Tuesday, April 7, 2015

குங்குமத்தில் வெளியான கவிதைகள்

16-03-2015 குங்குமத்தில் வெளியான எனது கவிதை

நாய்கள் ஜாக்கிரதை 

பலகை மாட்டிய
வீட்டின் அகண்ட கதவை
மெல்லக் கடந்துவிட்டேன்
நாய் இல்லை என்பது
உறுதியான பின்பும்
குரைக்கும் சத்தம்
கேடுக்கொண்டே இருக்கின்றத்
மனதில் இருக்கும் அச்சத்தை
வெளிப்படுத்தியபடியே...

அந்த மரத்தின் அடியில்
அமர்ந்து தான்
இருவரும்
காதலைப் பரிமாறிக் கொண்டோம்
தூரத்தில் நின்று பார்த்தேன்
அந்த மரமும் அவளும் நானும்
அழகாகத் தெரிந்தோம்
அந்த மரமாக இருந்து
அவளையும் என்னையும் பார்த்தேன்
அவளும் நானும்
இன்னும் அழகாகத் தெரிந்தோம்
இப்போது
இருவருக்குள் இருக்கும்
காதலாக மாறிப் பார்க்க ஆசை...
மரமும் இல்லை
அவளும் இல்லை
நானும் இல்லை
யாரும் அங்கு இல்லை.

மதுரை சரவணன்.

1 comment:

Post a Comment