Monday, June 4, 2012

மழை இரவு




மழை தூர ஆரம்பித்த
இரவொன்றில்
நான் கரைந்து கொண்டிருந்தேன்
உன் கை பட்டு.

தீ மூட்டாமல்
நீயும் நானும்
சூடாகிப் போனோம்
நம் மூச்சுக் காற்றில்
இருள் முனங்கிக் கொண்டிருந்தது.

உன் கரங்களை
தூரிகையாக்கி
என் முதுகில்
ஓவியம் வரைந்தாய்
வியர்வை அழித்த
அவ் ஓவியம்
இன்னும் என் நினைவலையில்
அழியாமல்.

மழை இரவு
இன்னும் எரித்துக் கொண்டிருக்கிறது
உன்னையும் என்னையும்.

5 comments:

'பரிவை' சே.குமார் said...

மழை இரவு மகா அட்டகாசம்.
அருமை.
வாழ்த்துக்கள்.

செய்தாலி said...

//மழை இரவு
இன்னும் எரித்துக் கொண்டிருக்கிறது
உன்னையும் என்னையும்//

ம்ம்ம் அருமை அருமை சார்

G.M Balasubramaniam said...

பள்ளி விடுமுறையில் நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். விடுமுறை நிகழ்வுகள் நினைவுகளில் வருகிறதோ. ? நலம்தானே சரவணன்.?

சித்திரவீதிக்காரன் said...

நல்லாருக்கு...

அ. வேல்முருகன் said...

நினைவுகள் அழிவதில்லை

Post a Comment