நான் அப்போது பத்தாம்
வகுப்பு படித்து கொண்டிருந்தேன். டேய் எங்க வீட்டு பக்கத்தில் 10 படிக்கிற வசந்தா வயசுக்கு
வந்துட்டாளாம்! டேய் நம்மோடு படித்தா புஷ்பா 9 வகுப்பிலேயே குத்த வச்சுட்டாளாம். இப்படி
என் வயது ஒத்த அல்லது வயது குறைந்த பெண்கள் பெரிய மனுசி ஆகிய போது எனக்கு பெரிய மனுசன்
ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது.
எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண் பெரும் மதனிடம் டேய்
நாம் எப்படா பெரிய மனுசன் ஆவோம் என்றேன். +2 படித்த அவன் பால் உறுப்புகள் பகுதியை எடுத்து
தந்தான். டேய் அத தான் சார் நடத்தலையே.. நமக்கு எல்லாம் தெரியும்ன்னு போயிட்டாரே..
என்றேன். நீ இப்ப பெரிய மனுசன் தாண்டா என்றான். அத எப்படிடா உறுதிப்படுத்துறது? போய்
கௌதமன் சார் கிட்ட கேளு டீட்டெய்லா சொல்வார் என்றான். எதுவும் புரியாமல் கௌதமன் சார் கிட்ட சென்றேன்.
அவர் எங்களுக்கு விலங்கியல் நடத்தும் ஆசிரியர். சார் பெண்கள் எல்லாம் பெரிய மனுசி ஆகிவிடுகின்றார்கள்.
ஆண்கள் எப்போது பெரிய மனுசன் ஆவர்கள் என கேட்டேன். அப்பாவியான என்னை பார்த்து ஏற இறங்க
பார்த்தார். உடன் வந்த மாணவர்கள் கொள் என சிரித்தனர். சார் ஏன் இப்படி சிரிக்கின்றார்கள்?
என கேட்டேன். அவர்கள் பெரிய மனுசன் ஆகிட்டாங்களாம் அதான் சிரிக்கிறார்கள் என்றார்.
நான் எப்ப ஆவேன்? எப்ப ஒரு பொண்ண நீ நினைச்சு உருகுறீய்யோ அப்ப நீ பெரிய மனுசன் ஆகிட்டேன்னு
அர்த்தம். அப்ப இந்த பசங்க பொண்ணுகள பார்த்து உருகுகின்றார்களா? என மனதில் சிந்தனையை
ஓட்டி வீட்டிற்கு வந்தேன்.
எனக்கு அப்படி
எந்த பெண்ணும் உருகும் அளவுக்கு கவர வில்லை. பல நாட்கள் சிந்தித்தேன். ஒன்றும் தோணவில்லை.
கல்லூரியில் சேர வேண்டும். விடுமுறை ஓடி கொண்டிருந்தது.
அம்மா விடம் எந்த கல்லூரியில் விண்ணப்பிப்பது என கேட்டேன். டேய் பேசாம பெரியம்ம்மா வீட்டில் இருந்து படிக்கலாமே!
போய் அழகப்பா யுனிவர் சிட்டியில் அப்பிளிகேசன் வாங்கு என்றாள். எப்படி மறந்தேன். பாரிஜாலம்.
அழகான பெண். மா நிறம் என்றாலும் கொள்ளை அழகு. சிரித்தப்படி அவள் கூறும் கதைகள் ஏராளம்.
விதவிதமாய் கதைகளும் விடுகதைகளும் சொல்லி அசத்துவாள். ஊரணிக்கு அழைத்து சென்று ஊர்
புராணம் பேசுவாள். முத்து பற்கள் சிரிப்பில் அவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்
என்று தோணும். அந்த ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் போது அவள் சிரிப்பு ஒலிக்கு ஆலமரத்தில்
பறவைகள் கூடி விடும். அவள் பறவைகளுடன் பேசுவாள். நம்ப முடியாதது போல் இருக்கும் ஆனாலும்
அவள் பேசுவதை நம்பி தான் ஆக வேண்டும் ஒவ்வொரு முறையும் என்னை விழுதில் இருந்து தள்ளும்
போது பறவையாக மாறி பறப்பதாகவே தோன்றும். ஆஹா எப்படி மறந்தேன்.
