Wednesday, November 10, 2010

வகுப்பறைகள் நூலகங்களாக...



அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல் படும் செயல் வழிக் கல்வி இன்று மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக திகழ்கிறது. ஒன்றாம் வகுப்புக் குழந்தை செய்தித்தாள் வாசிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். மாணவர்கள் முதல் வகுப்பில் இருந்து எந்த திறனும் விடுபடாமல் முழுமையாக படிக்க வாய்ப்பை இக்கல்வி முறைத் தருகிறது .மாணவ்ர்களின் கற்றல் முறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது என்பதை விட ஆசிரியர்களை அதட்டும் நிலையிலிருந்து கீழே இறக்கி, மாணவர்களுடன் மாணவர்களாக உட்கார வைத்து உயர்த்தி இருக்கிறது. கல்வி மீதும் , கல்வி நிலையங்கள் மீதும் இருந்த பயம் நீக்கப்பட்டுள்ளது.


       வகுப்பறைகள் சரஸ்வதி குடியிருக்கும் மாளிகைகளாக மாற்றம் அடைந்துள்ளன. மாணவர்கள் அவரவரின் கற்கும் திறனுக்கு ஏற்ற வகையில் அட்டைகளை வைத்து , அவற்றை படித்துக்காட்டுவதைப் பார்க்கும் போது நமக்கு சந்தோசம் பிறக்கிறது. பெற்றோர்களிடத்தும் ஒரு வித மகிழ்ச்சி தென்படுகிறது. சக மாணவன் உதவி ஒரு சாதி பாகுபாடு அற்ற ஒரு சமுகத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கிறது.இதை கிராமங்களில் பார்க்கலாம். பிறருக்கு உதவும் மனப்பான்மையை மறைமுகமாக வளர்க்கிறது. 
   இன்று அனைத்துப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒரு நூலகமாக மாற்றம் அடைந்துள்ளன. நான் படிக்கும் காலத்தில் நூலகம் என்பது ஒரு தீண்டத்தகாத இடமாக கருதப்பட்டது. அது ஏதோ ஆசிரியர்கள் மட்டுமே செல்லும் இடம் எனவும் , அங்கு சென்றால் , யாரிடமும் பேசக்கூடாது என்ற அச்சத்தையும் உண்டாக்கி , நம்மை கடைசிவரை அண்டவே விடவில்லை. நான் கல்லூரி சென்ற பின்பே நூலகம் சென்றுள்ளேன். 
   
    ஆனால் இன்று ஒன்றாம் வகுப்புக் குழந்தை கதைப்புத்தகம்வாசிக்கிறது. தான் படித்தக் கதைகளை பிறருடன் பகிர்ந்துக் கொள்கிறது. இது எப்படி சாத்தியம் ..? 

      அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக அனைத்துப்பள்ளிகளுக்கும் தேர்வுசெய்யப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் , வயதுக்கு ஏற்ற வகையில் சிறியதும் ,பெரியதுமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒவ்வொரு வகுப்பிலும் தோரணமாக கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன.அவைகள் தோரணமாகத் தொங்கும் அழகைப்பார்க்கும் பொழுது அவைகளை எடுத்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் நமக்கே தோன்றும். பெட்டிக்கடைகளில் அந்த வார வார இதழை பார்வைக்குப்படும்படி அழகாக தொங்கவிட்டு இருப்பர். கடைக்கு வருபவர் , அதன் அட்டைப்படத்தை பார்த்தே, என்ன என்று கேட்டு வாங்கிச் செல்வர். தொன்கும் அழகே பலரை இதழ் வாங்கத்தூண்டும். நான் சிறுவனாக இருக்கும் போது என் வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் தொங்கிய அம்புலி மாமா இதழை பார்த்து ஆர்வப்பட்டு , என் தந்தையிடம் அழுது வாங்கிய அனுபவம் நினைவிற்கு வருகிறது. 


              இன்று அதேப் போல குழந்தைகள் தொங்கவிடப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்த்து ,ஆசிரியரிடம் “டீச்சர்... இன்னைக்கு இந்த கதைப்படிப்போம் ... எனக்கு அந்தப்புத்தகம் கொடுங்க”என மதிய இடைவேளையில் ஓடி விளையாடுவதைத் தவிர்த்து புத்தகங்கள் படிப்பதை பார்க்கும் போது நாம் ஒரு அடிமைப்போல பள்ளிகளில் நடத்தப்பட்ட நினைவுகள் வந்து போகின்றன. இன்றைய மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  ஒன்றாம் வகுப்பு மாணவன் படங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எடுத்து , அதில் உள்ள எழுத்துக்களைக் கூட்டி வாசித்து , தன் உடன் உள்ள மாணவனுடன் கொஞ்சி கதை போசும் அழகு ரசிக்கச் செய்கிறது.

