Tuesday, September 27, 2011

ஓவியம்



வானம் வகுப்பறைக்குள்…
செடிகளும் மரங்களும்
கண்களுக்கு விருந்தாய்…
வகுப்பறை முழுவதும்
வண்ணத்து பூச்சிகள்
பறந்து வெளிப்படுத்தின
ரகசியங்களை
பிஞ்சுகளின் கரங்களில்
இருந்து…..
ஆசிரியரை தவிர
அனைவரும் சோலைக்குள்…!

3 comments:

கோகுல் said...

சோலைக்குள் சிறையிருப்பதை
சொற்களால் உணர்த்தியுள்ளீர்கள்!
கொஞ்சம் நாளாய் காணோம்?

SURYAJEEVA said...

ஆசிரியர் மீது என்ன கோபமோ?

Unknown said...

பாவம் பிஞ்சுக் கரங்கள்
ஆசிரியர் கையில் கோலிருக்குமோ..?
நன்று நண்ப!

புலவர் சா இராமாநுசம்

Post a Comment