வானத்தையே கூரைகளாக்கி
ஆல மரக் கிளையிலாடும்
குரங்குகளை துணையாக்கி
தாவி ஓடும் மனம்
ஆசான் கையில் குச்சி
ஆசான் கையில் குச்சி
ஒடுக்கியது
இலைகளின் ஊடே பரவி
சுடும் வெயில்
உரைத்தது
மரத்தடிப் பாடம் ...
எலும்புக் கூடாய்
நினைவுகளை தாங்கி
பராமரிப்பு அற்று
பெற்றோரை போல
பழைய வகுப்பறை
ஏக்கங்களுடன்
மாணவர்கள் ...
அணில்கள் ஓடி விளையாண்டு
மரத்திலிருந்து
தொப் என்று விழுந்தன
அனைவர் கவனமும்
சிதறாமல்
அப்போது தான்
வகுப்பறை உயிரோட்டமாய்....
மரம் அசைந்தது
கரும்பலகை கணக்கும்
கண்கள் சொருகின
குறிப்பேடுகள்
மை கொண்டு
நிறமாகின
குறியீடுகள்
முக்கியத்துவம்
உணர்ந்த மாணவர்கள்
உதிந்த இலைகளை
உருவமாக்கி
மண் துகள் படிந்த
கரங்களுடன்
இப்படித்தான்
நடக்கிறது
மரத்தடிப் பாடம்
11 comments:
//அணில்கள் ஓடி விளையாண்டு
மரத்திலிருந்து
தொப் என்று விழுந்தன
அனைவர் கவனமும்
சிதறாமல்
அப்போது தான்
வகுப்பறை உயிரோட்டமாய்....//
பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டது கவிதை.
very nice.. :-)
தொடரும் கவிதைகள்... அருமை.
எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
நல்ல கவிதை.சரவணன்.வாழ்த்தூக்கள்.
கவிதை அருமை நண்பா
ஏற்றைய இன்றைய நிலைமை நாளை மாறுமோ!
மரத்தடி பாடம் பற்றி படிக்கும்போதே சுவாரசியமா இருக்கு.
nice poem
கடந்த காலக் கோலங்கள்-இது
கண்ணுள் மறையாக் காலங்கள்
சிறுவனாக இருந்த போது-சேர்த்த
சிறந்த அறிவுச் சித்தாந்தங்கள்.
பாடம் நடப்பது மரத்தடி என்றாலும் மனசு நிறைகிறது..
இன்றுதான் உங்கள் பக்கம் வந்து பார்வையிடுகிறேன்.உடனே என் கண்களில் எதிர்கொண்டது உங்கள் மரத்தடி வகுப்பறை.நானும் அனுபவித்தவள் என்ற ஆர்வத்திலேயே முதலில் இதை படித்தௌ ரசித்தேன்.
அப்படியே என் நினைவுகளை நான்காம்,ஐந்தாம் வகுப்புக்கு என்னை கொண்டு சென்று விட்டது உங்கள் வரிகள்.(அதுவரை தான் நான் கிராம பள்ளியில் படித்தேனாக்கும்.)
மிகவும் நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் சகோதரரே...
அன்புடன்,
அப்சரா.
மரத்தடிப் பாடம் இனிமையாக உள்ளது.
Post a Comment