சென்ற வாரம் குழந்தை வளர்ச்சியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பிற்கு resource person ஆக சென்றேன். காலத்தின் கட்டாயம் எதாவது சம்பவங்கள் நடந்தால் உடனடியாக ஒரு பயிற்சி தரப்படுகிறது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பயன் மதிப்புக்கள் (values) பற்றியும் அவைகளை உருவாக்கும் காரணிகள் பற்றியும் , பயன்மதிப்புகளை பற்றி அறியும் முறைகளான 1. பகுத்தாராயும் முறை 2. ஆராய்ச்சி முறை 3. அறிவு சார்ந்த அணுகுமுறை சொல்லி தந்தார்கள்
உடல் நலமும் சத்துணவும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உதவும் வகையில் எவ்வகை உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டினார்கள்.
மாணவர்களின் மனவெழுச்சி வளர்ச்சி பற்றி குறிப்பிடும் போது ஆசியாவில் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு ஆசிரியை கொலை செய்யப்பட்டது என விவாதிக்க ஆரம்பித்தார்கள். அப்போது ஆசிரிய பணி அறப்பணி ஆனால் அதை நாம் முழுவதுமாக செய்ய முடியவில்லை. மாணவர்களை தண்டிக்கும் உரிமை கூட நமக்கு கிடைக்க வில்லை என மிகவும் மன வேதனைப்பட்டு விவாதம் சென்றது.
நான் அப்போது எதை வைத்து சொல்கிறீர்கள்என்று வம்பு இழுத்ததுடன் யார் சொல்லும் விளக்கதையும் ஏற்காமல் மிகவும் கடுமையான தொணியில் மனசாட்சியுடன் பதில் தரவும் என்று கூறினேன்.
மேலும், நான் சும்மா இருக்காமல் ஆசிரியப் பணி இன்று அரைப்பணியாக மாறிவிட்டதால் தான் பிரச்சனை என சூடு ஏற்றினேன். என்ன புரிந்தார் என தெரியவில்லை என் அருகில் உள்ள ஆசிரியரும் சேர்ந்து கொண்டு , சார் சொல்வது உண்மை தான் அரை, முக்கால் , கால் என தேய்ந்து கொண்டு செல்கிறது என்றார்.
இந்த பயிற்சி எதற்கு? ஒரு மாணவன் தவறு செய்து விட்டான் என்றவுடன் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய வளர்ச்சிகள் பற்றிய பயிற்சி தரப்படுகிறது. அதற்கு ஆசிரிய சமுதாயமே வரிந்து கட்டிக் கொண்டு , அநீதி என திரண்டு வருகிறது.
எதற்கு இது ?
“ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்” என இந்நிகழ்வை சொல்லி எங்களுக்கு உரிமை வேண்டும் எங்களுக்கு அடிக்க தண்டனை வேண்டும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என வாரியடித்து பேசுகிறீர்கள்?
ஒரு சின்ன கேள்வி அதற்கு மட்டும் விடை தாருங்கள்…(கூட்டத்தில் நான் கேட்ட கேள்வியும் அது தான்)
கடந்த சில நாட்கள் பேப்பரை பார்த்தீர்களா?
செருப்பால் மிதித்த ஆசிரியர்கள்…! சாதி சொல்லி திட்டியதால் செருப்பால் மிதித்தோம். பாலியல் தொந்தரவு தரும் ஆசிரியர் (ஐந்தாம் வகுப்பு) . மாணவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்ட ஆசிரியர். மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கும் படைத்த பேராசிரியர்…
இப்படி தினம் தினம் ஒரு ஆசிரியர் பெயர் அடிபடுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என யாரும் ஒட்டு மொத்த ஆசிரியருக்கு ஒரு கவுன்சிலிங் பயிற்சி தந்தார்களா…? எந்த பெற்றோரும் ஒட்டு மொத்த ஆசிரிய சமுகத்தை சாடினார்களா? யாரும் ஆசிரியரை அடிக்கும் உரிமையை கேட்டார்களா? இல்லை நீங்கள் தான் மாணவர்களை அடிக்காமல் இருக்கிறீர்களா?
