பூட்டப்பட்ட கதவுக்கு
கனவுகள் திறவுகோல்கள்
இரவுகளின் உறக்கங்களில் திறப்பவை
பகலின் வேதனைகளுக்கான கதவின் கைபிடிகள்
தட்டாமலே திறந்து கொள்கின்றன….
புறக்கண்கள் மூடும் போது
வெளிச்சத்தை புறக்கணித்து
இருளில் திறந்து கொள்கின்றன…
அலைக்கற்றை ஜாமீன் போல்
எதிப்பார்ப்புகள்….
பரபரப்புகள்..
பதற்றங்கள்….
பீதிகள்… என எதுவும் அற்ற
சந்தோசத்தை தரும் கனவுகளுக்கான
சாவிகளை தேடிக் கொண்டு….
பூட்டிய அறைக்குள்
இருபதாம் நூற்றாண்டின் பெண்கள்….
”சாவியே இல்லாத கதவு என ஒன்றும் கிடையாது”
என்ற நம்பிக்கையுடன்…!
4 comments:
கவிதையில் அலைக்கற்றை ஜாமீனை நுழைத்தீர்கள் பாருங்கள்... கிளாஸ்...
////சந்தோசத்தை தரும் கனவுகளுக்கான
சாவிகளை தேடிக் கொண்டு….
பூட்டிய அறைக்குள்
இருபதாம் நூற்றாண்டின் பெண்கள்….
”சாவியே இல்லாத கதவு என ஒன்றும் கிடையாது”
என்ற நம்பிக்கையுடன்…!
///// அருமையான வரிகள் பாஸ்
கனவுகள் ஆண்களுக்கில்லையா.?நீண்ட இடைவெளிக்குப்பிறகு பதிவு.... உடல் நலம்தானே.?
என்னவோ சொல்ல வரீங்க.. ஆனா என் மண்டைக்கு தான் எட்ட மாட்டேங்குது...
Post a Comment