Monday, August 24, 2015

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்? சிவகங்கை பள்ளிக்கூடம் சம்பவம் புகட்டுவது என்ன?

எங்கிருந்து தொடங்குவது … குழந்தைகளை பாலியல் குற்றங்கள் இருந்து காப்போம்.!
           பள்ளிக்கல்வி துறை வகுப்பில் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது , அப்படி வந்தால், ஆசிரியர்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டு , பள்ளி முடிந்து, வீட்டுக்க  அனுப்பும் போது எச்சரித்து திருப்பி கொடுக்க வேண்டும் என்கிறது. இச்செய்தியை பகிர்வதற்கான அவசியம் இருக்கிறது. இன்று செய்தி தாள்களின் பக்கங்களை சிறுவர்களின் மீது ஏற்படுத்தும் பாலியல் வன் கொடுமை தினம் தினம் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் உரிமை சட்டம் சொல்லும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணங்களை சீர்தூக்கி பார்த்தால் , அது வீட்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. நாம் வாங்கி தரும் சட்டைகள் மிகவும் மார்டனாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு ஆடைகளை வாங்கும் போது, நம் குழந்தைகளின் உடல் வாகுவிற்கு பொருந்தாத ஆடைகள் உடலில் பாகங்களை வெளிப்படையாக காட்டுகின்றன. மார்டன் ஆடை என்ற பெயரில் நாம் விலைகொடுப்பது, நம் குழந்தைகள் மீது செலுத்தப்படும்  வன்கொடுமைகளையும் சேர்த்து தான் !

   குழந்தைகளிடம் இருந்து தப்பி செல்ல வேண்டும் அல்லது ஏதோ ஒருவேளையை நிம்மதியாக பார்க்க வேண்டும் என்று நினைத்து டி.வி பார்க்க வைக்கின்றோம். அவர்கள் சினிமா சம்பந்தமான விசயங்களையே பார்க்கின்றனர். அதனால் மனரீதியாக சில செக்ஸ் வக்கிரங்களை அவர்களை அறியாமலே பதிந்து விடுகின்றனர்.  நாம் நம் குழந்தைகளை அண்டை அல்லது தெரிந்த நபர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் இச்சைகளுக்கு உடந்தையாக்கி,  குழந்தைகள் சீரழிந்து போகின்றன. சில சமயம் நமக்கு தெரிந்தவர்களே நம் குழந்தையை சீரழிக்கின்றனர்.
 குழந்தைகளிடம் கொடுக்கப்படும் அலைப்பேசி மிகவும் ஆபத்தனாது. அவர்கள் வரம்புக்கு மீறிய பேச்சுக்கு துணைப்போவதற்கு நாமே உதவுவது போல் ஆகும். அதில் பதிவிறக்கம் செய்யப்படும் படங்கள் , குழந்தைகள் மனதை மிகவும் பாதிக்கின்றன. குறிப்பாக நடிகைகளின் படங்கள் வால் பேப்பர்கள் அவர்களின் மனதை அலைபாய வைக்கின்றன. அதுவே அவனை ப்ளூ பிலிம் வரை கொண்டும் சென்று விடும்.
   
        குழந்தைகள் முன்னால் பேசப்படும் ஆபாச பேச்சுக்கள் , ஆபாச வார்த்தைகள் குழந்தைகளின் மனதை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. முக்கியமாக கணவன் மனைவி இருவரும் போடும் சண்டைகள் குழந்தைகளை மிகவும் பாதித்து, மனசிக்கலை உருவாக்குகின்றன. அது வெளியில் நமக்கு தெரிந்தவர்களால் அல்லது குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லும் நபர்களின் இச்சைக்கு உடன்பட வைத்து , பாலியல் குற்றங்களில் நம் குழந்தைகளை ஈடுபடுத்த நேரிடலாம்.

       இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் வேலை காரணமாக , குழந்தைகளை தனிமையில் விட்டு செல்ல நேரிடுகின்றது. எவ்வளவு தான் வீட்டை பூட்டி, மிகவும் பாதுகாப்பாக இருந்தாலும் குழந்தைகளின் மனதை பூட்டி வைக்க முடியாது. அதனாலே குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். தனிமை குழந்தைகளிடம் மனசிதைவை ஏற்படுத்துகின்றன.

