கதவுகள் அற்ற கழிப்பறை சுவர்களில்
கிறுக்கல்கள்
எதோ உளறல்கள் என
அவ்வளவு எளிதாக
எடுத்துக் கொள்ளக் கூடாது
பெயர்களுக்கு பின்னால்
சூட்டப்படும் 9 என்ற இலக்கம்
வகுப்பறைகளில்
ஆசிரியரின் இயலாமையை குறிக்கிறது…!
பெயர்களுக்கு பின்னால் வரும்
மூன்று இலக்க கெட்ட வார்த்தை
குறி சொற்கள்…
குறிக்கோள் இன்றி செயல்படும்
ஆசிரியரின் செயலுக்கு கிடைத்த வெகுமதியாகும்…!
ஆண் பெண்
பெயர்களின் இணைப்பு
மாணவர்களுடன் இணைப்பி
இன்றி செயலாற்றிய
ஆசிரியருக்கு கிடைக்கும் சான்றிதழ் ...!
பெயருக்குள் ஆர்டின்
துளைக்கும் அம்பு …
மாணவன் மனதை அம்பாய்
துளைக்கும் ஆசிரியருக்கு கிடைக்கும் வெகுமதி…!
கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
இன்னும் மாறாமல் அதே விதம்..
எத்தனை முறை வெள்ளையடித்தாலும்
கழிப்பறை சுவர்கள்
ஏதோ ஒரு மாணவனின்
மனக்குமுறலுக்கான
கிறுக்கலுக்காக
காத்துக்கிடக்கின்றன….
14 comments:
தலைவரே...
நம்ம ஆளுக கை சும்மா இருக்காதே... எப்போதும் எங்கேயும் கிறுக்கல்கள் தான்....
தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு....
மாணவர்களின் கிறுக்கல்கள் கட்டுப்படுத்த முடியாத மனதின் வலிகளாகவும் களையமுடியாத வக்கிரகங்களையும் காட்டியே நிற்கும் . அருமையான கவிதை .
மனக்குமுறல்கள் என்ன என்றுகூடக் கண்டுபிடிக்க உதவ்ம் இந்தக் கிறுக்கல்கள் !
அன்பின் சரவணன் - அக்காலம் தொடங்கி இன்று வரை இக்கிறுக்கல்கள் தடுக்கப்படவில்லை. ஒரு வடிகாலாக இருக்கும் கிறுக்கல்கள் அக்காலத்தில் அளவு மீறுவதில்லை. இன்றோ.......... - மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் வாரம் ஒரு முறை நடத்த வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சொல்ல மறந்துட்டேனே - கிறுக்கல்கள் நல்லாவே இருக்கு
கிறுக்கல்கள் கண்ணாடி பிம்பங்கள் போல்..
அன்றைய மனநிலையை அப்பட்டமாய் உணர்த்தும்.
சிலகாலம் கழித்து அதை திரும்ப படிக்க நேர்ந்தால்..
கிறுக்கியவரையே சிரிக்க வைக்கும்..
கிறுக்கல்கள் நாளைய நினைவுச் சின்னம் கூட ..
அருமைங்க .
கிறுக்கல்கள் நிச்சயம் வெறும் கிறுக்கல் அல்ல !
மகேந்திரன் சொல்வது சரிதான்...கிறுக்கியவரையே சிலகாலம் கழித்து சிரிக்க வைக்கும்
கவிதை நினைத்தால் கழிவறையையும் வாசம் வீச செய்யும் என்பதற்கு இது ஒரு அற்புத உதாரணம் .அருமை கவிதை வாழ்த்துகள்
விருது குறித்த என் பதிவுக்கு மௌனம் ஏனோ சரவணன்.?
வணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி!
அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
வலைச்சரத்தில் கவிதை சரம்
Post a Comment