கனவுகளுடன்
கவனிப்பார் அற்று
அனாதைகளாக தெருவோரத்தில் ....
நவீன தகவல் உலகில்
கைவிடப்பட்ட பெற்றொர்களாக
யாராவது தம்மை கவனிக்க மாட்டார்களா....
என்ற ஏக்கத்துடன் ....
தபால் காரனும் அதே கவலையுடன்
தபால் பெட்டிகளை
திறந்து திறந்து முடிகிறான் ....!
திருமண அழைப்பிதழ்களை சம்பிரதாயத்திற்காக ஊற்றில் இருக்கும் தூரத்து உறவினர்களுக்கு அனுப்புவார்களே... அதுபோன்ற சில சமயங்களில் மட்டும் அவை பயன்படுகின்றன...
//கைவிடப்பட்ட பெற்றொர்களாக யாராவது தம்மை கவனிக்க மாட்டார்களா.... என்ற ஏக்கத்துடன் .... தபால் காரனும் அதே கவலையுடன் தபால் பெட்டிகளை// இன்றைய நிலையை மிக அருமையாக வெளிப் படுத்தும் கவிதை. வாழ்த்துகள்,சரவணன்.
நவீன காலத்திய அறிவியல் வளர்ச்சியால் வழக்கொழிந்துப் போன ஜீவராசிகளில் தபால் காரர் என்பவர் முதன்மையானவர்.. நவீன வசதிகளை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை கவிதை காட்டும் வலியை நினைத்து மருகுவதா?
12 comments:
இந்த காலத்துக்கு ஏற்ற கவிதை. இப்பலாம் நிறைய எடத்துல இந்த பாக்ஸ் எடுத்துட்டாங்க. பாதி எடத்துல துரு பிடிச்சு கவனிப்பாரில்லாம கிடக்கு
அழகான வரிகள்
வாழ்த்துக்கள்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு...........
கடிதங்களின் மவுசு குறைந்துபோய்விட்டது........
திருமண அழைப்பிதழ்களை சம்பிரதாயத்திற்காக ஊற்றில் இருக்கும் தூரத்து உறவினர்களுக்கு அனுப்புவார்களே... அதுபோன்ற சில சமயங்களில் மட்டும் அவை பயன்படுகின்றன...
மீட்டர்கேஜ் போய் பிராட்கேஜ் வந்தமாதிரி தபால் துறையும் அழித்து கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் தபால் துறையே............
அருமையான பதிவு
சில ஆண்டுகள் முன்பு வரை கூட கடிதங்கள் முக்கியமான ஒன்றாக இருந்தன.. தபால்காரர் ஒரு விஅய்பி போல பார்க்கப்பட்டதுண்டு..
மிக குறுகிய காலத்தில் ஏற்பட்ட மாறுதலை நன்றாக கவிதை ஆக்கி இருக்கிறீர்கள்
கடைசியாக எபோது தபால் அனுப்பியது என்று சத்தியமாக நினைவில்லை!
”கைவிடப்பட்ட பெற்றோர்களாக் “ காலத்திற்கேற்ற கற்பனை. வாழ்த்துகள்
//கைவிடப்பட்ட பெற்றொர்களாக
யாராவது தம்மை கவனிக்க மாட்டார்களா....
என்ற ஏக்கத்துடன் ....
தபால் காரனும் அதே கவலையுடன்
தபால் பெட்டிகளை//
இன்றைய நிலையை மிக அருமையாக வெளிப் படுத்தும் கவிதை.
வாழ்த்துகள்,சரவணன்.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் நம்மால் கைவிடப்பட்ட ஒரு அனாதையாய் தபால் பெட்டி சித்தரிக்கப்பட்டிருப்பது அருமை. வாழ்த்துக்கள் சரவணன்.
நவீன காலத்திய அறிவியல் வளர்ச்சியால் வழக்கொழிந்துப் போன ஜீவராசிகளில் தபால் காரர் என்பவர் முதன்மையானவர்..
நவீன வசதிகளை நினைத்து சந்தோஷப்படுவதா?
இல்லை கவிதை காட்டும் வலியை நினைத்து மருகுவதா?
//கடைசியாக எபோது தபால் அனுப்பியது என்று சத்தியமாக நினைவில்லை! //
nallak kavithai. vaalththukkal.
Post a Comment