Tuesday, March 1, 2011

பூத்தலின் பூவமை நன்று

பூத்தலின்  
     குழந்தைகள் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும்.  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பெருகிவரும் இவ்வுலகில் ,இத் தொழில் நுட்பங்கள்  பாலியல் சார்ந்த தவறான கருத்துக்களை  கொஞ்சம் கொஞ்சமாக முதல் வகுப்பில் காலடி வைக்கும் போதே தொலைக்காட்சிகள் அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. ஆசிரியர்களின் தொடர்ந்த கவனிப்பும் , அன்பும் , கனிவான பேச்சும் மட்டுமே அவர்களை ஒழுக்க நிலைக்கு மாற்றக் கற்றுத்தருகிறது. 

        இன்று 'ஐ லவ் யு செல்லம்' என்பது காதலை குறிக்கும் தவறான வார்த்தை என்றாகி விட்டது. ஒன்றாவது குழந்தை டீச்சர் இவன் என்னைப் பார்த்து ஐ லவ் யு சொல்கிறான் என்று தவறான உணர்வுடன் தவறான கண்ணோட்டத்தில் குறை கூறும் போது மனம் பதை பதைக்கிறது. ஆங்கில வழிக் கல்வி முறையில் இது எப்படியோ தெரியவில்லை,  இருப்பினும் வீட்டுக்கருகில் வளரும் குழந்தைகளை காணும் போது அவர்களுக்கும் அப்படியே லவ் என்ற வார்த்தையை காதலை குறிக்கும் சொல்லாகவே உணர்வதாக உணருகிறேன். 

         திரைப் படங்கள் தொலைகாட்சி வழியாக வந்து நித்தம் குழந்தைகளை சீரழிக்கின்றன.திரைப் பாடல்கள் அனைத்தும் காட்சி படுத்தும் போது காமம் கலந்த காதலாக வருவதால் ஆணும் , பெண்ணும் சேர்ந்து பேசுவதும் காதலாகவே படுகிறது. இளம் வயதில் அவர்கள் தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் சிக்குண்டு மீளமுடியாமல் தவிக்கின்றனர். தன்னுடன் பயிலும் மாணவிகளை தன்னை அறியாமல் கனவுலக மாயையினால் சிரித்துப் பேசுவது என்பதும் காதலாகத்  தான்  படுகிறது. மேலும் பல மாணவர்கள் "சார், அவன் பெம்பாலப் பசங்க கூட பேசுறான், அவன கண்டிச்சு வையுங்க சார்",என்று சொல்லும் போது நமக்கு பயமாகத்தான் இருக்கிறது.  ஆசிரியர்கள் இவர்களை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் பாத்ரூம் செல்ல வெளியில் நகரும் சமயத்தில் நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்ல மாளாது. 

      பெற்றோர்களும் தங்கள் பங்கிற்கு "டேய் , டீச்சர் கிட்ட மட்டும் உட்கார்ந்துக்க .. எந்த பொம்பள பிள்ளை கிட்டையும் சேரக்கூடாது" என்று அச்சுறுத்துவது அவர்களுக்கு எதையோ தூண்டுவதுப் போலாகிவிடுகிறது.பத்துக்கு பத்து அறைகளையே வீடுகாளாக கொண்டுள்ள பல குடும்பங்களின் குழந்தைகள் , ஆசிரியர் அல்லாத சமயங்களில் தங்கள் பிறப்பு உறுப்புக்களை பிடித்து விளையாட ஆரம்பிக்கிறார்கள். அதனை பார்க்கும் பலரும் கெட்டுப்போக சந்தர்ப்பம் உள்ளது. 
  
