Wednesday, March 16, 2011

சைக்கிள்

இறுகப் பற்றிய 
கரங்களில் 
ஹேன்ட்பார்...  
சாய்கிறது 
சரியாகத் தான் 
பிடித்திருந்தாள்  
இருப்பினும் சாய்கிறது...
சைக்கிள் வாங்கிக்
கொடுத்த தாத்தாவின் 
கரங்களில் பைபிள் 
சாய்கிறது 
நிமிர்கிறது 
பாதையிலிருந்து 
விலகியும் விலகாமலும் 
வளைந்தும் நெளிந்தும்
பைபிளின் பக்கங்களை 
புரட்டியவாறு 
தாத்தா நிமிர்ந்து பார்கிறார் 
பயம் விலகி 
கொஞ்சம் கொஞ்சமாய் 
அழுத்திய பெடல் 
பறக்கிறது 
காற்றை கிழித்து 
ஆகாயம் தாண்டி...
மேடு பள்ளங்களில் 
மணல் வீதிகளில் 
செம்மண் சாலைகளில் 
தார் ரோடுகளில் ...
சைக்கிள் விடுமுறைகளை 
தனதாக்கிக் கொண்டது 
தாத்தாவின் சர்ச்சை போல்... 
சைக்கிள் சுமக்கிறது 
பள்ளி செல்லும் 
அவளின் பையை 
புல்லுக் கட்டை 
தண்ணீர்க் குடத்தை 
தங்கச்சி பாப்பாவை ...

நினைவுகளிலிருந்து 
விலகி 
மகளின் ஸ்கூட்டியை 
துடைத்துக் கொண்டிருக்கிறாள் 
அம்மா ...

10 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒவ்வொரு வரிகளும் அருமை தலைவரே...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், புதியன புகுதலும், பழையன கழிதலும் இயல்பு என்பது போல கவிதையினைப் படைத்துள்ளீர்கள். அதுவும் புதிய ஸ்கூட்டியினூடாக இன்றைய கால கட்டத்தில் அம்மாக்களால் தான் சைக்கிளை நினைத்துப் பார்க்க முடிகிறது. கவிதை பழமையினதும், புதுமையினதும் நிகழ்வுகளைக் கலந்த கலவை.

ஹேமா said...

வறுமை துடைத்த ஏழைத்தாயின் பெருமூச்சாக இந்தக் கவிதை.வார்த்தைகளைச் சேர்த்த விதம் அழகு !

Yaathoramani.blogspot.com said...

இறுதி வரிகள் கவிதையை
மீண்டும் மீண்டும் படிக்கச் செய்துப் போகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

அமைதி அப்பா said...

மிக நன்று.

அமைதி அப்பா said...

தேர்தல் முடிவு அறிய ஆவலா? மே'13 வரை காத்திருக்கத் தேவையில்லை.
அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

கலக்கிட்டீங்க

jayakumar said...

aha arumai saravanan...congrats...

G.M Balasubramaniam said...

நினைவுகளின் வேகத்தை வாயு வேகம் மனோ வேகம் என்பார்கள் அதுதான் இந்த சைக்கிளின் வேகமோ.?வாழ்த்துக்கள்.

www.eraaedwin.com said...

அருமையான பதிவு சந்திரன்.

Post a Comment