கடந்த வாரம் ஆனந்த விகடன் என் விகடனில் என் பிளாக் அறிமுகம் செய்யப்பட்டது.
பல பணிகளுக்கு இடையில் பிளாக் பக்கம் வர இயலவில்லை. விகடன் வாயிலாக என் பள்ளியில் 1978 படித்த சோம சுந்தரம் என்ற பழைய மாணவர் சிங்கப்பூரில் இருந்து தொடர்பு கொண்டார். அவர் தான் படித்த போது அவரின் ஆசிரியையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனுப்பி தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்து ரத்தின வேல் அய்யா விகடன் பார்த்து முதலாவதாக வாழ்த்து தெரிவித்தார். என்னையும் என் எழுத்தையும் செம்மைப் படுத்தி ஒரு நல்ல நிலமைக்கு வர வேண்டும் என்று துடிக்கும் என் இனிய நண்பன் சகோதரன் கா. பா குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
பல ஆசிரிய நண்பர்கள் விகடன் மூலமாக நான் பிளாக்கில் எழுதி வருவதை அறிந்து மகிழ்ந்தார்கள். என்னுடைய முன்னாள் நிர்வாகி திரு ராஜா அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அல்லாமல் நான்கு ஆனந்த விகடன் வாங்கி கொடுத்து அதிகாரிகளிடம் தெரிவிக்க சொன்னார்.
என் குடும்ப நண்பர் மற்றும் தற்போதைய பள்ளி நிர்வாகி திரு சுரேந்திரன் எ பாபு அக மகிழ்ச்சி கொண்டதுடன் , 2002 ல் வெளியிடப்பட்ட படைப்பான “நீங்களும் முதல்வராகலாம்” என்ற புத்தகத்தை நினைவில் கூர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன் , பெங்களூரில் உள்ள தன் மகளிடம் பகிர்ந்து கொண்டு நெட்டில் படித்து வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்.
இப்படி பல வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டே செல்லலாம். அத்தனை ஆனந்தத்திற்கும் ஒரே காரணம் ஆனந்த விகடன் மட்டுமே…!
ஓரே வரியில் நன்றி என்று சொல்லி விட மனமில்லை. என் மகிழ்வுக்கும் என்னுடைய எழுத்தின் விரிவுக்கும் அதன் பின் உள்ள மகத்துவத்திற்கும் , என் பணியின் ஆழத்திற்கும் உள்ள உன்னத தொடர்பை எடுத்து கொடுத்த ஆனந்த விகடனுக்கு என் வாழ் நாள் முழுவதும் கடமைப் பட்டவனாவேன்… !
ஐ லவ் விகடன்…!
14 comments:
வாழ்த்துகள்..இன்னும் மென் மேலும் வளர...
வாழ்த்துக்கள்..
http://anubhudhi.blogspot.in/
வாழ்த்துக்கள் saravanan
நன்றாகவே ப'ரிச்'சயமாகி விட்டீர்கள் எல்லாருக்கும்... வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே1
சந்தோசமாக இருக்கிறது சரவணன். வாழ்த்துக்கள் !
வாழ்த்துகள் அண்ணே !
விகடனில் உங்கள் பதிவுகள் பற்றிய குறிப்பு வாசித்தேன். வாழ்த்துக்கள்.
குமரன்
வாழ்த்துகள், இன்றைய கல்விமுறை குறித்த தங்கள் கட்டுரைகள் அருமை. பகிர்விற்கு நன்றி.
எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கும் விகடன் மிகப்பிடிக்கும்
http://thamizhthenee.blogspot.com/
congrats sir
எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
Post a Comment