Wednesday, February 15, 2012

தவிப்பு



முகம் கழுவி
அமர்ந்து
புத்தகம் விரித்து
அறிவியல், கணக்கு
தமிழ் , வரலாறு
ஆங்கிலம் என எல்லாம்
முடித்து ….
காத்திருக்கிறாள்
தந்தையின் வருகைக்காக
நாட்குறிப்பில் கையொப்பம் பெற…!

6 comments:

மகேந்திரன் said...

அந்தப் பருவத்துக்கான
கொஞ்சம் சிரமமான தவிப்பு தான்...
நாட்குறிப்பைப் பார்த்துவிட்டு
என்ன இது கையெழுத்து மோசமா இருக்குது...
எதுவுமே முழுசா எழுதமாட்டியா...
இப்படி ஏகப்பட்ட தொல்லையான கேள்விகள் வரும்....

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் அந்த தலைப்புக்கான அழகான
விளக்கமாக கவிதையும் மிக மிக அருமை
மனம் கவார்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அழகு.

MaduraiGovindaraj said...

உண்மை மொழி

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - தவிப்பு - உண்மை - நாட்குறிப்பில் கையொப்பமிடும் தந்தை மகிழ்வுடன் இட்டால் சரி - அதென்ன இதென்ன சரியில்லையே எனச் சலித்துக் கொண்டு கையெழுத்திட்டால் ...... பாவம் மகள் ...... நல்ல கவிதை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment