Monday, April 16, 2012

புரியாத குறியீடுகள்


வகுப்புகள் தொடங்கின
வழக்கமாக கத்தும் காக்காயும்
சரியான நேரத்திற்கு கத்த துவங்கியது….
காக்காயை பார்க்கும் போதெல்லாம்
ஏமாந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது
நரித்தனம் இல்லாத மனிதர்கள் யார் ?
இன்னும் பாடம் நடத்தி முடியவில்லை…
எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி
கவருடன் வந்த தலைமையாரிசியை
பைன் வாங்குவது நல்ல விசயம் தான்
நீங்கள் திருந்த கொடுக்கும் வாய்ப்பு
யாரோ தவறாக தகவல் கொடுத்துள்ளார்கள்
நீங்கள் யாரும் விசாரித்தால்
பைன் வாங்குவதில்லை என கூறுங்கள் என்றார்
காகம் இன்னும் கரைந்து கொண்டிருந்தது
கணித குறியீடுகள் புரியாத மாணவர்கள்
மேலும் குழம்பிப் போய் இருந்தனர்
காந்தி மட்டும் இன்னும் சிரித்துக் கொண்டிருந்தார்
சத்தியமேவ ஜெய
எந்த மாணவனும் சுயசரிதையை வாசிக்க பயப்படுகிறான்
உண்மைகள் மறைந்த உலகில் …! 

6 comments:

பாலா said...

நருக்கென்று கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.

தருமி said...

//வகுப்புகள் தொடங்கின
வழக்கமாக கத்தும் காக்காயும்
சரியான நேரத்திற்கு கத்த துவங்கியது…//

வகுப்பெடுக்கும் ஆசிரியரை காக்கா என்று அழைக்கும் இந்தக் கவுஜயை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

மகேந்திரன் said...

///பைன் வாங்குவது நல்ல விசயம் தான்
நீங்கள் திருந்த கொடுக்கும் வாய்ப்பு ///

இப்படி சொல்லி சொல்லியே பல
வகுப்பறைகள் கட்டி விட்டார்கள்...

Unknown said...

நல்ல கருத்து நண்பா

'பசி'பரமசிவம் said...

//நரித்தனம் இல்லாத மனிதர்கள் யார்?//
எத்தனை அருமையான கேள்வி!
நிறையக் கேளுங்கள் சரவணன்.
என் வலைப்பதிவுக்கு வருகை தந்து கருத்து வழங்கியதற்கு மிக்க நன்றி.

சித்திரவீதிக்காரன் said...

நீங்கள் யாரும் விசாரித்தால் பைன் வாங்குவதில்லை என கூறுங்கள் \\சத்தியமேவ ஜெய \\
அருமையான கவிதை.

Post a Comment