வயது குறைந்த
சிறுமியின் கற்றல்
கூண்டுக்குள்
சிறகுகள் வெட்டப்பட்ட
பறவையாய்
பற்ற இயலா விரல்களில்
சுண்ணக் கட்டிகள்
உதடுகளை வண்ணமாக்குகின்றன
வகுப்பறைச் சுவற்றில்
வரையப்பட்ட கார்டூன் சித்திரங்கள்
நிஜங்களாய்
வகுப்பறை முழுவதும் சிதறிக்கிடக்கின்றன
சிறுநீர் கழித்து அழுகிறது
வடிவமுறக் காத்திருக்கும்
களிமண் பொம்மை ....
பள்ளியின்
பிரதான வாயிலில்
காத்திருக்கிறாள் அம்மா..!
12 comments:
நல்லாயிருக்கு சார்.
சான்சே இல்லை,.. அருமை
அழகான கவிதை இன்று நாமெல்லாம் ஓவ்வாத கல்வியின் பின் ஓடுகிறோம்
குழந்தைகள் குழந்தைத்தனத்தை இழந்துதானே வருகிறார்கள் !
நல்ல கவிதை. ஆனால் இரண்டு வயதில் பள்ளியில் கொண்டு போய் தள்ளி விடுகிறார்கள். பாவமாக இருக்கிறது.
நன்றி.
அருமையான கவிதை...நல்ல கருத்தை உள்ளடக்கியுள்ளது.
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
நிதர்சனக் கவிதை சரவணன்!
சொல்லிப் புரிவதை விட சொல்லாமல் விடுவதே அதிகம். புரிதல் அவரவர் பாடு.
நல்ல மாற்றம் தெரிகிறது, இப்பொழுதெல்லாம். :) வாழ்த்துகள் அண்ணே !
(நேசன் அண்ணன் என்ன சொன்னாரோ!)
நல்ல கருத்தான கவிதை. இவ்வளவு சீக்க்ரமே அந்தபிஞ்சுகளை நசுக்கனுமா?
சுண்ணக் கட்டிகள்
உதடுகளை வண்ணமாக்குகின்றன
kulanthaikkurumbu....
Post a Comment