வெகு நேரம் அழகரை தரிசிப்பது போல வரிசையில் நின்று கண்காட்சி அரங்கை அடைந்தோம்.
காலை பத்துமணிக்கு நுழைவு வாயிலில் டிக்கெட் எடுத்து , பதினொன்று நாற்பது மணிக்கு தான் அரங்கை பார்வையிட விட்டார்கள் என்பது கண்காட்சி நடத்துபவர்கள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் , மாணவர்களின் அறியாமையை அறிய உதவியது. இது தான் தியேட்டர்டா... எவ்வளவு பெரியதாக இருக்கிறது..? இது தாண்டா பெரிய ஆஸ்பத்திரி...! டேய்... ஏ.சி. எல்லாம் இருக்குடா...? இங்க படம் காட்டுவாங்கடா...? என நான்காம் வகுப்பு மாணவர்கள் பேசும் பேச்சுக்களை கேட்க சுவையாக இருந்தாலும் , அவர்களின் அறியாமை என்னை சிந்திக்க வைத்தது. என்னுடன் வந்த ஆசிரியர்களில் இருவர் மட்டுமே மாணவ்ர்களுடன் பேசிக் கொண்டு , அவர்களின் அறியாமையை மாற்றிக் கொண்டு வந்தனர். மற்ற இருவர் நெடுநேரம் காக்க வைத்த கடுப்பில் மனதினுள் வசவு பாடிக் கொண்டு இருந்தனர்.
ஒரு வழியாக அரங்கை அடைந்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு கட்டுப்பாடு இல்லாமல் அங்கும் இங்கும் என மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வந்தனர். ஒரு பள்ளி ஒரு வழியாகவும் , அதன் எதிர்புறம் மற்றொரு பள்ளியின் மாணவர்களும் வந்து எதிர்வேவைப் போல முட்டி மோதி வருவதாகவே இருந்தது.
கையில் நோட்டுடன் நோட்ஸ் எடுப்பதால் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய எம் பள்ளி மாணவர்கள்
மாணவர்கள் வரிசையில் சென்றாலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டததை வெளியில் அனுப்ப , பாதை மாற்றி பார்வையிட வைத்ததே அத்தனைக் குழப்பங்களுக்கும் காரணமாக இருந்தது. பல தெர்மோக்கூல் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. பிளக்ஸ்சில் செய்தியை அச்சிட்டு வைத்து இருந்தனர். (ஒரு வேளை செல்லூர் அருகில் மருத்துவர் கல்லூரி இருப்பதால் பிளக்ஸ் அதிகமோ!)இவை மருத்துவ கல்லூரி கண்காட்சி தானா என மாணவர்களை ஐயம் கொள்ளச் செய்தது. பலர் இதை எம்பள்ளி மாணவர்கள் செய்து காட்டுவார்களே என ஆசிரியர்கள் பேசக் கேட்டேன்.
எது எப்படியோ என் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி , மருத்துவப்படிப்பு மீது ஒரு வித பிடிப்பை எற்படுத்தி வந்த திருப்தி.
அது போல எந்த கண்காட்சி சென்றாலும் குறிப்பு எடுக்க சொல்லி பழக்கிய பழக்கம் எம் பள்ளி மாணவர்களை நான் சொல்லாமலே கையில் நோட்டை தூக்கிக் கொண்டு வரும் அழகு என்னையே ஆச்சரியப்படுத்துகிறது. மேலும் பலர் இதை வியந்து பார்த்தது , எந்த பள்ளி எனக் கேட்டது , எம் மாணவர்கள் பல டாக்டர்கள் , மருத்துவ மாணவர்களுடன் உரையாடியது எல்லாம் எனக்கும் என் பள்ளிக்கும் பெருமை சேர்பதாகவே இருந்தது.
மருத்துவக்கல்லூரி இருக்கையில் எம் பள்ளி மாணவர்கள் அமர்ந்து இரத்த தானம் பற்றிய குறும் படம் பார்க்க காத்திருக்கின்றனர்.
இவ்ர்களில் பத்து பேர் மருத்துவரானாலும் எங்களுக்கு லாபமே என் எம் பள்ளி ஆசிரியர்கள் சொல்லியது எனக்கு மன நிறைவை தந்தது.
7 comments:
இந்த மாதிரி கண்காட்சிகளுக்கு அழைத்துச்செல்லும் முன் ஆசிரியர்கள் பார்வையிட்டு வந்தால் மாணவர்களுக்கு விளக்க உதவும் என்பது என் எண்ணம்
வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி சார்...
ஏதோ பழைய ஞாபகம் எட்டிப் பாக்குதுங்க !
பழைய நினைவுகளை கிளரிவிட்டுடீங்க சரவணன் சார். நலம் தானே?
தங்களின் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஆசிரியரே...
தங்களின் மாணவர்கள் குறிப்பெடுக்கும் நிகழ்வை சொல்லி இருந்திர்கள்..
நல்ல பண்பு.. அது.. ஏதோ பார்த்தோம் வந்தோம் என்று இராமல் நல்ல பண்புகளை, ஒழுக்கங்களை வழங்கும் உங்களுக்கு, மற்றும் தங்களின் சக ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
//இவ்ர்களில் பத்து பேர் மருத்துவரானாலும் எங்களுக்கு லாபமே என் எம் பள்ளி ஆசிரியர்கள் சொல்லியது எனக்கு மன நிறைவை தந்தது.//
ராயல் சல்யூட் சரவணன் சார்..!!
மிக நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...!
தயவு செய்து எனக்கு போன் செய்யாதிங்க .....! ப்ளீஸ் .....
http://erodethangadurai.blogspot.com/
Post a Comment