Friday, December 10, 2010

பெங்களூரில் சரவணன்.....

சென்ற வாரம் எனக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு ....அழைப்பு என்பதை விட பொன்னான வாய்ப்பு . ஆம் பெங்களூர் சென்று குழந்தைகளுக்கு ஆங்கிலம் எளிய முறையில் கற்று தருவது எப்படி? என்பது குறித்து ஒருமாதம் பயிற்சிக்கு செல்ல ஆணை பிறப்பித்தனர். உடல் நலம் குறைவாக இருப்பதாக ஒரு உணர்வு ஏற்படவே முதலில் மறுத்தேன் . பின்பு ஆசிரிய பயிற்றுனர் தங்களைப்போன்ற உண்மையான குழந்தைகளுக்கு அவர்கள் வழியில் எளிமையாக ஆங்கிலம் போதிக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள் சென்றால் தான் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று ஒரு வித ஆர்வத்தை தூண்டி அனுப்பி வைத்தனர். வாரத்தின் முதல் நாள் திங்கள் ஆறு டிசம்பர் காலை மடி வாலா அருகில் உள்ள என் மைத்துனன் வீட்டில் சென்று குளித்து காலை உணவு அருந்தி விட்டு பெங்களூர் யுனிவர்சிட்டிக்கு சென்றேன்.




   பெங்களூர் யுனிவர்சிட்டியில் யுனிவர்சிட்டி மைதானம் அருகில் உள்ள ரிஜினல் இன்ஸ்டிடுட் ஆப் இங்கிலிஸ் ஃபார் சவுத் இந்தியா அடைந்தேன். அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது , இது கர்நாடக, பாண்டிச்சேரி,மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ள துவக்கப்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி கற்பித்தலுக்கான பயிற்சி. சுமார் எழுபத்து ஐந்து ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்தனர். முதல் நாளிலே நான் அனைத்து ஆசிரியர்களுடனும் ஒன்றி விட்டேன். கார்நாடக மக்கள் அருமையாக நம்முடன் பழகுவதை பார்க்கும் போது காவேரி மட்டும் அரசியல் பிரச்சனை என்பது போல தோண்றுகிறது. மொத்தம் இருநூற்றி பத்துக்கும் மேற்பட்ட மூன்று மாநிலத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.    



  பெங்களூர் என்றவுடன் அம்மக்களின் பொறுமை தான் எனக்கு நினைவில் நிற்கிறது. நான் மாடிவாலா அருகில் உள்ள பிடிஎம் பஸ் ஸாடாண்டு அருகில் ஐநூறு எண் கொண்ட பேருந்தில் யுனிவர்சிட்டி கேட்க்கு டிக்கெட் எடுத்தேன் . நான் செல்லும் வழியெங்கும் டிராபிக் , யாரும் எதற்கும் கோபப்படாமல் , பொறுமையாக அவரவர் புத்தகம் படித்துக் கொண்டும், லேப் டாப்பில் வேலை செய்துக் கொண்டும், காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டும் பயனித்தார்கள்.  




இதே நம் ஊர் என்றால் யாரும் சிக்னலில் நிற்பதும் கிடையாது, பொறுமையைக் கடைப்பிடிப்பதும் இல்லாமல்,பேருந்தில் பயணிக்கும் நம்மவர் இவங்களுக்கு வேலையே இல்லை என தம் லேக்கல பாஷையில்
திட்டுவதுடன் ஓட்டுனர் (டிரைவர்)நடத்துனர்( கண்டக்டரை) ஒரு வழி செய்திருப்பார்கள். நம்மவரிடம் சிக்னலில் நிற்கும் பொறுமை, சிக்னலை கடைப்பிடிக்கும் பக்குவம் ,பேருந்து ஓட்டுனரை அமைதியாக போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க செய்து ஓட்டச் செய்யும் பக்குவம் இல்லை.
 

எங்கு சென்று எதைக் கேட்டாலும் உடனே புரியும் படி ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் பதில் கிடைக்கிறது. படித்தவர் , படிக்காதவர் , விவசாயி, கணினி தொழில் நுட்ப வல்லுநர் என பாகு பாடு இன்றி அனைவரும் உடனே உதவுகின்றனர். நமக்கும் புரியும் எந்த மொழியிலும் பதில் அளிக்கின்றனர்.    ஆனால், சென்னையில் தமிழனாகிய எனக்கே சிலர் பதில் தெரியாது என மழுப்பி நழுவிய சம்பவமும் உண்டு. பிற மாநிலத்தவர்கள் பாவம் என்று தான் தோண்றுகிறது . இதற்கு பின்பு நம் மொழி கொள்கையும் காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.



