இப்படி தான் கற்றுக்கொள்ள வேண்டும்...!
சமூகவியல் பாடம்
எப்போதும் நம் வாழ்வோடு தொடர்புடையாதாக அமைந்திருப்பதால், அன்றாட நிகழ்வுகள் மூலம்
நாம் கற்றவற்றை தொடர்பு படுத்தி, ஒப்புமை காண்பதன் மூலம் நினைவில் அழியாமல் பதிந்து
கொள்ள முடியும்.
சாலை விதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை
சாலையில் கடக்கும் போது உற்று நோக்குவதன் மூலமும், நம் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து
கவனிப்பதன் மூலமும், நாம் கற்றவற்றை எளிதில் நினைவுபடுத்தி, அனுபவ அறிவு பெற்று ,
அதனை வளப்படுத்தி கொள்ள முடியும்.
பயிர்கள் , விளையும்
பொருட்கள், நிலவளம், மண் வகைகள் குறித்து குழப்பமில்லா
அறிவு பெற , கிராமத்திலோ அல்லது தாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு
களப்பயணம் செய்வதன் மூலம் நேரடியான அனுபவத்தை பெற்று, எளிதில் நினைவில் வைத்து கொள்வதன் மூலம் , தேர்வு
சமயத்தில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். மாவட்டங்கள், மாநிலங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை
தம் ஊருடன் நேரடி தொடர்பு மூலமாகவும், நம் உறவினர்களின் இருப்பிடங்களுடன் பொருத்தி
பார்ப்பதன் மூலமும் மனதில் நிறுத்தி கொள்ளலாம்.
கிராம சபை,நகராட்சி,
மாநகராட்சி போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக சென்று பார்வையிட்டு, அங்குள்ள
ஊழியர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாம் அதிகமான அறிவை பெற முடியும். அதன் வாயிலாக
தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற முடியும்.
நீர் நிலம் காற்று
மாசுப்பாடு குறித்து தெளிவான அறிவு பெறவும், எளிதில் அதன் பாதிப்புகளை நினைவு படுத்தி கொள்ளவும்,
மாசு குறித்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவை மேம்படுத்தவும் தங்கள் பகுதியிலுள்ள
அல்லது அருகிலுள்ள நதி, ஏரி, குளம், கண்மாய்களை குழுவாக சென்று ஆய்வு மேற்கொண்டு, விவாதிப்பதன்
மூலம் என்றும் நினைவில் நீங்காத அறிவை பெறலாம். அருகிலுள்ள தொழிற்சாலை சென்று பார்வையிடுவதுடன்
அங்கு காணப்படும் மாசுகட்டுப்பாடு குறித்து அத்தொழிற்சாலை பணியாளர்களுடன் நேரடியாக
பேசுவதன் மூலம், எப்போதும் நினைவில் வைத்திருக்கலாம்.
வரலாற்று நிகழ்வுகள்,
ஆட்சி அமைப்புகள், அரசியல் சட்டங்கள் ஆகியவற்றை எளிதில் நினைவு கொள்ள , அருகிலுள்ள
வரலாற்று தளங்களை பார்வையிடுவதன் மூலமும், நேரடியாக அங்கு சென்று அங்கு நிகந்ந்த வரலாற்று
நிகழ்வுகளை அங்குள்ள அரசு அலுவலரிடம் நேரடியாக கேட்பதன் வாயிலாக நாம் வரலாற்று சம்பவங்களை
நினைவில் வைத்து, தேர்வு நேரத்தில் அதிக மதிப்பெண் வாங்கலாம். வரலாற்று கதைகள் வரலாற்று
துணுகுக்கள் செய்திதாள்களில் இருந்து வெட்டி எடுத்து, ஆல்பமாக தயாரித்து நண்பர்களுடன்
பகிர்வதன் மூலம் எளிதில் நினைவுப்படுத்தி கொள்ளலாம்.
வரலாற்று காலங்களை
வருடம் வாரியாக பட்டியல் இட்டு கொள்வதன் மூலமும், அந்த வருடங்களை பிற நிகழ்வுகளுடன்
தொடர்பு படுத்தி கொள்வதன் மூலமும் நாம் நினைவில் வைத்து கொள்ள முடியும். உம். முதன்
முதலில் ரஷ்யா செயற்கைக் கோள் அனுப்பிய ஆண்டு 1975.
அதனை தலைகீழாக நினைவு படுத்தினால், முதன் முதலில் இந்தியா செயற்கைக்கோள் ஆண்டு கிடைக்கும்
1957.
பொதுவாக நாம் சமூகவியல்
பாடத்தினை நேரடியான அனுபவம் பெறுதல் வாயிலாகவும், களப்பயணம் மேற்கொள்வதன் வாயிலாகவும்,
காரண காரியங்களுடன் தொடர்பு படுத்துவதன் மூலமாகவும், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை உற்று
நோக்குவதன் மூலமாகவும் நினைவில் நிறுத்தி கொள்ளலாம்.
க.சரவணன். பி.எஸ்.சி.,எம்.ஏ.,எம்.எட்.,
தலைமையாசிரியர்,
5 comments:
சரி தான் ஆசிரியரே...
நன்றாய் அலசியிருக்கிறீர்கள் சரவணன் சார். நலம் தானே?
நன்றாய் அலசியிருக்கிறீர்கள் சரவணன் சார். நலம் தானே?
நன்றாய் அலசியிருக்கிறீர்கள் சரவணன் சார். நலம் தானே?
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
Post a Comment