    இன்று வகுப்பறைகள் மாணவர்களை சார்ந்து அவர்களுக்கு பிடிக்கும் விதமாக உள்ளதால், நான் மேலே குறிப்பிட்டுள்ள சேட்டைகள் குறைந்து உள்ளன. மாணவர்களுக்கு பிடித்த படம் வரைதல், பொம்மைகள் செய்தல், காகிதத்தில் கலைப்பொருட்கள் செய்தல் , பொம்மலாட்டம் , கதை புத்தகம் படித்தல் ,உள் விளையாட்டு, வெளி விளையாட்டு என மாற்றப் பட்டுள்ளதால் , பால் உணர்வு சார்ந்த எண்ணங்கள் எழாமல் , நன்முறையில் பாடங்களை படிக்கின்றனர். இருப்பினும் ஆசிரியர் கவனம் சிதறும் பட்சத்தில் அல்லது செயல் வழிக் கற்றல்   முறையிலிருந்து மாறி பழைய முறைகளில் பாடம் கற்பிக்கும் போது இத்தவறுகள் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. 

      இன்று மூன்றாம் வகுப்பிலேயே பெண் குழந்தைகள் பூப் பெய்துகின்றனர். எங்கள் பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் வயதிற்கு வந்துள்ளனர்.  இவர்கள் ஆண் , பெண் உறவுகளை உணரும் முன்னே ஒரு வித கனவுலகில், பாலியல் குறித்த விழிப்புணர்வு பெறாமலே பெரிய மனுஷிகளாக உலாவருவதால், பல சந்தர்பங்களில் தவறான முறையில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதை விட வளர்ந்து விடுகிறார்கள் என்பதே உண்மை. இவர்களை ஆசிரியர்கள் மட்டமே திருத்த முடியும்.  

      எங்கள் பள்ளியில் பயிலும் மாணவியை,அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் வயதுக்கு வந்த பெண் (பள்ளியில் அல்ல, அவர்கள் வீட்டுப்பக்கத்தில் ) அவளது பிறப்புறுப்பில் கை வைத்து தவறாக நடக்க சொல்லியிருக்கிறாள். இது எப்படியோ மாணவிகள் மூலமாக ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு தெரிய வர , அம் மாணவி அவரால் எச்சரிக்கப் பட்டு , தவறை திருத்தியுள்ளார். மேலும் அவர்கள் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை படுத்தியுள்ளார். ஆனால் , அவர்களின் பெற்றோர்கள் இதை நம்பாமல் ஆசிரியரை, "என் பிள்ளையை  அப்படி தப்பா சொல்லாதீங்க டீச்சர் , மத்த பிள்ளைக மாதிரி என் பிள்ளை கிடையாது ... வேறு எந்த பிள்ளையாவது செய்து இருக்கும் என்று சண்டைக்கு வர ..." விஷயம் என் காதுகளுக்கு கசிந்தது.    

      இவை எப்படி சாத்தியம்... குழந்தைகளுக்கு அதுவும் மூன்றாம் வகுப்பிலே செக்ஸ் பம்பந்தாமாக அதாவது தாம்பத்தியம் சந்தமாக தவறான புரிதலை ஏற்படுத்தி வைத்து , தங்கள் இளமையை சீரழிக்க வாய்ப்பு உள்ளது . அரசு இதனை கவனத்தில் கொண்டு துவக்க பள்ளியளவில் பாலியல் கல்வி கொண்டு வர வேண்டும் . துவக்க பள்ளியில் கட்டாயம் ஒரு மன நல மருத்துவரை நியமிக்க வேண்டும் . வாரம் ஒரு முறை அனைத்து மாணவர்களையும் அழைத்து பேச வேண்டும். மேலும் இது போன்ற சேட்டை செய்யும் மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் தரவேண்டும். பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் தர வேண்டும்.  

      தகவல் தொழில் நுட்பம் தொலைக்காட்சி , சினிமா அளவில் இவ்வளவு பாதிப்பு என்றால் இன்டர் நெட் பார்க்கும் குழந்தைகளை பற்றி சொல்ல வேண்டுமா... ? கனத்த மனதுடன் இதை முடிக்கிறேன்.ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன. இத் தொழில் புரட்சி பூத்தலின் பூவமை நன்று என்றே படுகிறது. 

