Thursday, March 10, 2011

அலுவலகம் இயங்கியது...!


ஜன்னல் இடுக்குகளில் 
புகுந்து 
இருள் விரட்ட 
கைகளை நீட்டினான் 
கதிரவன்  
அலுவலகத்தில் இருள்
அப்படியே இருந்தது
நீட்டிய கரங்களினால் ...


குவிக்கப்பட்ட கோப்புகள் 
நீட்டப்பட்ட கைகள் 
கவர்கள் 
நகர்ந்தின பைல்கள் 
அலுவலகம் இயங்கியது ..!

பிரசவம் 
சுகமாகத்தான் 
முடிந்திருக்கும்...
கவர்கள் 
கிழிக்கப்படாததால்
கிழிக்கப்பட்டு 
வந்தது சிசு ...

வெட்டப்பட்ட மரம் 
வறண்ட கண்மாய் 
வாட்டும் வெயில்            
இடம்  பெயருகிறான்   
நகரமாதலில் 
வெட்டப்படுகிறது 
தொடர்ந்து மரம் ....!




5 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! கொஞ்ச நாளா கவிதை அருவியா கொட்டுறீங்களே... அருமை...

எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

Chitra said...

ஜன்னல் இடுக்குகளில்
புகுந்து
இருள் விரட்ட
கைகளை நீட்டினான்
கதிரவன்
அலுவலகத்தில் இருள்
அப்படியே இருந்தது
நீட்டிய கரங்களினால் ...


....excellent!

ம.தி.சுதா said...

ஃஃஃஃவெட்டப்பட்ட மரம்
வறண்ட கண்மாய்
வாட்டும் வெயில் ஃஃஃஃ

அருமையாக இருக்கிறது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை கவிதை அருமை அருமை...

Unknown said...

ம்ம்ம்... சூப்பரா இருக்குங்க வரிகள்..

Post a Comment