த்தியிருக்கிறீர்கள். அருமை.
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
நமக்கே அறியாமல் ,நம் அறியாமையை நீக்கிய ஆசான் களுக்கு உயிரெழுத்தை ஆரம்ப எழுத்தாக வைத்த கவிதை அருமை.
ஆசான்களுக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு வகுப்பெடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும்..பதிவுலகில் என்னை வாசித்து மேம்படுத்தும் ஆசிரியர் உங்களுக்கும்....வாழ்த்துக்கள்
அருமை மதுரை சரவணண் , ஆசானுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்லியே தீரவேண்டும்
நன்றி சரவணண்
ஜேகே
Post a Comment