10 comments:

சுதர்ஷன் said...

//அச்சுறுத்துவது அவர்களுக்கு எதையோ தூண்டுவதுப் போலாகிவிடுகிறது//

மிக முக்கியமான பதிவு .. இந்த கலாச்சார காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு கலாச்சாரத்தை கெடுப்பவர்களுக்கு முக்கியமான பதிவு .வாழ்த்துக்கள் .:)

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

//அச்சுறுத்துவது அவர்களுக்கு எதையோ தூண்டுவதுப் போலாகிவிடுகிறது//


உண்மைதான்.
பயனுள்ள விழிப்புணர்வான பதிவு

Chitra said...

இருப்பினும் ஆசிரியர் கவனம் சிதறும் பட்சத்தில் அல்லது செயல் வழிக் கற்றல் முறையிலிருந்து மாறி பழைய முறைகளில் பாடம் கற்பிக்கும் போது இத்தவறுகள் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன.


......சரியான புரிதலுடன் கூடிய விழிப்புணர்வு பதிவு.

Dinesh said...

பதிவு நன்றாக இருக்கிறது.

பாலியல் கல்வியின் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எவனோ ஒருவன் said...

சார் , நீங்க சொல்றது ரொம்ப சரி.
ஒரு ஆய்வு சொல்வது என்னவென்றால் விடலை பருவம் வருவதற்கு முன் எல்லா குழந்தைகளும் எதிர் பால் குழந்தைகளுடன் முதமிடுவதுமாக உறுப்புகளை தொட்டுப்பார்த்து இன்பம் கொள்ளவும் செய்கின்றனர்.
பலர் அதை மறந்துவிடுங்கின்றனர் , பலர் மறுக்கின்றனர். வயது ஏற ஏற சமூகம் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை ஒரு அமைப்புக்குள் கொண்டு வருகிறது. மனப்பக்குவம் இல்லா சந்தர்ப்பங்களில் தவறுகள் நடக்கின்றது.
இதற்கு தீர்வு நீங்கள் சொல்வது குழந்தைகளின் கவனத்தை திருப்ப வேண்டுமே தவிர கண்டித்தல் அவர்களை மேலும் அப்படியே அந்த விஷயத்தில் என்னதான் இருக்கிறது செய்ய தோன்றும்.
செக்ஸ் கல்வி, உளவியல் பயிற்சி போன்றவற்றை தகுந்த நேரத்தில் அளித்தால் நல்ல சிந்தையுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும் நம்பறேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! கண்டிப்பா இன்றைய தலைமுறைக்கு அந்த விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வு தேவை....

மோகன்ஜி said...

கனமான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.. இது பற்றி அனைவருமே சிந்திக்கவேண்டும். குறிப்பாக பெற்றோருக்கு இந்த விவகாரத்தைக் கையாளும் முறைகள் தெரியப் படுத்தப் படவேண்டும். அத்துணைப் பெற்றோரும் படித்தவர்களாய் இருக்க வாய்ப்பில்லை அல்லவா? அதற்கான ஏற்பாடுகள் பள்ளிகள் வழியாக அரசாங்கம் செய்ய வேண்டும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த் இது ஒரு நல்ல பதிவு. தொடருட்டும் தங்கள் எழுத்துப் பணி. வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

விழிப்புணர்வு தரும் பகிர்வு... மிக்க நன்றி.

தங்கள் வலைப்பூவுக்கு லிங்க் பேரண்ட்ஸ் கிளப்பில் கொடுக்கிறேன்.

cheena (சீனா) said...

ஓஓ - இக்கால ஆசிரியர்களீன் பொறுப்பு அதிகரிக்கிறதோ ? அதுவும் துவக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ம்ம்ம்ம்ம் - பணிச்சுமை அதிகரிக்கும் போது பொறுமை குறையும் போது ...... ம்ம்ம்ம்ம்ம்

Post a Comment