Wednesday, November 17, 2010

உதிர்க்கும் பூக்களில்..

சரவெடி....

மொத்தமாக கட்டப்பட்டு 
ஒரு திரியாய் ..
வைத்த தீயில் 
வெடித்து சாம்பல் ஆகிறது...
எத்தைனையோ பிச்சுக்களின்
உழைப்பு ...
அவர்களின் கல்வியைப்போலவே...!


 கம்பி மத்தாப்பு


என் குழந்தையின் 
கையில் கம்பி 
பொறிந்த மத்தாப்பு 
கலர் கலராய் 
முடிவில் கருப்பாய் 
உருவாக்கிய 
குழதையின் கல்வியைப் போன்றே!







புஸ்வானம் 




சிறியவர் முதல் பெரியவர் 
வரை அனைவரையும் 
மகிழ்விக்கும் புஸ்வானம் 
உதிர்க்கும் பூக்களில்
பிச்சுக்களின் முகங்களே 
தெரிகிறது அதிகம்...!


ராக்கெட் 


ராக்கெட் பற்றி 
படிக்க வேண்டிய 
பிஞ்சுக்கள் 
கரி மருந்து திணிக்கிறது 
வானத்தில் வெடிக்க...
சில நேரங்களில் 
மூடப்பட்ட அறைகளில் 
வெடித்து சிதறும் வாழ்க்கை 
அபாயம் அறியாமலே....!













12 comments:

கவி அழகன் said...

நல்லா எழுதியுள்ளீர்கள்

வருண் said...

என்னங்க இவ்ளோ "பெஸ்ஸிமிசம்"? சிவகாசியில் குழந்தைகள் இதுபோல் பட்டாசு செய்யும் வேலைபார்ப்பதை சொல்றீங்களா?

'பரிவை' சே.குமார் said...

மனசைத் தொடும் கவி வரிகள்.

ஹேமா said...

குழந்தைத் தொழிலாளிகளை வைத்து எழுதிய கவிவரிகள் நல்லாயிருக்கு.எப்போதும் சமூகச் சிந்தனையோடு எழுதுகிறீர்கள் வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

சில நேரங்களில்
மூடப்பட்ட அறைகளில்
வெடித்து சிதறும் வாழ்க்கை
அபாயம் அறியாமலே....!//

வருந்த வைத்த வரிகள்.. சரவணன்

G.M Balasubramaniam said...

எழுதும் வரிகளில் மென்மையான சோகம்.என்ன செய்ய முடியும்.?

செ.சரவணக்குமார் said...

ராக்கெட் மிகப் பிடித்திருந்தது சரவணன்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அச்சச்சோ.... வெடி வெடிக்கும் போதெல்லாம்.. பிஞ்சு முகங்களின் நினைவு.. :(

ஒரே பீலிங்க்ஸ் ஆகி போச்சுங்க.. அருமையான பகிர்வு..

சுவாமிநாதன் said...

புஸ்வானம் பூக்களை உதிர்க்கும் முன் சிரிக்குமே ஒரு ஆணவச் சிரிப்பு அது பண முதலைகளின் ஆணவச் சிரிப்பு........

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃமுடிவில் கருப்பாய்
உருவாக்கிய
குழதையின் கல்வியைப் போன்றே! ஃஃஃஃஃ
அருமையான வரிகளுடன் அழுத்தமான கருத்துக்கள் வாழ்த்துக்கள்...

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமையான வரிகள் அழுத்தமான கருத்துடன். வாழ்த்துக்கள் சரவணன்.

Muthukumara Rajan said...

தற்போது சிவகாசியில் பட்டாசு
தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளிகள் பெரும் அவவுக்கு இல்லை உங்கள் விட்டு அருகில் பெட்டி கடையிலும் டீ கடைகளிலும் தென் அதிகம்

கவிதை எழுதும் நேரத்தை அதில் செலவு செயுங்கள்

தமிழுடன்
முத்துக்குமார்

Post a Comment