நாம மாறுனோமானால் எல்லாம் மாறும். ஆம்! நாம் மாறினதாலே தான் எல்லாம் மாறி போச்சு. பருவ காலம்மாறி போச்சு...சுவாசிக்கும் காற்றில் சுத்தம் போச்சு...காற்றும் காசாகும் காலம் வந்தாச்சு..நம் சந்ததிக்கு ஒண்ணும் மிச்சம் மில்லாமல் போயாச்சுன்னு’சொல்லும்முன் நாம் மாறணும். மாறுவோம். என்னால முடியும் போதுஉங்களால் ஏன் முடியாது?
“என் மவராசா... உன்னை மாதிரி நாலுபேரு இருக்கிறதாலே தான்... மழை பெய்யுது “ இப்படி என்னை பார்த்து என் ஏரியா பழக்காரி பாராட்டுவதற்கு என் மனைவி ஏற்படுத்திய மாற்றம் தான் காரணம்.
சரியான பொண்டாட்டி தாசன் என கமண்ட் கொடுப்பதை நிறுத்தி விளக்கத்தை படிக்கவும்.
இன்று பூவி வெப்பமாதல் மிக பெரிய விசயமாக விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் பாலித்தீன் உபயோகம் தவிர்ப்பு மிகவும் முக்கியமானது.
இரத்தக் குழாயின் இடையே தடுப்பு ஏற்படுத்தினால் இரத்தம் ஓடிச் செல்லமுடியாமல் நாடித்துடிப்பு நின்று விடுவது போன்று...
நுரையீரல் சுவாசக் குழாயின் நடுவில் அடைப்பை ஏற்படுத்தினால் அடங்கி விடும் சுவாசத் துடிப்பை போன்று...
மண் துளையினை பிளாஸ்டிக் போட்டு மூடிவிடுவதால் .... மண் துவண்டு பாழாய் போய் ... வீணாய் போகும்..
“HELLO ! HELLO! மக்கும்குப்பை ... மக்காத குப்பை .தெரியமா ? மக்கும் குப்பையில் மறுசுழற்சி ... என்றுஉண்டு தெரியுமா? என நீங்கள் கேட்ப்பது புரிகிறது.
“ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது”. நானும் உங்களை மாதிரிதான் தத்துவம் பேசினேன்.இதெல்லாம் கவர்மெண்டு வேளை ஆளை வச்சு தரம் பிரிச்சு உரமாகவும் , மறு சுழற்ச்சி முறையிலே புதிய பொருளாகவும் பாதியை அவுட்டரிலும் எரிச்சுடுவாங்க ... “ என தத்துவம் பேசினவன்.
“சார்! என் மனைவியை பற்றி நான்கு வார்த்தை சொல்லுகிறேன்.please உங்க கமெண்ட கடைசியில் சொலுங்க…”
“அவ எந்த பொருள் வாங்க சென்றாலும் துணிப்பை மட்டும் கொண்டு . செல்வாள். சிறிய பொருள் வாங்க சென்றாலும் ஒரே ஒரு பாலிதீன் பை மட்டுமே கொண்டு செல்வாள், அதுவும் அந்த பையை நாலு வருடமாக பயன்படுத்துகிறாள்.எந்த கடையில் எது வாங்கினாலும் கடைக்காரர் கொடுக்கும் பிளாஸ்டிக் பையை அந்த கடையிலே திரும்ப கொடுத்துவிடுவாள். அனைத்திந்திய அளவில் நடைபெறும் பல் பொருள் கடையிலும் பாலிதீன் பை மறுத்து , பொருட்களை துணிப்பையில் எடுத்து செல்வதுடன் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை நிறுத்த சொல்லி ஆலோசனை வழங்குவாள்”.
நீங்க நினைக்கிற மாதிரி தான் “ சரியான லூச பிடித்து தலையில கட்டி வைச்சுட்டாங்களோ” என நினைத்தேன்.
“பொதுஇடத்திலே லூசு மாதிரி பிகேவ் பண்ணாதே ! ஊரே வாங்குது...இதுல நீ வாங்காட்டி நாடு நல்லாவா ஆயிடும் “
“ அடுத்தவங்கல பற்றி பேசும் முன் நாம் மாறணும் . நாம மாறினால் மட்டும் போதாது, அடுத்தவங்களுக்கு அமைதியாய் புரியவைக்கணும்.”
“ஆமா... ஆமா...கடைக்காரன் உன்னையும் என்னையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறான்.”