இப்போது நானும் பெரிய
மனுசன் தான் பாரிஜாலத்தை நினைக்க ஆரம்பித்து விட்டேனே!
கரைக்குடி சென்றேன்.
பெரியம்மா வீட்டில் பையை தூக்கி போட்டேன். என்னடா விசேசம். பரீட்சை லீவு. அப்படியே
யுனிவர்சிட்டியில் அப்ளிகேசன் போடலான் என்று வந்தேன். நாளைக்கு யுனிவர் சிட்டி போகணும்.
நாளைக்கு பெரியம்மாவுக்கு லீவு கிடையாதே? அப்ப பக்கத்துவீட்டு பாரிஜாலத்தை வர சொல்லுங்க
அவளை அழைச்சுகிட்டு யுனிவர் சிட்டி போறேன். முட்டாள் மாதிரி பேசுற.. அவ பெரிய மனுசி
ஆகிட்டா. வெளியே எங்கும் போக மாட்டா? நானும் பெரிய மனுசன் தான் . என்னை நம்பி வரலாம்.
போடா முட்டாள். உன்னோட வயசு வந்த பொண்ண எப்படி அனுப்புவாங்க? என்ன பெரியம்மா சொல்ற
போன லீவுக்கு வந்தேன். அவ ஊரணியில் என்னை உட்கார வச்சு ஊஞ்சல் ஆடினா? +2 படிச்சு முடிச்சா
பெரிய மனுசியா? அட போடா அப்ப அவ வயசுக்கு வரலை. பஸ் ரூட்டு சொல்றேன் இல்லை ஆட்டோ பிடிச்சு
போயிட்டு வா என்று கிளம்பினாள்.
நான் ஊரணி கரைக்கு
சென்றேன். ஊரணி கரை அம்மன் கோவில் மணி ஓசை கேட்டது. மெதுவாக நடந்தேன். கோவிலின் உள்
பாரிஜாலம் செல்வது போல் உணர்ந்தேன். எட்டு வைத்து நடந்தேன். அவ்வளவு அழகு. நான் அவள்
எதிரில் நின்றேன். அவள் என்னை காணதது போல் நடந்தாள். மெதுவாக பாரி என்று அழைத்தேன்.
அவள் இப்போது என்னை முறைந்தாள். அருகில் அவளது அம்மா நின்று இருந்தாள். பாரி நல்லா
இருக்கிய்யா? என்றேன். அவள் அம்மா என்னை பார்த்தாள். ஆண்டி நான் … பக்கத்து வீட்டு
..மதுரையில் இருந்து என்றேன். ஓ நீயா .. நல்லா இருக்கீய்யா.. பட்டினம் போல் இல்லா..
இனி பாரிஜாலம் பேச மாட்டாள் என்றார். இல்லை ஆண்டி என்றேன். அதற்குள் இருவரும் கடந்தனர்.
வெளியில் வந்தேன்.
ஆலம் விழுதுகள் பற்றினேன். காற்று வீசியது. நான் விழுதுகளை பற்றி கொள்ள பின்னால் இருந்து
பாரிஜாலம் தள்ளுவது போல் உணர்ந்தேன். பறந்தேன். பறந்தேன். இப்படி எவ்வளவு் நேரம் ஆலம்
விழுதை பற்றி இருந்தேன் என தெரியவில்லை. மணி 9 ஆகியிருந்தது.
என்ன தம்பி அப்ப இருந்து
விழுதை பற்றி படித்து நிற்கின்றாய் என்றார் பட்டர். பறக்க வில்லையா…எதிரில் இருக்கும்
பாரிஜாலம் உண்மை இல்லையா? ஏன் இவர் கண்களுக்கு புலப்படவில்லை. இப்போது குளக்கரையில்
இருவரும் கால் நனைத்து பேச தொடங்கினோம். வீரப்பனுக்கு உன்னை மாதிரி பறவையின் குரல்
அறிந்திருந்தானாம் என்றேன். நீயும் முயற்சி செய் என்றாள். சிரித்தேன். இப்போது ஒரு
சத்தம் கேட்கின்றது அது எந்த பறவை தெரியுமா? தெரியவில்லை. உன் பெரியம்மா உன்னை தேடிகிட்டு
வருகின்றார்களாம் கிளம்புங்க என ஆந்தை அலறி சொல்கின்றது என சிரித்தப்படி ஓடினாள். அவளை
துரத்தி ஓடினேன். எதிரில் பெரியம்மா.. டேய்.. எங்கடா ஓடுற.. நில்லுடா.. என்றாள். இல்லை
என மழுப்பியப்படி நின்றேன். பாரிஜாலம் கைகளை காட்டி நாளை சந்திப்போம் என்றாள்.
