கூர்க்காவின் ஊதல்கள்
ஆந்தையின் அலறல்கள்
ஆமையின் வேகத்தில்
வைகையைப் போன்றே
வறண்ட இரவுகளில்
மதுரை நகர்கிறது...!
குல்பிஐஸ்காரன்
ஜிகர்தண்டாக்காரன்
ரொட்டிக்காரன்
பானிப்பூரிக்காரன்
தெருவோர
இட்டலிக் கடைக்காரன்
கடலை வண்டிக்காரன்
கைகுட்டை விற்பவன்
டிராவல்ஸ் காரன்
பெட்டிக்கடைக்காரன்
என அனைவரையும்
இழந்து....
இல்லை இல்லை ...
அழவைத்து
வயிற்றில் அடித்து
மதுரை உறங்குகிறது..!
மதுரையின் இரவுகள்
உறங்குவதால்
கொலை , கொள்ளை
தடுக்கப்பட்டு குற்றங்கள்
குறைந்துள்ளது
என கூறுகிறார்கள்
தந்தையே மகளுக்கு
விச ஊசி போடுகிறான்
ஆள் நடமாடும் பகலில்
செயின் பறிக்கப்படுகிறது
முன்விரோதமின்றி
முதியோர்கள் முடிக்கப்படுகிறார்கள்
பணத்திற்காக பகலில்
சுதந்திரம் இன்றி
கற்பை கையில் பிடித்து
மீனாட்சி பட்டினத்தில் பெண்கள் ...!
.
இரவுகளில் கண் விழித்ததால்
பகலில் தூங்குகிறார்களோ
காவலர்கள்....
எது எப்படியோ
இரவு பகலாய்
பகல் இரவாய்
மதுரை மாறிவிட்டது...!
12 comments:
அன்பின் சரவணன்
உண்மை நிலயினை அழகாகப் படமெடுத்து - அருமையான கவிதையாய்ச் சமைத்தது நன்று நன்று.
மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் சரவணன். நட்புடன் சீனா
:-((((
மதுரையின் நிலையும்.. தங்களின் மனதும் இங்கே காட்சியாய் கண்களில் தங்கள் வரிகளில்...
வாழ்த்துகள்...
உறங்கும் மதுரை விழித்து எழட்டும்...
உறங்கா நகரம் உறங்கும் நகரம் ஆகிவிட்டதா? புதிய விதியா?
மதுரையா இப்படி?
(ஜிகர்தண்டா... இந்த சொல்லை மறந்து போய் நினைவுக்குக் கொண்டு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் சில மாதங்களுக்கு முன்னால்..)
மிகவும் வருத்தமாக இருக்கிறது சரவணன்,
நீங்கள் மேற்கோள் காட்டிய அத்தனை பேர்களின் வருமானமும் இரவு பத்து மணி முதல், அதிகாலை மூன்று மணி வரை,
அதற்கு வாய்ப்பில்லையென்றால், என்ன செய்வார்கள் ?
ஒரு முறை மீன்பாடி வண்டிகள், ரிக்க்ஷா மற்றும் ட்ரை சைக்கிள்களை தடை செய்து விடலாம் என்று மாநகராட்சி முடிவெடுக்கும் பொழுது,
யாரோ ஒரு காவல் ஆணையாளர், அப்பிடி செஞ்சா, இன்னும் ரவுடிங்க பெருகிருவாங்க என்று எங்கோ படித்தது ஞாயபகம் வருகிறது . . .
மீனாட்சி உறங்காமல் மதுரையை காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
அல்லும் பகலும் வணிகம் நடந்த இன்றும் நடக்கின்ற இடம் மதுரை..பை நைட் கடைகளெல்லாம் அங்கு அதிகம்.. இயல்பு மாறாத...கவிதை..
நீங்க பாட்டுக்கு, மதுரைய பத்தி எழுதிட்டீங்க . . . எனக்குள்ள தூங்கிட்டிருந்தத . . . வெளிய துப்பிட்டேன்ல, வந்து பாருங்க என் கடையில
:-( மாறித்தான் விட்டது :-(
உறங்கா நகரின்
உறங்கு நிலை
உண்மை வரிகள்
உணர்ந்த வரிகள்
நலம் வாழ்த்துக்கள்
:(
Post a Comment