“சிரிக்கட்டுமே ... நாலு நாள் சிரிப்பானா , நாலு தடவை பொருள் வாங்கும் போதும் ‘பிளாஸ்டிக் பை வேண்டாம்’ என சொல்லுங்க ..அடுத்து வரும் போது அம்மா தெரியும் பொருளை பேப்பரில் மடித்து தருகிறேன் என்று சொல்லுவதுடன் ‘பிளாஸ்டிக் பை வேண்டாம்’ என்ற சிந்தனை ஏன் ? வராது” .
இது மாதிரி எங்கெல்லாம் பிளாஸ்டிக் பை தருகிறார்களே அங்கெல்லாம் வாங்க மறுத்தாள்.ஆலோசனையும் வழங்கினாள்.என்னையும் இதேப்போல் மாற வலியுறுத்தினாள்.
“ஹாலோ ..ஹாலோ பிளாஸ்டிக் பை வாங்கினா என்ன? அதை குப்பையாய் பொறுக்கி விற்பனை செய்து பிழைப்பவர்கள் எத்தனை பேர் ... மறுசுழற்சி செய்யலாமே ...” என நீங்கள்குரல் வளையை நெறிப்பதைப் போன்று நானும் கேள்விக் கேட்டேன்.
“தயவுசெய்து பைக்கை மெதுவாக ஓட்டுங்க ... வழி எங்கும் பாருங்க ... காலியிடங்களிலும் பாருங்க ...ஓடையிலும் பாருங்க ... வாய்க்காலிலும் பாருங்க ... தெருவேர மண்ணிலும்பாருங்க ... “.
“ஆமா ... எல்லா இடத்திலேயும் பாலிதீன் பை குவியல் .எல்லாம் கிழிந்து மண்ணுக்குள் புதைந்தும் புதையாமலும் ...”
“ இது தான் உங்க கார்பிரேசன் தரம் பிரிக்கிறார்களா ? இந்த பிளாஸ்டிக்குப்பையை குப்பைத் தொட்டியில் கொட்டினால் தான் எடுத்து பிரிப்பாங்களா ? “
வடிவேலு பாணியில் “ஆமால்ல...” என்றேன்.
“ ஒவ்வொரு பாலிதீனும் மண்ணுக்குள் மண்ணாக புதைந்து ஒவ்வொரு வாய்க்காலும் மக்காத பாலீத்தின் குப்பையாலே புதைந்து போய் ..அவை மக்க பல வருடங்களாக ஆவதுடன் , மண் துளையை அடைத்து மழை நீரை மண்ணுக்குள் அனுப்பாமல் ... ஓடு காலில் குப்பையாக சேர்ந்து ... குட்டையாக தேங்கி வியாதி பரப்பும் , நிலத்தடி நீர் மட்டம் குறையும் . மண் வளம் குன்றி போச்சு... விளை நிலம் பாழாய் போச்சு”.
என் மனைவியின் பேச்சு என் இதயத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல இருந்தது.நானும் மாறினேன். எங்கும் பிளாஸ்டிக் பை வாங்குவதை தவிர்த்தேன். எல்லாகடையிலும் ஆலோசனை வழங்கினேன் . என்னால் ஸாரி... என் மனைவியால் என் ஏரியாவில் மூன்று கடைகளில் பிளாஸ்டிக் பை வழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.
“ சார் உங்கள மாதிரி நாலு பேர் மாறினால் போதும் ... இந்த உலகமே சுத்தமாகிடும் .. மழை சரியா பெய்யும் ...”
“சார்.. நல்லா நாலு பேர் காதுல படுகிற மாதிரி சொல்லுங்க சார் .. மண் வளம் காப்போம்... மண் துளை மறிப்பதை தடுப்போம் ..”
“சார் ... பாலிதீன் பை விலை 50 பைசா ... கிடைக்கிற லாபத்தை பாதி இந்த பை வாங்கிறதுலே போயிடுது ... இப்படி எல்லாரும் வேண்டாம் என்றால் ... கூட ஒரு பழம் சேர்த்து தருவேன்... இது எங்க ஜனங்களுக்கு புரியப்போவுது நீ நல்லா இருக்கணும் ய்யா..”
“மாறுங்க சார் மாறுங்க ... மாறி பாருங்க உங்களையும் நாலு பேர் வாழ்த்துவாங்க . நம் சந்ததியும் நம்மை வாழ்த்தும் ... நல்லா வாழும்.’
4 comments:
அற்புதமான கட்டுரை. அனைவைரும் படிக்கவேண்டிய விசயம். தட்டச்சுப்பிழைகளை தவிர்த்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும்.
very good story. I have been doing this for sometime now wherver I can and I will continue do it in all the places now.
Kudoos to you for posting this and special kudoos to your wife for making you post this article.
Velmurugan
VERY GOOD.KEEP IT UP ALL.
சூப்பர் சார்... இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும்.......
Post a Comment