“சார் , சிஸ்டர் உ ங்களிடம் எதோ கூற வேண்டுமாம் ...”என சிரித்துக்கொண்டே ஒரு தாளையும் என்னிடம் தந்தார்.
சாதாரணமாக யாரையும் அழைத்துக் கொண்டு வர மாட்டார். எனவே, எதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டு தாளை பிரித்துப் படித்தேன்.
தாளில் என்னவென்று பிரித்துப்படிக்கும் முன்பே மற்றொரு ஆசிரியப்பயிற்சி மாணவி மூன்று மாணவர்களை அழைத்து வந்தார்.
“சார், இவங்க மூன்று பேரையும் விசாரிங்க ...இந்த வயசிலேயே லவ் லெட்டர் கொடுக்குறாங்க சார்...”
”அதுவும் சிஸ்டர் பாடம் நடத்தும் போது கொடுக்கிறாங்கலாம்... “என மூத்த ஆசிரியர் நக்கல் அடிக்க ...எனக்கு சிரிப்பு வந்தது.
”சார் , நான் கிளாஸ் எடுக்கும் போது இந்த சாருக் எதோ பேப்பரை வைத்துக்கொண்டு விளையாடினான்..நான் என்ன என்று கேட்ட போது ரெம்ப கேசுவலாக லவ் லெட்டர் என்று சொல்லுறான்...”என்றார் சிஸ்டர்.
மூவரில் ஒருவன் அழுகத்தொடங்கினான்...
”என்னடா....ஏன் அழுகிறாய்.... உன்னை என்ன திட்டவா... செய்தேன்...”
“நான் அப்பவே சொன்னேன் சார்...சார் ஒண்ணும் திட்டமாட்டாங்கண்ணு..” என்றான் சாருக்.
”பாத்தீங்களா சார்... ஒரு பயமும் இல்லை... ஒரு சாத்து சாத்துங்க...”என்றார் ஆசிரியர்.
“உங்க கிளாஸ் டீச்சருக்கு தெரியுமா...?”
“சார் ... வினோத் செல்வராணியை லவ் பண்ணும் போதே போட்டு கொடுத்துட்டான் சார்... “
“சரி...டீச்சர் என்ன சொன்னாங்க...”
“லவ்...பண்ணுரது தப்புன்னு சொன்னாங்க...” சாருக் அருகில் இருந்த மணி சொன்னான்.
“அது சரி ..சாருக்.. இப்ப இது என்ன திரும்பவும்... ’எனக் கூறிக் கொண்டே காகிதத்தைப் பார்த்தேன்.
அதில் இரு உருவங்கள் வரையப்பட்டு அதற்கு மேல் ஆர்டின் வரைந்து செல்வ ராணி , சாருக் காதல் என எழுதி இருந்தது. அருகில் இன்னும் ஒரு படம் வரைந்து வினோத் , கவிதா என எழுதி இருந்தது.
வினோத் அழத்தொடங்கினான்.
“யேய்...அழுகையை நிறுத்து... இல்ல அடிச்சுப்புடுவேன் ....” எனக் கூறிக் கொண்டே என் மேசையில் வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து சாருக்கிடம் கொடுத்து...”வெரி குட் ... உண்மையை சொன்னதற்கு....இது தப்பா..? தப்பு இல்லையா ...?”என்றேன்.
பதில் எதுவும் சொல்லாமல் முழித்தான்.
“இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசினே... இப்ப என்ன யோசிக்கிற... “
“இல்ல சார்.. இத நான் எழுதல... வினோத் தான் வரைந்தான்..”
“இல்ல சார்.. என் அக்கா( நா ன்காம் வகுப்பு) தான் சொன்னா...”
“ஓ..இது குடும்பம் வரைத் தெரியுமோ....?”
“சார் ..அவ அக்கா தான் கொடுக்க சொன்னாலாம்...”என்றார் பயிற்சி பெற வந்த ஆசிரியர்.
”சாரி ...சார் ” என்றான் ,மணி.
”பார்த்திய மணி ..தப்புன்னு தெரிஞ்சதும் ...சாரி கேட்கிறான்” என்று சொல்லிக் கொண்டே அவனுக்கும் சாக்லெட் வழங்கினேன்.
“சார்... செல்வராணி முதல்ல என்னைத் தான் சார் பார்த்துச்சு ...இவன் (வினோத்)தப்பு தப்பா எதோ சொல்ல இப்ப இவனை பாக்குது சார்...”என்று அப்பாவியாக சொன்னான் மணி.
”என்னடா கிளாசு நடக்குதா...வேறு எதுவுமா.. டீச்சர் எதுவும் ஸ்பெசல் கிளாஸ் எடுக்கலைல்லா...” என்றார் மூத்த ஆசிரியர்.