    குழந்தைகள் அன்புக்காக ஏங்கி தவிக்கின்றனர். ஆகவே,குழந்தைகளிடம் பேசுங்கள். அவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள். நம் குழந்தைகளை எந்த புறக்காரணிகளும் பாதிக்காது.
தமிழ்நாட்டில் பெருகி வரும் மதுக்கடைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சர்வேக்கள் சொல்கின்றன. ஆகவே, பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் கருதி குடிக்காமல் இருந்தல் நலம். மது அருந்துபவர்களை நம்பி நம் குழந்தைகளை ஓப்படைத்து செல்லாதீர்கள். குறிப்பாக பெண் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டாம். போதையில் என்ன செய்கின்றோம் என்பதை மறந்து நடக்க கூடும்.
      
       சினிமா பார்ப்பதை குழந்தைகள் ஒதுக்கி வைப்பது நல்லது. ஹீரோயிசம் என்ற அடிப்படையில் குழந்தைகள் தன்னை ஒரு ஹீரோவாக உருவகம் செய்து, சண்டையில் ஈடுபடுகின்றனர் அதன் விளைவாக காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர். காமத்தை தூண்டும் விதமான பாடல்களால் நம் குழந்தைகளை தவறான வழியில் நடக்க செய்யலாம்.

        குழந்தைகள் கோபப் படும் படியாக பேசாதீர்கள். அவர்கள் அடிக்கடி கொள்ளும் கோபம் மனசிதைவை ஏற்படுத்த வாய்ப்பாக அமையலாம்.
         
        இப்படி ஏறக்குறைய குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியில் வன் கொடுமைகளுக்கு குடும்ப சூழலே காரணமாக அமைவதால் , நாம் நம் குழந்தைகளை காலத்தின் அவசியம் கருதி அன்போடு, நல்ல பழக்க வழக்கத்தோடு, கோபப்படாமல், இனிமையாக பேசி, வீட்டில் புத்தகங்கள் நிறைந்து நம் குழந்தைகளோடு டிவி தவிர்த்து, பிறர் கண்களுக்கு உறுத்தாத ஆடைகள் அணிந்து, செல்போன் தவிர்த்து (கொடுக்காமல்)  வாழ்ந்தாலே போதுமனாதாகும்,அது நம் குழந்தைகளை பாலியியல் ரீதியான துன்புறுத்தல் அச்சத்திலிருந்து காத்துவிடும்.     


            தொடர்ந்து பத்திரிக்கையிலிருந்து வரும் செய்திகளை நாம் காணும் போது நம் குழந்தைகளின் மீது தானாகவே கவனம் குவிகின்றது. நாம் யாரையெல்லாம் உயர்வாக நினைக்கின்றோமோ அவர்கள் எல்லாம் பெண்கள் விசயத்தில் மோசமாக இருக்கின்றார்கள். காலத்தின் அவசியம் , நாம் நம் குழந்தைகளுக்கு தன் உடல் மீதான நம்பிக்கையை, அவசியத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அரசும் பாடநூல்களில் பாலியல் கல்வியை மெதுவாக புகுத்தியுள்ளது வரவேற்கதக்கது. எது குட் டச் ? எது பேட் டச் ? என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மூன்றாம் வகுப்பு பாடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது பாலியல் சார்ந்த கல்வி.   

          தகப்பனானாலும் தள்ளி நின்று பேச வேண்டும். தாத்தா வானாலும் மடியில் அமர்ந்து பேசாக்கூடாது போன்ற வரிகள் முக்கியமானவை. ஆசிரியர்கள் நம் குழந்தைகளின் மீது எப்போதும் அக்கறையுடன் தான் இருக்கின்றனர். இருந்த போதிலும் பெற்றோர்களாகிய நாமும் இந்த மாதிரி விசயங்களில் கவனம் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை பாலியல் சார்ந்த தொல்லைகளில் இருந்து காப்பாற்ற  , நாம் நம் குழந்தைகளின் உடைகளில் இருந்து கவனம் செலுத்த வேண்டும். வாய்க்கு நுழையாத பேன்சி டிரஸ்களையும்,  வெற்றிப் படங்களின் கதாநாயகிகளின் பெயரிலும் வெளிவரும் கவர்ச்சியான ஆடைகளை நாம் வாங்க கூடாது. நம் குழந்தைகளின் உடல் அமைப்புக்கு ஏற்ற பிறர் கண்களுக்கு உருத்தாத ஆடைகளை நாம் வாங்கி தர வேண்டும். பள்ளிகளில் அதற்காக தான் சீருடை அமைத்து உள்ளனர்.
சினிமா பார்க்காமல் இருப்பது உத்தமம். பாலியல் சார்ந்த விசயங்கள். பாலியல் சார்ந்த வசனங்கள் குழந்தைகள் அவர்கள் என்னவென்று அறியாமலே பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். சினிமாக்கள் வாழ்க்கையின் நிஜம் என மாணவ பருவத்தில் கருதி விடுகின்றனர். அது நம் குழந்தைகளின் மனதில் தேவையில்லா மன குழப்பத்தை விளைவிக்கலாம்.