புரியவில்லை ஆசிரியர்களின் நியாயம்..? யாராவது எனக்கு புரிய வைப்பார்களா? ( அத்துடன் வாயை அடைத்து தேவையில்லா விவாதம் என மனவெழுச்சி அடைந்து மனவெழுச்சி பற்றி நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்)
7 comments:
நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே யாரும் தொட பயப்படும் விஷயங்கள். இங்கு recognize the elephant in the room என்பார்கள். அதாவது, எல்லோருக்கும் தெரிந்த, எல்லோரும் விவாதிக்க தயங்கும் விஷயத்தை முதலில் பகிரங்கமாக எல்லோரும் ஒத்துக்கொள்வது. அதன் பிறகு அதை பற்றி பேசினால் நல்ல தீர்வுகள் வெளிப்படும். I wish we could do something similar.
பெரும்பான்மையான கூட்டங்கள் இப்படி புரிதல் இன்றிதான் நடக்கிறது. ஆசிரியர் பணி என்பது சமூதாயத்தின் அடிப்படை கட்டுமானப் பணி என்பதுதான் எனது எண்ணம். கட்டுமானத்தில் தவறு நடைபெரும்போதுதான், சமூதாயம் சீரழியத் தொடங்குகிறது. தங்கள் உயர்வு நிலை புரிந்து கல்விப் பணியாற்றும் கல்வியாளர்கள் அருகிக் கொண்டேதான் செல்கிறார்கள். இதில் இன்னொரு வேதனையும் இருக்கிறது, ஆசிரியரை மட்டுமே நாம் குறை சொல்லிவிட முடியாது.
நல்லதொரு அவசியப் பகிர்வு.
விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன!
உண்மையில் யோசிக்க வேண்டிய விசயங்கள்தான். ஆனால் யோசிக்கவேண்டியவர்களுக்கு அது இன்னும் புரிபடாமல் இருப்பதுதான் வினோதம். அல்லது புரியாததுமாதிரி நடிக்கிறார்களா என்றும் தெரியவில்லை.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
அன்பின் சரவணன் - ஆதங்க்ம புரிகிறது - ஆசிரியர்களுக்கும் ( ஒரு சில ) கவுன்சலிங் தேவைதான் - ஆனால் மாணவர்களுக்கு அதிகம் ட்தேவை என நான் நினைக்கிறேன். - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சரவணன்,
மாணவர்களுக்கு மட்டும் என்றில்லை அனைவருக்கும் கவுன்செலிங் கொடுக்கும் நடைமுறை வேண்டும், இந்த நடைமுறை அயல்நாட்டில் எல்லாம் சர்வசாதாரணம் இங்கே மனோத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்றால் மன நிலைப்பாதித்திருக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறை.
5 பாடங்களில் 3 இல் நல்ல மதிப்பெண்ணும் ,2 இல் சுமாராகவும் மதிப்பெண் எனில் இங்கே பெற்றோருக்கு தாக்கீது போகும் பெற்றோர் மாணவனை அடித்து படிக்க சொல்வார்(ஏதேனும் ஒரு தண்டனை) அது தான் மண்ணடி மாணவன் பிரச்சினையிலும் நிகழ்ந்தது, அதுவே வெளிநாட்டில் என்றால் உளவியல் ஆலோசனைக்கு பரிந்துரைப்பார்கள்.
இங்கே இன்னும் கட்டுப்பெட்டியாகவே இருக்கிறோம். உளவியளாக எதையும் அனுகுவதில்லை.
மாணவர்களைப்போன்றே ,பெற்றோர், ஆசிரியர், தொழிலாளி என அனைவருக்கும் அங்கே ஆலோசனைகள் உண்டு.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி என்று அவ்வப்போது நடத்தி இன்றைய கல்வியின் நிலையை அப்டேட் செய்வார்கள் ,ஆனால் வழக்கம் போல ஏதோ ஒரு மீட்டிங்க்னு போய் தூங்கிட்டு வராங்க :-))
அண்ணாப்பல்கலை மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் மற்றும் கல்வி மையம் என தரமணியில் உள்ள ஒரு அரசு நிலையம் மூலம் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கும் பயிற்சி &ஆலோசனை நடக்கிறது எல்லாம் போண்டா ,டீ குடிச்சுட்டு ,கலந்துக்கொண்டேன் என்று சான்றிதழ் வாங்கிட்டுப்போயிடுறாங்க.
எந்த, ஒருமாணவனும் ஆசிரியர் அவனுடைய
நன்மைக்காகவே தண்டிக்க முற்படுகிறார்
என்று உணரச் செய்தால் எப் பிரச்சினையும்
வராது என்பதே என் முப்பதாண்டு ஆசிரியர்
பணியில் நான் கண்ட, கொண்ட அனுபவம்!
சா இராமாநுசம்
Post a Comment