“டீச்சர்... எல்லா பயலுக்கும் ஒரு பிள்ளை இருக்கு.... யாருமே லவ் பண்ணாம இல்ல... “
“அடப்பாவிகளா ... “ என சிஸ்டர் அதிர்ச்சி யுற்றார்.
“பாவம் பசங்க... எண்டா.. சாருக் ... இது தப்பு இல்லைன்னு தெரியும்லா... அது நாலாத்தானே .. எல்லாரும் லவ் பண்ணுறீங்க.... வினோத் உன் அக்கா நல்லா படிக்கணும்ன்னு பேனா அன்பா வாங்கி கொடுப்பையில்லா... “
“நான் இரண்டாவது ராங் எடுத்தேன்னு எனக்கு ஒரு பைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கி கொடுத்துச்சு.... அப்புறம் எங்க அப்பா பேக் வாங்கி தந்தாங்க சார்..”
“இது எல்லாம் உன்னை உங்க அப்பாவும், உங்க அக்காவும் லவ் பண்றதாலத்தான் ... உனக்கு பிரியமா செய்யுறாங்க.. அதுனால லவ் பண்ணுறது தப்பு இல்ல..ஆனா பேப்பரில எழுதி பேரை எழுதி வரைந்து விளையாடுறது தான் தப்பு.... புரியுதா...என்ன சாருக் இப்ப சொல்லு ... எல்லாரும் லவ் பண்ணலாம்லா..”
“ சார்.... லவ் பண்ணக் கூடாது சார்.... “ என்றான் மணி .
“அப்ப தப்புன்னு சொல்லு..” என்றேன்.
“சாரி சார்...இனிமே இப்படி எழுதி விளையாட மாட்டேன். “ சாருக் .
“வினோத் ,,, இது வயசு இல்ல .. இனிமேல் இப்படி படம் வரையாதே... உனக்கு படம் வரைய ஆசை யிருந்ததுன்னா...இங்க வா... உனக்கு படம் வரையத் தருகிறேன்..” என்றேன்.
“சாரி சார்... இனிமே செய்ய மாட்டேன்...”வினோத்.
“ இனிமே உங்களுக்கு லவ் பண்ணணும்னு தோணுச்சுன்னா... ஹெச் சம் சார
லவ் பண்ணுங்கடா..” என்றார் மூத்த ஆசிரியர்.
அனைவரும் சிரித்துக் கொண்டே.... “சாரி சொல்லி கிளம்பினர்.
சிஸ்டரும், பயிற்சி ஆசிரியரும் ஆச்சரியத்துடன் என்னை பார்த்து....”சார் .. நீங்க அடிச்ச்சிருந்தா.. கிளாசே லவ் பண்ணுறது தெரிந்து இருக்காது... அதுவும் அவர்களுக்கு அதட்டாமல், அடிக்காமல் உணர்த்தி யுள்ளீர்கள் “ என என்னை புகழ்ந்தாலும் என் மனம் ஒரு கேள்வியுடன் இதை எழுதச் செய்தது.
முதல் வகுப்பு தாண்டிய நிலையில் பிஞ்சு மனதில் ஆண் , பெண் பேதம் பிரித்து, தவறான பால் உணர்வைத் தூண்டி , காதல் என்ற பெயரில் அநாகரீகச் செயலை எது தூண்டி விடுகிறது ? இது நம் கல்வி முறையில் ஓட்டையா...? இல்லை இத் தவறைக் முறைப்படி ஆரம்பத்திலேயே கண்டிக்க தவறிய ஆசிரியரை குறைக் கூறுவதா.. தொடர்ந்து கண் காணிப்பு தேவை என்பதை மறந்துவிட்ட ஆசிரியப் பணியை சாடுவதா....? நம் தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆசிரியரை விட விரைவாக குழந்தைகளை மூளைச் சலவை செய்வதை கண்டிப்பதா..? பெற்றோர்கள் தம் குழந்தைகள் முன் பாலியல் சார்ந்த பேச்சுக்கள் , செயல்கள் செய்வதால் ஏற்படுகிறதா...?
இது பொதுவாக நான்காம் , ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை ஆனால் , அது இரண்டாம் வகுப்பிலே தொடங்கி அந்த வகுப்பு முழுவதும் ஆட்கொண்டுள்ளது என்றால் எதைக் குறைச்சொல்லுவது...? புரியாத இந்த புதிருக்கு எனக்கு உதவி செய்யவும்.
18 comments:
குழந்தைகளிடமும், மாணவர்களிடமும் பிரச்சினை இல்லை
ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடம்தான் பிரச்சினை இருக்கிறது
இன்றைய சினிமா, டி.வி. போன்றவற்றிற்கு இதில் முக்கிய பங்கு உண்டு. சினிமா தணிக்கை குழுவில் ஒரு நல்லாசிரியரும் ஒரு பேராசிரியரும் இடம் பெற வேண்டும். ( இப்போதே இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ) ஏனனெனில் அவர்கள் மட்டுமே இன்றைய தலைமுறையினரையும் அவர்களைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளையும் நன்கு அறிவார்கள். இன்னும் டி.வி. நிகழ்ச்சிகளுக்கென தணிக்கை குழு நிறுவப் படாதது வருத்தத்துக்குரியதே.
