Wednesday, March 2, 2011

திருட்டு

முன்னோக்கி அணுகும் போது
விலகிச்  செல்லும்  சாலையாய்  
மரங்கள் உதிர்க்கும் இலைகளாய் 
நீ ....
துளிர்விடும் இலைகளை போல் 
உன் புன்னகை அமையும் என 
வேர்களின் வழியாக ஊடுருவி 
உன்னை அணுகும் போது 
ஆவியாகி அனுப்புகிறாய்   
பாவியாய் காத்திருக்கிறேன் ....
இருந்தும் இல்லாமலும் இருக்கிறேன் 
கோடையின் பகலில் வீசும் காற்றாய் 
உன் பார்வை  
இரவினில் மூட மறுக்கும் இமைகளுக்கு 
வானத்தின் நட்ச்சத்திரங்களாய் ஜொலிக்கிறாய் 
மூட மறந்த கதவுகள் 
திருட கொடுத்தது பொருளை மட்டுமல்ல 
வாழ்வையும் சேர்த்தே...         

13 comments:

Anonymous said...

முன்னோக்கி அணுகும் போது
விலகிச் செல்லும் சாலையாய்
மரங்கள் உதிர்க்கும் இலைகளாய்
நீ ....
vaalthukal...

Chitra said...

மூட மறந்த கதவுகள்
திருட கொடுத்தது பொருளை மட்டுமல்ல
வாழ்வையும் சேர்த்தே...


....நல்லா எழுதி இருக்கீங்க.

தூயவனின் அடிமை said...

கோடையின் பகலில் வீசும் காற்றாய்
உன் பார்வை


நல்ல வரிகள்.

ஹேமா said...

அன்புத் திருட்டுத்தானே.திருடு போவதும் சந்தோஷம்தான் !

அரசூரான் said...

//மூட மறந்த கதவுகள்
திருட கொடுத்தது பொருளை மட்டுமல்ல
வாழ்வையும் சேர்த்தே... //

முழுவதும் திருட்டு போயிற்றே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவிதை சூப்பர் தலைவரே!

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

shanmugavel said...

நல்ல கவிதை சரவணன்.

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றகாவுள்ளது நண்பா

MANO நாஞ்சில் மனோ said...

//மூட மறந்த கதவுகள்
திருட கொடுத்தது பொருளை மட்டுமல்ல
வாழ்வையும் சேர்த்தே...//

அருமையான டச்சிங் வரிகள்.
கலக்கல்...

எவனோ ஒருவன் said...

enna solla varingannu enakku puriyala sir...
enaku kavithaigal purinthugolvathu kadinamaga agikondirathu. sila natkalaga.

athanal kavithai ethagaiyathu enru solla iyalavillai

G.M Balasubramaniam said...

WHAT YOU TRY TO CONVEY SHOULD NOT HAVE ANY AMBIGUITIES,SARAVANAN. SOME OF THE LINES I ENJOYED. IN SOME BEAUTY IS PREFERED TO SUBSTANCE. I DONT KNOW WHETHER I AM TAKING LIBERTIES WHEN I GIVE MY VIEWS.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

முன்னேற்றம் நல்லாத் தெரியுது.வாழ்த்துகள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கவிதை.

Post a Comment