Wednesday, October 14, 2015

இயல்பு தன்மை மாறினால் உணவு மட்டும் கெட்டுப்போனதாக அர்த்தமல்ல...!

நான் என்ன நீ டைப் பண்ற மிசினா..?
*
என் மகனை அழைக்க அவனது பள்ளிக்கு சென்றிருந்தேன். என்னை பார்த்ததும் சத்யாவின்  ஆசிரியர், “ சத்யா , எப்பவும் பேசிக்கிட்டே இருக்கான்.நான் கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேன்கின்றான். ரெம்ப மெதுவா எழுதுகிறான்.. சாப்பிடவே மாட்டேன்கிறான்..இப்படி ரெம்ப சேட்டை செய்கின்றான் ” என குறைகளை அடுக்கி வைத்தார்கள்.
“ம்ம்.. குழந்தை தானே.. போக போக சரியாகிவிடுவான்.. கொஞ்சம் பொறுத்துக்கங்க “ என்றேன். ஆசிரியை ஏற இறங்க இவனே ஒரு குழந்தையைப் போல் லூசு மாதிரி பேசுகின்றான் என்ற தொணியில் பார்த்தார். அதன் பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 
வெளியில் வந்ததும் சத்யாவிடம் மிஸ்.. குறை சொல்லும் அளவா நடந்து கொள்வது! சாப்பாடு கூட சாப்பிடுவது இல்லை என்கின்றார்கள் என கேட்டேன்.
“டாட்.. நான் என்ன உன்னை மாதிரி பெரிய ஆளா..? அம்மா நிறைய சாப்பாடு கட்டி கொடுத்துட்டா.. என் சின்ன வயித்துக்கு தகுந்த மாதிரி சாப்பிட்டேன்.. டிப்பன் பாக்ஸ் முழுவதும் சாப்பிடலைன்னு மிஸ் திட்டுனா.. என்ன செய்ய? இப்படி சாப்பிட்டா உன்னை மாதிரி தொப்பை தான் வரும்! “ என சிரித்தான்.
அது சரி ஏன் பக்கத்துல இருக்கிற பையன்கிட்ட பேசிகிட்டு இருக்க.. மிஸ் கிட்ட மட்டும் பேச மாட்டேன்கிற..?”
“அதுவா. டாட்.. அது வந்து அவன் பேசினான்.. நான் பேசினேன். அவன் கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது எதாவது சொன்னா நான் எப்படி டாட்.. பதில் சொல்வேன். இதுக்கெல்லாம் திட்டுவாங்களா? நான் மிஸ்கிட்ட பேசுறேன்..டாட்..ஆனா என் பிரண்டு மாதிரி பேச மாட்டா...”
“ ஏன் எழுத மாட்டேன்ன்னு புகார் சொல்றாங்க..? “
“அதுவந்து டாட்.. வேகமா எழுத சொல்றாங்க .. அதே சமயம் அழகாவும் இருக்கணும்மா.. எப்படி டாட் முடியும் நான் என்ன நீ டைப் பண்ற மிசினா..? “ என சிரித்தான்.
குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவும் அதே வேளையில் புத்திசாலியாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சத்யா மட்டும் உதாரணம் அல்ல... எல்லா குழந்தைகளும் இப்படி தான். நாம் தான் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிப்பதில்லை. நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் குறைகளை கூறி கொண்டே, நம் எண்ணங்களை குழந்தைகளின் மீது திணிக்கின்றோம். 
நண்பர்களே.. குழந்தைகளை அதன் இயல்பில் அவர்களின் குழந்தை தன்மை மாறாமல் குறைகள் சொல்லாமல், எதையும் திணிக்காமல் , அவர்களின் இயல்பு நிலையிலேயே வளரச் செய்வோம். இயல்பு தன்மை மாறினால் உணவு மட்டும் கெட்டு போனதாக அர்த்தம் அல்ல. 
 
மதுரை சரவணன்.

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! தனியார் பள்ளிகளில் சேர்த்தால் இயல்பு தன்மை பாதிக்கும். அரசுப்பள்ளிகள் பரவாயில்லை!

வெங்கட் நாகராஜ் said...

நான் என்ன டைப் பண்ற மெஷினா..... :) அதானே.... சரியாத் தான் கேட்டிருக்கிறார்.....

நெல்லைத் தமிழன் said...

இந்த மாதிரி பல கட்டுரைகள் எழுதி, பெற்றோர்களுக்கு, மகன்/மகள்களைப் புரிந்துகொள்ள என்று ஒரு புத்தகமாக்குங்கள். It be may an eye opener to many.

Post a Comment