உங்களைப் போன்ற பொறுப்பு மிக்க ஆசிரியர்கள் நிறைய தேவை இன்றைக்கு. பெருமையாக இருக்கிறது சரவணன். மதுரைக்கு வரும் போது உங்களையும் உங்கள் பள்ளியையும் கண்டிப்பாக சந்திக்கிறேன்.
இப்போது வரும் சினிமாக்கள் எல்லாம் பள்ளிக்கூட மாணவர்களைப் பற்றி வருவதும் ஒரு காரணம். அப்படிதான் இருக்க வேண்டும் என சாதாரண மாணவர்கள் நினைப்பதுண்டு..
//“டீச்சர்... எல்லா பயலுக்கும் ஒரு பிள்ளை இருக்கு.... யாருமே லவ் பண்ணாம இல்ல... “
//
நீங்க படிச்ச காலத்தில் எல்லாம் எப்படிங்க சார்?
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..
//உங்களைப் போன்ற பொறுப்பு மிக்க ஆசிரியர்கள் நிறைய தேவை இன்றைக்கு. பெருமையாக இருக்கிறது சரவணன். //
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..
domino effect,
butterfly effect,
chaos theory
ஏதோ ஒண்ணு
குழந்தைகளை டிவி பார்க்காமலோ சினிமா பார்க்காமலோ இருக்க வைக்க முடியாது.... ஒரே வழி... சிறு பிராயத்திலிருந்தே அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைப்பதுதான்...
ரெண்டாம் க்ளாஸ்லயா!!
இவ்ளோ அசாதாரணப் பேச்சு பேசுவது ஏழுவயசு பசங்களா?
நம்ப முடியல சார்... ஊடகங்களின் தாக்கம் இல்லாமல் இல்லை...
பெரியவர்களாகத் தங்களைக் கற்பனை செய்துகொண்டு அவர்கள் செய்வதையெல்லாம் தானும் செய்யும் விளையாட்டு ரொம்பவே கவருமல்லவா இந்தப் பிஞ்சுவயதில்...
பட் இதை ஹேண்டில் பண்ணுவது மிகவும் சிக்கல்... நீங்கள் உங்க டீச்சர்களையும் எஜுகேட் செய்யணுமே!
பகிர்வுக்கு ரொம்ப நன்றிசார்... தலசுத்துது!!
எல்லாம் பிஞ்சில பழுத்துவிட்டததுகள்....
எல்லாம் நமது திரைப்படங்கள் வழிகாட்டுவது தான்..அறியாத வயசு..புரியாத மனசு ரெண்டுமிங்கு காதல் செய்யும் நேரம்...
நீங்கள் மாணவர்களை புரிந்து இருக்கும் விதம் அருமை, எதை சொன்னா கேப்பன், அருமையான (நாட்டாமை) தீர்ப்பு. இதே நீங்கள் அடித்து பெற்றோரை வரவழைத்து இது குடும்ப சண்டையாகி பெரிய மதக்கலவரமே ஆகிவிடும்.
நன்றி.........
அந்தக்காலத்தில் சின்ன வயதில் அம்மா-அப்பா என்று குடும்ப விளையாட்டு விளையாடியதுண்டு. ஆனால், இந்தக் காலச் சிறுவர்கள் - அறியாமல்தான் செய்கிறார்கள். டிவி, சினிமா பாதிப்புதான். பெற்றோர்களும் குறைத்துக்கொள்ள/ தவிர்க்க வேண்டும்.
இப்போது சினிமாக்களில் நாயகனும் நாயகியும் லவ் செய்வதுதானே பிரதானக் காட்சிகள். வரவேற்பரையிலேயே சினிமா. குழந்தைகள் பாதிக்கப் படுவது ஆச்சரியமில்லை.பெற்றோர் ஆசிரியர் பொறுப்பு கூடுகிறது.
பெற்றோர்களுக்கான ஒரு விழிப்புணர்வு.
’முட்டாள் பெட்டி’யின் மறுக்க இயலாத தாக்கம்!பெற்றோர் இதை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.
நல்ல பதிவு!
அன்பின் சரவணன் - இரண்டாம் வகுப்பு மாணவர்களா ? இப்படியும் நடக்கிறதா ? என்ன வென்றே தெரியாத அறியாத வயதில் இதெல்லாம் நடக்கிறதா ? ம்ம்ம்ம் - துவக்கப்பள்ளிதானே என அல்ட்சியமாக இல்லாமல் அழகாக - பிரச்னையைக் கையாண்ட விதம் நன்று - நன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment