மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம் என்றார்கள்
வளர்த்தேன் ....
ஒன்றே போதும் என்றார்கள்
அப்படியே
வளர்ந்த பின் தான் தெரிகிறது ...
வம்பு வளர்த்தான் அயலான்
இலை உதிர்ந்து குப்பையாகிறதென்று...
வெட்டு வெட்டு என்றான்
எதிர்வீட்டுக்காரன் கத்தினான்
வயர் தட்டுகிறதென்று....
வெட்டு வெட்டு என்றான்
எச்சமிட்ட பறவையை
எறிந்தான் கல்லால்
பாதாசாரி
நொறுங்கியது
என்னோடு ....
எட்டிப்பார்த்தேன்
தெருவை
வெறிச்சோடி இருந்தது
மரங்கள் அற்ற வீடுகளை போல ...
ஆடுகளும் மாடுகளும்
மரநிழலில்
காற்றில் அசைந்து
கிளைத்தாவி கிசுகிசுக்கும்
இலைகளின் மொழியில் மயங்கி...
சனியன் பிடிச்ச மரத்தை வெட்டுங்க
தெருவின் கடைசி வீட்டுக் காரன்
ஹரன் காது சவ்வு கிழிய
மாடு நகர்ந்து தொலைய மாட்டேங்கிது...
நித்தம் பிரச்சனைகள்
அத்தனையும் இருந்தும்
மரம்
இலை உதிர்த்தது
இலை தளிர்த்தது
பூ பூத்தது
காய் காய்த்தது
பழம் பழுத்தது
கிளை ஒடிந்தது
கிளை விட்டது
ஆனால்
என் வீதி மட்டும்
அப்படியே....
14 comments:
சில மனங்கள் மரம் மாதிரி இருப்பது தான் பிரச்சனை ..வாழ்த்துக்கள் :)
அருமையான கவிதை நண்பா.. அதுவும் தலைகீழாகப் போடப்பட்ட அந்த மரத்தின் படமும் ஒரு குட்டிக் கவிதை..
மனிதனுக்கு எதிலும் நாட்டம் இல்லை, தன்னையும் கூட நேசிக்க நேரம் இல்லை... என்ன செய்ய..
சிறப்பான கவிதை சரவணன்
ஒன்றே போதும் என்றார்கள்
அப்படியே
வளர்ந்த பின் தான் தெரிகிறது ...
வம்பு வளர்த்தான் அயலான்
இலை உதிர்ந்து குப்பையாகிறதென்று...
.....சொல்ல வந்த கருத்தை, இந்த சில வரிகளிலேயே நச்னு சொல்லிடீங்க.
வணக்கம் சகோதரம், இயற்கையின் மீதுள்ள ஈடுபாட்டை கவிதையின் முதல் பந்தியில் அழகாய் தூவியுள்ள நீங்கள், அடுத்த பந்தியில் மிகவும் அழகாக மரம் வளர்ப்பதால் வரும் விளைவுகளையும் மனதில் படும்படி கவிதையாக்கியுள்ளீர்கள், கவிதை இயற்கையினைக் காக்க இன்னல்களை எதிர் நோக்கும் ஒரு மானிடனின் உள்ளத்து உணர்வாய் வெளிப்பட்டு நிற்கிறது.
மரத்துவிட்ட மனிதனின் மனம் மரத்தின் உணர்வை எப்படி மதிக்கும் !
**வெறிச்சோடி இருந்தது
மரங்கள் அற்ற வீடுகளை போல ...**
நல்லவேளை எங்க வீட்டிலெல்லாம் மரங்கள் இருக்கின்றன.
நீங்க என்ன கண்ணா பின்னானு கவிதை எழுதுறீங்க? உங்களைப் பார்த்தால் கவிஞர் மாதிரி எனக்கு தோனலை :)
வருண் அவர்களே! மதுரை சரவணன் கவிஞர் மட்டுமல்ல.... ஆல் இன் ஆல் அழகுராஜா... அண்ணே! கவிதை அருமை....
நித்தம் பிரச்சனைகள்
அத்தனையும் இருந்தும்
மரம்
இலை உதிர்த்தது
இலை தளிர்த்தது
பூ பூத்தது
காய் காய்த்தது
பழம் பழுத்தது
கிளை ஒடிந்தது
கிளை விட்டது கவிதை அருமை...
sir really superb..............
பல சமூகத்தின்உண்மை நிலையை கவிதை வரிகளில் அழகாக சொல்லி இருக்கிறிங்கள் வாழ்த்துக்கள் ..
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_5363.html
அருமையா இருக்குங்க...
உங்களின் இந்தக்கவிதை மிகவும் அருமை. ரசித்துப்படித்தேன். உண்மையை உண்மையாய் அழகாகச் செதுக்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
very nice "kavithayum karpanaiyum"
Post a Comment