  தமிழ் நாட்டில் நாம் இரு மொழிக் கொள்கையை கையாளுகின்றோம். ஆங்கிலம் மற்றொன்று தமிழ். ஆனால் , கர்நாடகாவில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றனர். ஆகவே, அவர்களுக்கு நாம் கேட்கும் எதையும் புரிந்துக் கொண்டு உடனே பதில் அளிக்கின்றனர். நாம் தமிழ் மீது உள்ள பற்றினால், ஆங்கிலத்தை முறையாக கற்று ,நடைமுறைப்படுத்தாதனால், ஆங்கிலம் தெரிந்தும் நம்மால் நமக்குத் தெரிந்த விடையை வினா எழுப்பியவரிடம் அதனை பகிர்ந்துக் கொள்ள இயலவில்லை.
நாம் தமிழில் கூறினாலும் அவர்களுக்கு புரிய போவதில்லை என்பதால் நாம் சொல்ல தயங்குகிறோம் என்பது என் கருத்து.
 
       தற்சமயம் உடல் நலம் சார்ந்த உபாதைகளுக்காக மருத்துவம் பார்க்க மதுரை வந்துள்ளேன். வரும் திங்கள் முதல் அடுத்த வருடம் ஜனவரி நான்காம் தேதி வரை பெங்களூர் யுனிவர்சிட்டியில் தங்கி யிருப்பதால், பெங்களூரில் உள்ள பதிவர்களை நான் சந்திக்க விரும்புவதால் தயவு செய்து ஒரு சந்திப்பை  ஏற்படுத்தலாமே....!  காத்திருக்கின்றேன்.

14 comments:

ம.தி.சுதா said...

நல்ல அனுபவம் போல கலக்குங்க

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Prabu M said...

பெங்களூர் மக்கள் டிராஃபிக் ஜாமுக்குப் பழகிவிட்டார்கள்...

Chitra said...

விரைவில் குணம் அடைந்து, மேலும் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்!

Umapathy said...

:)

பேருந்து ஓட்டுனரை அமைதியாக போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க செய்து ஓட்டச் செய்யும் பக்குவம் இல்லை.

நச்!

ஸ்ரீராம். said...

சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்த்துக்கள். பெங்களூரு பயணம் சிறக்கட்டும்.

Philosophy Prabhakaran said...

நிறைய வலைப்பூக்களை பின்தொடர்ந்து வரும் நான் உங்கள் வலைப்பூவினை எவ்வாறு தவற விட்டேன் என்று விளங்கவில்லை... தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்... இனி பின்தொடர்கிறேன்...

pichaikaaran said...

மொழி விஷயத்தில் பெங்களூருக்கு நிகர் பெங்களூர்தான்

G.M Balasubramaniam said...

தற்சமயம் நான் சென்னை வந்துள்ளேன். மாத இறுதியில் பெங்களூர் திரும்புவேன்.பிறகு உங்களை தொலைபேசியில் அழைக்கிறேன். நல்வரவு. நிறையப் பேசலாம்.

ஆமினா said...

//ம் நம்மால் நமக்குத் தெரிந்த விடையை வினா எழுப்பியவரிடம் அதனை பகிர்ந்துக் கொள்ள இயலவில்லை.
நாம் தமிழில் கூறினாலும் அவர்களுக்கு புரிய போவதில்லை என்பதால் நாம் சொல்ல தயங்குகிறோம் என்பது என் கருத்து. //

உண்மை தான்.

விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறேன்

சிவராம்குமார் said...

மொழி, இன, மத ரீதியான எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அரசியல்தான் சரவணன்! உடல் நலம் மிக முக்கியம், கருத்தில் கொள்ளுங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_10.html

நன்றி!

மாதேவி said...

நலமுடன் பயணம் தொடரட்டும்.

அன்பரசன் said...

நல்ல அனுபவம்

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - வெற்றிகரமாக முடித்துத் திரும்பி விட்டீர்கள் - பெங்களூரில் பதிவர் சந்திப்பு நடந்ததா ? நல்வாழ்த்துகள் சரவணன் - நட்புடன் சீனா

Post a Comment