Saturday, March 19, 2011

நேசமித்திரனின் பத்து கட்டளைகள்

      மதுரைக்கு நேசன் மிகவும் நேசமாகிவிட்ட ஒருவர்.  நேசன் வருகையென்றாலே எனக்கு உற்சாகம் பிறக்கும். ”மதுரையில் இருக்கிறேன், மூட்டா ஹால் எங்கு இருக்கிறது?” என்ற அவரின் அழைப்பு ,என்னை ஆகாயத்தில் பறக்க வைத்தது. என் நண்பன் ஸ்ரீ யை அழைத்தேன். தாங்கள் அவருடன் இருக்கவும், நான் வந்து சேர்ந்துக் கொள்கிறேன் என்றார். கவிதை விமர்சனத்தை விட கூடுதல் இலக்கிய விருந்தாகவே அமைந்தது.    நேசனின் கவிதைகள் எனக்கு ஒரு வித வியப்பையும் , ஈப்பையும் ஏற்படுத்தியதற்கு காரணம் , அவரின் கனிவான பேச்சும், அன்பான நட்பும், அவரின் வாசிப்பும் , அதனை நண்பர்களிடம் பகிரும் முறையுமாகும்.

    அவரிடம் எழுத்து வயப்பட்டு ,கட்டுப்பட்டு இருந்தாலும் காட்டாற்று வெள்ளம் போல கவிதைகளில் பெருகிவருவது வியப்பையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த இலக்கிய அரசியலுக்குள்ளும் சிக்காத ஒருவர்.எழுத்தில் அல்லது கவிதையில் நாம் செய்யும் தவறுகளை  தைரியாமாக சுட்டிக்காட்டி திருத்தச் சொல்லுபவர். அவரின் கவிதைகள் எளிய புரிதலை அற்று , கடினமாக இருப்பதும் , புதிய வார்த்தைகளின் சேர்ப்பும் தங்களை கவிதையில் இருந்து தள்ளி நிற்கச் செய்கிறது என்றாலும் , கோபப்படாமல், ஒரு தாயின் பரிவோடு , தன் பிள்ளையின் பெருமையை எடுத்துச் சொல்லும் இயல்பு , அவரை கவிஞர்கள் பலரில் இருந்து மாறுபட்டு ஒரு வித நட்புணர்வை அவரிடம் கொள்ளச் செய்யும்.




தனக்கு ஒரு கவிதை தொகுப்பு வந்து விட்டது என்ற எந்த வித பந்தாவும் இல்லாத மனப்பான்மை, தன்னை இன்னும் செழுமைப்படுத்த வாசிப்பு தேவை என்னும் பணிவும் , தன் இலக்கிய நண்பர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமும், இலக்கிய சந்தேகங்களை போக்கும் விதமும் என அனைத்திலும் அவரின் கவிதைகளைப் போலவே மென்மையாக காணப்படுகிறார். சமீபகாலமாக என் கவிதைகள் தரமானதாக மாறி உயர்தரமான இலக்கிய இதழ்களில் வெளியிட என்ன செய்ய வேண்டும் என்ற உந்துதலுடன் முயற்சி செய்து வரும் எனக்கு அவரின் சந்திப்பு , என்னை செதுக்க ஒரு பட்டறையாக பயன்பட்டது.




நவீன அல்லது மரபு அற்றக் கவிதைக்கு அவர் வகுக்கும் இலக்கணம்

1. கவிதை படித்து முடித்தவுடன் ஒரு வித உணர்வை ஏற்படுத்த வேண்டும்

2.கவிதை செய்தி சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை

3.கவிதையை கடினமான சொற்கள் கொண்டு தான் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை.உங்களுக்கு தெரிந்த,பழகியச் சொற்களைக் கொண்டு எழுதுங்கள்.

4. முதலில் நீங்கள் சொல்ல வரும் விசயத்தை வாக்கியமாக எழுதுங்கள். பின்பு அந்த வாக்கியத்தில் தேவையில்லா இணைப்புச் சொற்களை அகற்றி விடுங்கள். எந்த ஒரு சொல்லை அல்லது வாக்கியத்தை எடுத்தாலும் அதன் அர்த்தம் மாறவில்லை என்று எண்ணிணால் அந்த சொல்லையோ அல்லது வாக்கியத்தையோ அகற்றி விடுங்கள்.

5. கவிதை எதை பற்றியதாகவும் இருக்கலாம். அது காதல், காமம் என இருக்க வேண்டிய கட்டாயமில்லை;

6. கவிதை பன்முகத் தன்மையுடன் அமைந்தால் சாலச் சிறந்தது.

