இலவச பஸ் கட்டண அட்டை வழங்குவதை தமிழக அரசு ஏன் நிறுத்தக் கூடாது?
இத்தனை நாள் நல்லா தானே எழுதி கொண்டு இருந்த… இப்ப என்ன உனக்கு கொள்ளையில போயிருச்சு என பொது ஜனங்கள் சாடுவது புரிகிறது. அட மானம் கெட்ட மாகா ஜனங்களே என் மீது கோபம் கொள்ளாமல் தயவு செய்து நான் சொல்வதை கேளுங்க…
ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்க வேண்டும் என்பது புதிய கல்வி கொள்கைப் படி அதாவது கட்டாய இலவச கல்வி சட்டம் சரத்து படி உள்ள விசயம். அவர்கள் சட்டம் இயற்றும் முன்பே மாநகராட்சிகளில் தெருவுக்கு ஒரு பள்ளி அமைந்துள்ளது. அதுவும் தினுசு தினுசான போர்டுகளில் ( மெட்ரிக், நர்சரி, தமிழ் வழி, ஆங்கில வழி மத்திய அரசு திட்டம்) என அமைந்துள்ளது இங்கு கவனிக்க பட வேண்டிய ஒன்று.
அண்மையிலுள்ள பள்ளிகளில் கட்டாயம் 25 சதவீதம் இலவசமாக மாணவர்களை எந்த போர்டாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜனத் தொகை குறைவாக உள்ள இக்காலத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உத்தேசமாக ஐம்பது மாணவர்கள் என வைத்துக் கொண்டாலும், அனைவரும் இலவசமாக தான் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும்.
இது இப்படியே இருக்கட்டும் … தனியார் பள்ளிகளில் பேருந்து வைத்துள்ளனர். மாணவர்கள் மாதம் ஐநூறு ரூபாய் கொடுத்து தனியார் பள்ளி பேருந்தில் வருகின்றனர். கட்டாயம் அவர்கள் அப்பள்ளியில் படித்தே ஆகவேண்டும் என பெற்றோர்கள் விரும்புவதால் , பள்ளி பேருந்தில் அவர்கள் அனுப்புகின்றனர்.
கிராமபுறங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி கூட இல்லாத நிலை யுள்ளது என்பது வருத்தத்துக்குரியது. ஆனால் , மக்கள் நினைத்தால் அரசு பள்ளிகளை திறக்க செய்து முறையான பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தப்பட்டால், ஆசிரியர்களிடம் இருந்து நல்ல கல்வியை பெற முடியும்.
அரசு இலவச பஸ் பாஸ் வழங்குவதால், அது மறைமுகமாக தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவுவதாகவே அமையும்
நாம் மனசாட்சியை அடகு வைக்காமல் சொல்வதென்றால், இலவச பஸ் பாஸ் வாங்கிக் கொண்டு அரசு பள்ளியில் பயில்வதும் இல்லை. அதே போல நல்ல உயர்நிலையில் உள்ள பள்ளியிலும் நாம் இலவசமாக கல்வியை பெற்று விடுவதும் இல்லை.
அருகாமை பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் பயில வேண்டும் என்றால், அரசு இலவச பேருந்து கட்டணம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். அருகாமைப்பள்ளிகளில் இலவசமாக மாணவர்களை மெட்ரிக் பள்ளிகள் சேர்க்க வேண்டுமென்றால் , தனியார் பள்ளிகளுக்கும் பேருந்து இயங்க அனுமதி மறுக்கப்படவேண்டும்.
அம்மா மனசு வைத்தால், தமிழகத்தில் கல்வி அரசுடமையாக்கப்படலாம். கல்வி அரசுடமையாக்கப்பட்டு , எந்த வித பேதமின்றி அனைவருக்கும் சமமான., சமத்துவமான , இலவச கல்வி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கனவு நினைவு ஆக முதலில் இலவச பஸ் பாஸ் நிறுத்த வேண்டும்.
8 comments:
அம்மா மனசு வைத்தால், தமிழகத்தில் கல்வி அரசுடமையாக்கப்படலாம். கல்வி அரசுடமையாக்கப்பட்டு , எந்த வித பேதமின்றி அனைவருக்கும் சமமான., சமத்துவமான , இலவச கல்வி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கனவு நினைவு ஆக முதலில் இலவச பஸ் பாஸ் நிறுத்த வேண்டும்.
கசப்பான மருந்துதான ஆயினும்
நல்ல கருத்தை முன்வைத்தமைக்கு மனமார்ந்த நன்றி
உங்கள் எண்ணம் மிக சிறப்பானது.மக்களிடம் அறியாமை எனும் இருள் இருக்கும் வரை இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்காது..நம் ஜனநாய நாட்டில் பண பலமே பிரதான அங்கம் வகிக்கும் கொடுமை நிலை மாறும் வரை..மக்கள் நல திட்டங்களில் வளர்ச்சி நிலை எட்டாது.. பஸ் பாஸ் இலவசம் என்றாலும் அந்த பேருந்து பயணம் இருகிறதே அது(நரக) நகர கொடுமை தான்..உங்கள் எண்ணப்படி நடந்தால் அது ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் விமோசனம் தான்..வாழ்த்துக்கள் நண்பரே..
அன்புடன்
சத்யா
ஹர்யான
அன்பின் சரவணன்,நான் எழுதியது ஏற்ற தாழ்வற்ற, சாதி சமுதாய பேதமில்லாத நிலை உருவாக கல்வி கொண்டு அகக் கண் திறக்கப் பட வேண்டும் , அதுவும் ஏற்ற தாழ்வில்லாத கல்வியாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு அம்மா மனது வைத்தால் போதாது. நம் அரசியல் சாசனப்படி கல்வி CONCURRENT LIST -ல் வருவது.மாநில அரசும் ,மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.எண்ணங்களுக்குச் சக்தி உண்டு என்பது உண்மையானால் நம் கனவு கூடிய சீக்கிரம் பலிக்கலாம். வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு..
உங்கள் கனவு ஒரு நாள் நனவாகும்
வாழ்த்துக்கள்
நல்ல பதிவுக்கு நன்றி !
நல்ல கருத்து சொன்னீர்கள், நடைமுறைக்கு வரவேண்டும் ஆனால் வர விட மாட்டார்கள்.
அன்பு சரவணன், வெர்சடைல் ப்ளாகர் என்னும் விருதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது குறித்த விவரங்களை நாளை
8-2-2012 மாலை என் பதிவில் வெளியிடுகிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
நம்ம ஊரில் சாத்தியமா? சந்தேகந்தான். நல்லது நடந்தா நல்லதுதான். நன்றி.
Post a Comment