பார்ம் வாங்கிட்டே
வீட்டுக்கு போய் அம்மா கிட்ட கேட்டு அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரியில் சேர
வேண்டியது தானே? இல்லை காமராசர் பல்கலைகழகத்தில் சேர வேண்டியது தானே? பெரியம்மாவுக்கு
புரோமன் வந்திருக்கு..நான் தேவகோட்டை போனாலும் போயிடுவேன் என்றார். எனக்கு வருத்தமாக
இருந்தது. இருக்கட்டும். அங்கிருந்து காரைக்குடி பக்கம் தானே நான் இங்கே படிக்கின்றேன்
என்றேன். அவள் என் கண்களை உற்று நோக்கி என்னடா உன் கண்களில் ஆலமர விழுது தெரிகின்றது
என்றாள். கண்ணாடியில் பார்த்தேன் எனக்கு தெரியவில்லை. நாட்கள் செல்ல ஆரம்பித்தது. பாரிஜாலம்
என்னிடம் அவளது லவ்வை சொல்ல ஆரம்பித்தாள். அட நீங்கள் நம்புங்கள் இப்போது இருவரும்
அழகப்பா பல்கலைகழகத்தில் கணிதம் ஒரே வகுப்பில் பயில்கின்றோம். யுனிவர் சிட்டியில் ஆல
மரம் இருக்கின்றது . அங்கு தான் எங்கள் ப்ராஜெட் படிப்பு சாப்பாடு எல்லாம். அவள் என்னை
துரத்த அவளை நான் துரத்த ..பல பறவைகள் எங்கள் காதலை ரசிக்க… நாங்கள் பறவை மொழியில்
பேசி கொள்ள ஆரம்பித்தோம்.
சில சமயங்களில்
பறவை மொழியில் பெரியம்மாவிடம் பேசியது உண்டு. அவள் ஆச்சரியப்பட்டு என்னை உற்று கவனிப்பார்.
டேய் உன் கண்களில் இப்போது ஆலம் விழுது வேர் விட தொடங்கி விட்டது. ஆழம் விழுது மூக்கு
வழியாக தொங்குகின்றது பார்… என்பார். நான் சிரித்து கொண்டே கண்ணாடியில் பார்ப்போன்.
எதுவும் தெரியாது. இப்போது பறவைகள் அவள் மொழியில் பேச தொடங்கி விட்டன. ஒருமுறை பாரிஜாலத்திடம்
இருந்து வௌவால் செய்தி கொண்டு வந்திருந்தது.
பெரியம்மா அலறியபடி தெருவில் உள்ள பலரை அழைக்க தொடங்கி விட்டாள். ஆம வௌவால்கள் என்னை
சுற்றி வட்டமிட்டப்படி பேசி கொண்டிருந்தன. வீடு முழுவதும் வௌவால் என அடிக்க தொடங்கி
விட்டார். பாவம் அவைகளுக்காக நான் அடிவாங்கி விட்டேன்.
அன்றே மதுரையில்
இருந்து என் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் என்னை வந்து வா மதுரைக்கு படித்தது
போதும் ஒரு செமஸ்டர் போதும் அடுத்த வருடம் கூட படிக்கலாம் என வற்புறுத்தி அழைத்து சென்றனர்.
நான் செல்வதை கண்ட பாரிஜாலம் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள் . நான் சிரித்தேன். அவள்
கண்களை பார்த்தேன். அவள் என் கண்களை பார்த்து அலறியப்படி சென்றாள். நான் பல் இளித்தேன்.