7.கவிதைகளில் நீதி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

8.கவிதையை பிரசுரிக்கும் முன் அதனை பலமுறை படித்து உங்களுக்குள் ஊறப்போட்டு , அதனை மொருகேற்றி , ஒரு தாய் தன் குழந்தையை சுமப்பது போல உங்களுக்குள்ளே சுமக்கப் பழகிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு வித பீல் கிடைத்தவுடன் வெளியிடுங்கள்

9.பலரின் கவிதைகளை படியுங்கள் . அதில் கையாளப்படும் உத்திகளை மனதில் கொள்ளவும் . எக் காரணம் கொண்டும் காப்பி அடிக்க கூடாது.மாறுபட்ட கோணத்தில் சிந்தியுங்கள். ஒரு விசயத்தை அவர் ஒன்றால் வகுத்தால் , நீங்கள்  அதில் இருந்து விலகி காரணங்களை வரிசைபடுத்தி , வேறு ஒரு எண்ணால் வகுக்க பழகுங்கள்

10.நீங்கள் எழுதுவது தான் சரியென நினைத்து , எவரையும் பற்றி கவலைப்படாமல் எழுதுங்கள். கவிதை வசப்படும் .


தாகம் சந்திப்பில் உணவு இடைவேளையில் என்னுடன் பகிர்ந்து கொண்ட விசயம் . என் மரத்தடி பாடம் கவிதையை பார்த்து விட்டு உங்களின் எழுத்து மேன்மைப்பட்டுள்ளது , ஆனால் இன்னும் கவிதை தன்மை பெறவில்லை. அதற்கான பீல் -லை உருவாக்குங்கள். நீங்களும் விரைவில் ஒரு கவிதை தொகுப்பு போடலாம். அதற்கான உழைப்புக்கு தயாராகுங்கள் விரைவில் கவிதை வசப்படும் என்று சொன்னதுடன் அல்லாமல் மரத்தடிப்பாடம் என்ற தலைப்பில் உடனே ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்தக் கவிதை இதோ ...


மரத்தடி நிழலில்
கார்டூன் சித்திரமாய்
நீள்கிறது வயது குறைந்து
சேர்க்கப்பட்ட் சிறுமியின்
சிறுநீர்குடை.
அண்டைச் சிறுவனுக்கு
இடிக்காமல் சிலேட்டை
பிடித்தெழுதக் கூடவில்லை
பார்த்தப்படி நகரும்
பியூன் தாத்தா நீர் பெய்ய
போகிறார் புதிய
கட்டிடத்திற்கு...
இருமருங்கும் பார்த்தப்படி

இது நேசன் கவிதை மேல் கொண்டிருக்கும் அளவில்லா காதலால் ஏற்பட்ட விளைவு என்பதை விட அவரின் வாசிப்பின் ஆழத்தில் அளவாகவே எடுத்துக் கொள்கிறேன். வாசிங்க மக்கா..சுவாசிங்க வாசிப்பை.. எல்லாம் உங்கள் வசப்படும். நன்றியுடன் நேசனை வாழ்த்துவோம். 

14 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நேசன் கட்டுரை அருமை...

ஹேமா said...

அதிஷ்டக்காரர் நீங்கள் !

ஊரான் said...

கவிதை மீதான தங்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். வளர வாழ்த்துக்கள்!

"கவிதை செய்தி சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை"
செய்தி (message) இல்லாமல் எதுவும் இல்லையே. சற்றே சிந்திக்கவும்.

Rathnavel Natarajan said...

நல்ல செய்திகள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மதுரை
துரை

ரை............ய்

Kandumany Veluppillai Rudra said...

"கற்றாரை கற்றாரே காமுறுவர்"

Paleo God said...

அதென்னமோ சரவணன் என்ற பெயருக்கும் நேசனுக்கும் அவ்ளோ ராசி போல! :))

நானும் சென்னையில் அவருடன் செலவிட்ட ஒரு நாளை மறக்க முடியாது!


டிஸ்கி:
11 ஆவது கட்டளையா நேசனை சைட்லேர்ந்து போட்டோ எடுப்பதை தவிர்க்கவும்! :))

நேசமித்ரன் said...

11 ஆவது கட்டளையா நேசனை சைட்லேர்ந்து போட்டோ எடுப்பதை தவிர்க்கவும்! :)) //


ப்ளீஸ்....! ரொம்பக் கேவலமா இருக்குங்க .எடுத்திருங்க

shanmugavel said...

இலக்கணங்கள் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

pichaikaaran said...

மிக சிறப்பாக இருந்தது

Yaathoramani.blogspot.com said...

மரபு மற்றும் மரபற்ற கவிதைகளுக்கான இலக்கணம்
மிக எளிமை மிக அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

நேசமித்ரன் அவர்களுக்கும்
தாங்களும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அண்ரைய தினம் நல்லதொரு சந்திப்பினைத் தவற விட்டு விட்டேன். வருந்துகிறேன். அவர் வலைச்சர மேம்பாட்டிற்கும் சில ஆலோசனைகள் கூறி உள்ளார். செயல் படுத்த சிந்திப்போம். நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா

CS. Mohan Kumar said...

கவிதை எழுத பயன்படும் நல்ல கருத்துகள் சொல்லியிருக்கிறார் நேசன். பிறருக்கும் பகிர்ந்தமைக்கு உங்களுக்கும் வாழ்த்துகள் சரவணன்

Post a Comment