            
           முன்று, நான்கு, ஐந்து படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒரு வட்டமாக படிக்கும் அழமு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அதுவும் ஆசிரியரும் மாணவர்களுடன் மாணவர்களாக புத்தகங்கள் படிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. நான் படிக்கும் காலங்களில் நூலகம் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும், செய்தித்தாள் வாசிக்கும் இடமாகவும், பல சமங்களில் பல ஆசிரியர்கள் ஒன்று கூடி அரட்டை அடிக்கும் இடமாகவும் இருந்தது. தப்பித்தவறி நாம் அங்கு சென்றால் உதையும் கிடைக்கும் இங்கெல்லாம் வரக்கூடாது என வசவும் கிடைத்துள்ளது.



     இன்று வகுப்பறைகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதுவும் சத்தம் போட்டுப்படிக்கும் இடமாகவும், தான் படித்தக் கதைகள், அனுபவங்களை எந்தவித பயமும் இன்றி சக மாணவனுடன் பகிர்ந்து கொள்ளும்  வசதிகளை உடையதாகவும் , பாடபுத்தகங்களைத் தவிர்த்து , அறிவு பெறும் இடமாகவும் வகுப்பறைகள் மாற்றம் அடைந்துள்ளன. செயல் வழிக்கல்வி தமிழத்தில் வெற்றிகரமாக செயல்படுவதைக் கண்டு பிற மாநிலத்தவரும் நம்மை அணுகுவதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.




   



   



12 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

உண்மை தான் சகோதரா கல்வி தான் ஒரு சமூகத்தை திர்மானிக்கும்...

'பரிவை' சே.குமார் said...

Nalla pakirvu nanbarey...
padikkum kalaththil sivagangai collector kuthsiya gandhi thalaikaiyil arivoli iyakkaththil theeviramaga irunthathu gnapagam varuthukkna... padipputhaan samugaththai tharamanathakkum.

வருண் said...

கேக்கவும், நீங்க போட்டிருக்க படத்தைப் பார்க்கவும் நல்லாயிருக்குங்க! :)

அன்பரசன் said...

நல்லாயிருக்குங்க..

pichaikaaran said...

நல்லா இருக்கு....

தீபாவளிக்கு மதுரை வந்தேன்..உங்க நம்பர் இல்லாத்தால கால் செய்ய முடியல..

pichaikaaran said...

இப்ப நோட் செஞ்சுக்கிட்டேன்.. நெக்ஸ்ட் டைம் வரும்போது கால் செய்றேன்

Unknown said...

கேட்பதற்கே ரொம்ப நல்லா இருக்குங்க.

Unknown said...

//நான் படிக்கும் காலத்தில் நூலகம் என்பது ஒரு தீண்டத்தகாத இடமாக கருதப்பட்டது. அது ஏதோ ஆசிரியர்கள் மட்டுமே செல்லும் இடம் எனவும் , அங்கு சென்றால் , யாரிடமும் பேசக்கூடாது என்ற அச்சத்தையும் உண்டாக்கி , நம்மை கடைசிவரை அண்டவே விடவில்லை.//

உண்மை தான்.

Unknown said...

எங்கள் பள்ளியில் மாணவிகள் , வலைப்பூக்களை பார்வையிட ஏற்பாடு செய்துள்ளோம்..

பிளஸ் டூ மாணவிகள் என்பதால் விமர்சனங்கள் கூட அனல் பறக்கு

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///இன்றைய மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஒன்றாம் வகுப்பு மாணவன் படங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எடுத்து , அதில் உள்ள எழுத்துக்களைக் கூட்டி வாசித்து , தன் உடன் உள்ள மாணவனுடன் கொஞ்சி கதை போசும் அழகு ரசிக்கச் செய்கிறது.///

ஹ்ம்ம்.. ரொம்ப நல்ல விஷயம்.. உண்மை தான். நானும் பார்த்து சந்தோசப்பட்டு இருக்கிறேன்.

நல்ல பகிர்வு. நன்றிங்க. :-)

G.M Balasubramaniam said...

If what you say,takes place in all schools, it is really a welcome change. I only wish it is not an one off exception.God bless these children. With regards.

Post a Comment