        டிவியில் நாடகம் பார்ப்பவர்கள், தங்கள் குழந்தைகள் வீட்டில் இல்லாத தருணங்களில் பாருங்கள். தொலைக்காட்சியில் எத்தனையோ நல்ல விசயங்கள் உள்ளன, அப்படி இருக்க தேவையில்லாத நிகழ்வுகளை பார்க்க அனுமதிக்காதீர்கள். அதனால் மனரீதியாக பாலியல் வேட்கையை தூண்டக்கூடும். அது தவறான பாதைக்கு அழைத்து செல்லலாம். நம் குழந்தைகளை நாம் தானே பாதுக்காக்க வேண்டும்.
இண்டர் நெட் உபயோகம் அவசியமானது. இன்று நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ப்ராஜெக்ட் என்ற பெயரில் நெட் செண்டர்களை நாடுகின்றனர். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  முடிந்தால் நீங்களும் ப்ரவுசிங் செண்டர்களுக்கு சென்று , உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள். சின்ன தவறு கூட உங்கள் குழந்தையை திசை திருப்பி விடும் . இதில் ஆண் , பெண் குழந்தைகள் என்ற பாகுப்பாடு இல்லை.

     அதை விட முக்கியமானது, உங்கள் குழந்தைகளிடம் எப்போதும் உரையாற்றுங்கள். காலை முதல் மாலை வரை அவன் என்னென்ன செய்தான், பள்ளியில் என்ன நடைப்பெற்றது, அவனின் நண்பர்கள் யார், அவர்கள் எப்படி பேசுகின்றனர், ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர். வீட்டுக்கு அருகில் யாருடன் பழகுகிறான், பள்ளி தவிர வேறு நண்பர்கள் இருக்கிறார்களா என்பது போன்றவற்றை மெதுவாக , அவனுடன் பேசி, தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் மன தேவைகளை அறிந்து கொள்ளுங்கள். நாம் அவர்களுக்காக தானே வாழ்கின்றோம்.

       உங்களால் முடிந்தவற்றை வாங்கி தாருங்கள். இல்லை என்பதை இல்லை என்று கூறாமல் , அவனை அடிக்காமல், இல்லை என்பதை உணர்த்துங்கள். குழந்தைகள் அதன் பின் நம்மால் முடிந்தவற்றை மட்டுமே கேட்டு பெற்று  கொள்வார்கள்.

     மொத்தத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நண்பராக இருந்தால் போதுமானது. நம் குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமான எந்த குறையும் நிகழாது. குழந்தைகளை நேசியுங்கள். குழந்தைகளை நண்பர்கள் போல நடத்துங்கள். குழந்தைகளை நம் மீது நம்பிக்கையை உண்டாக்குங்கள். உங்கள் நம்பிக்கை வீணாகது. நீங்கள் நினைத்தப்படி அவன் சிறந்து விளங்குவான்.


மதுரை சரவணன்.

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தகப்பனானாலும் தள்ளி நின்று பேச வேண்டும். தாத்தா வானாலும் மடியில் அமர்ந்து பேசாக்கூடாது போன்ற வரிகள் முக்கியமானவை.// இந்த வரிகளுக்காக உங்களைப் பலர் வெறுப்பார்கள்.
உண்மையை அவர்கள் உணராமல் வேசம் போடுபவர்கள்.

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான ஆலோசனைகள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிந்திக்க வைக்கும் கட்டுரை. பெற்றோர் ஆசிரியர் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்

Yarlpavanan said...


சிறந்த பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

Post a Comment