என் பற்கள் ஆல மரத்தின் பழத்தை போன்று சிவப்பாக
இருந்ததை கண்டு அஞ்சினாள். கதறினாள். இப்போது என் காதைகளில் குடியிருந்த குயில் அவளை
நோக்கி பறந்தது. அவள் எப்போதும் போல் இல்லை. நான் சிரித்தப்படி சென்றேன்.
மறுநாள் போனில்
பெரியம்மா..அம்மாவிடம் பேசினாள். பாரிஜாலத்திற்கு
பேய் பிடித்து விட்டது. அவளாக சிரிக்கின்றாள். கல்லூரிக்கு செல்லாத அவள் கல்லூரி கணிதத்தை
நோட்டில் கிறுக்குகிறாளாம். அவளை சென்று பார்த்தேன். உன் மகன் கண்களில் கண்ட ஆலம் மரம்
அதன் விழுதுகளை கண்டேன். கொஞ்சம் பயந்து விட்டேன். நான் ஒட்டு கேட்டேன். இப்போது நான்
என பாரிஜாலத்திற்காக அழுதேன். என்னை சுற்றி ஆலமரத்தின் இலைகள் குப்பை போல் சேர்ந்திருந்தது.
அம்மா டேய் இங்கு எப்படிடா இலைகள் என்றபடி கூட்டி தள்ளினாள். ஒருமுறை நான் அழுவதை கண்டு
பறவைகள் குரல் எழுப்பின. நானும் பறவை மொழியில் பேசினேன். என் தந்தை என்னை விநோதமாக
பார்த்தார். நான் என் பற்களை பறித்து அவற்றிக்கு திண்ண கொடுத்தேன். அவைகள் என் பற்களை
கொத்தி திண்ணுவதை கண்டு அப்படியே முர்ச்சையடைந்து போனார். என் அம்மா அவனை பற்றி தப்பா
பேசாதிங்க.. என் அக்கா தான் பைத்தியம் போல் உளறுகின்றாள் என்றால் நீங்களுமா? என்றாள்.
சிலநாட்கள் கழித்து
அம்மா என்னை சாப்பிட அழைத்தாள். பாரிஜாலத்திற்கும்
சேர்ந்து சாப்பாடு வை என்றேன். சமையலறையில் இருந்து என் படுக்கைக்கு வந்த அவள் கதறியப்படி
சென்றாள். நான் முழு ஆலமரமாக இருப்பதாகவும் அதன் ஒரு கிளையில் பாரிஜாலம் ஆடிகொண்டிருப்பதாகவும்
கூறினாள் . என் தந்தை அப்போதே கூறினேன். இவனை ஒரு சைக்காரிட் இடம் அழைத்து செல்ல வேண்டும்
என்றார். போன் ஒலித்தது. பெரியம்மா குரல்
. இப்போது ஸ்பீக்கரில் போட்டு பேசினார்கள். பிள்ளைய பத்திரமா பாத்துக்கங்க.. பாரிஜாலம்
செத்துட்டா.. ? எப்படி தெரியலை.. அவள் வீட்டில் நடுவில் ஒரு ஆலம் விழுது வளர்ந்து வந்து
இருந்தது. அதில் அவள் தொங்கி உயிரை மாய்த்து கொண்டாளாம். விழுது எப்படி வீட்டில் என
அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
பாரிஜாலம் நான்
பெரிய மனுசன் தானே.. உன்னையே உருகி சாகிறேனே…நீ எப்ப என்னை பாத்தீய்யோ அப்பவே பெரிய
மனுசன் தான்… வா போய் நிம்மதியா வாழலாம் என்று அழைத்தாள்.
என்னங்க நம்ம வீட்டுஹாலில்
விழுதுகள் தொங்குகின்றன. அய்யோ வீடு முழுவதும் விழுதுகள் பரவி வருகின்றனவே.. அய்யோ
நம்ம் மகன்.. என அம்மாவின் குரல் மட்டும் எனக்கு கடைசியாக ஒலித்தது. அதற்கு பின்பு
எதுவும் கேட்க வில்லை..
மதுரை சரவணன்.
5 comments:
சதிப்புக்கு வருகிறீர்தானே?
அவசியம் வருகின்றேன். Mathu S
அருமை!
வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்..
விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
பணம் அறம் இணையதளம்
ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்
உதவிக்கு பயன்படுத்து லிங்க்
Post a Comment