”ஒரு வாத்தியாரா இருக்க.. கட்டாயம் நீ பார்க்க வேண்டிய படம் அது நீ பார்க்கலையா…? இப்படி சொல்லியே என்னை ”பள்ளிக் கூடம்” படம் பார்க்க வைத்தனர். இந்த முறை டி.வி .யில் டிரைலரில் விமல் மாணவர்களுக்கு கதை சொல்லும் போது நான் எப்படி இருப்பேன் …. இங்க …. என சொல்லும் போது மாணவி அப்ப பால் வருமா சார் என்று கேட்கும் கிராமத்து வசனத்தை பார்த்த போதே முடிவு செய்து விட்டேன் ..வாகை சூட வா கட்டாயம் பார்த்து விட வேண்டும்.
திரை அரங்கில் சுமாரான கூட்டம் . அதிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஜோடி ஜோடியாக அமர்ந்து இருந்தனர். பரவாயில்லையே இப்படி பட்ட படங்களையும் பார்க்க வந்திருக்கிறார்களே என நினைத்தேன். அப்புறம் என நீங்கள் கேட்பது புரிகிறது. திரையில் படம் போட்டதும் நீங்களே பார்த்து சொல்லுங்க.. அவுங்க வந்திருக்கிற விசயத்தை.
"வா உனக்காக தான் காத்திருக்கிறேன்… "என பயமுறுத்தி ஆரம்பிக்கிறது விமலின் ஆசிரியர் பணி.
செங்கல் சூளை … அதனை நம்பியுள்ள மக்கள், அவர்களின் தினசரி வாழ்க்கை அழகாக படத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆசிரியர் என்றால் அடிப்பார்… அவரின் வீட்டு வேலையை செய்ய வேண்டும் ... என்ற அறுபதுகளில் எண்ணம் திரையில் பளிச்சிடுகிறது. சினிமாதனமான திரைக்கதையுடன் படம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மாணவர்கள் கலாட்டவுடன் வேகமாக படம் நகர்கிறது. தம்பி ராமையா புதிர்கணக்கு போட்டு தன் அசத்தலான நடிப்பை மிகவும் சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். பொன் மணிவண்ணன் தன் நடிப்பை மிகை யில்லாமல் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
கண்டெடுத்தான் காடு என்ற கிராமத்திற்கு தொண்டு நிறுவனம் மூலமாக பாடம் கற்று தரச் செல்லும் விமல் , கிராம மக்களால் வெறுக்கப்படுகிறார், அங்குள்ள மாணவர்களால் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார். அந்த செங்கல் சூளையின் முதலாளி பொன்மணிவண்ணணின் பகையை சுமக்கிறார். இப்படி பட்ட சூழலில் , விமல் அங்குள்ள மாணவர்களுக்கு பாடம் கற்று தந்தாரா.. ? அல்லது விரட்டப்பட்டாரா? என்பது தான் கதை.
ரேடியா ஒரு கேரக்டராக உலா வருகிறது. மாத சம்பளம் வாங்கி கிராமத்தை விட்டு வெளியேற நினைக்கையில் குருவிக்காரன் பேசும் வசனமான… விதைக்கல..அறுக்கிற.. என்ற வசனம் நெஞ்சை வருடுகிறது. பாக்கிய ராஜ் நடிப்பு பிரமாதம். விமல் பாக்கியராஜை விஞ்சிய நடிப்பில் உள்ளார். விமல் முந்தானை முடிச்சு பாக்கியராசை விட அசத்தலாக நடித்துள்ளார். இனியா பாரதி ராஜா சொல்வது போல இன்னொரு ராதிகா தான் நடிப்பில் பிச்சு உதறுகிறார். பெயருக்கேற்ப இனிமையாகவும் இருக்கிறார். ஒரு ரவுண்டு வர வாய்ப்பு உள்ளது.
குழந்தை தொழிலாளர்களை முன் வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் , கல்வி அறிவு இல்லாததால் ஒட்டு மொத்த கிராமமே ஒரு ஆதிக்க சக்தியால் ஏமாற்றப்படுகிறது. அதை தடுக்க , அறியாமையை போக்க கல்வி அவசியம் என சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது. இதை சிறந்த பொழுது போக்கு அம்சங்களுடன் படமாக்கி இருக்கும் இயக்குனர் சற்குணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஜிப்ரான் இசையில் மீன் துள்ளிக் குதிக்கும் பாடல் அருமை. இசை நன்றாக உள்ளது. மொத்தத்தில் நல்ல படம் பார்த்த பாராட்டு கிடைக்கும் குடும்பத்துடன் செல்லும் போது மனைவியிடம் இருந்து.
11 comments:
சமீபத்தில் வந்த படங்களில்
சமூக சிந்தனையுள்ள நல்ல படம்
அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
த.ம 1
நல்ல சமூக சிந்தனையுள்ள படம்
பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருக்கிறீர்கள்,
, நீங்கள்சொன்ன விதம் அருமை மேலும் தொடரட்டும் . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
விமர்சனத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் கருத்துக்கள்.நிஜம்தான்.
எளிமையான அழகான விமர்சனம்.வாழ்த்துக்கள்
வாகை சூடவா குறித்த தங்கள் பகிர்வு அருமை. இது போன்ற நல்ல படங்களின் வெற்றியில் தான் நல்ல தமிழ்திரைப்படங்களின் எதிர்காலம் உள்ளது. நன்றி.
நல்ல படம்..
அருமையாக விமர்சனம்.
-சே.குமார்
தரமான படத்திற்கான தரமான விமர்சனம் ..
இந்த படங்களை ஏனோ மக்கள் மதிப்பதில்லை...
ஒரு மொக்க படத்துக்கு கொடுக்கப்படும் விளம்பரம்
இந்த மாதிரி நல்ல படத்துக்கு கிடைப்பது இல்ல ...
தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)
Post a Comment