Thursday, November 4, 2010

சாரு உண்மையிலேயே ஒரு மனம் கொத்தி தான்.

      சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு மமதைப்பிடித்தவர். அவர் தன்னை முன்னிலைப்படுத்தி எதையும் பேசக் கூடியவர். ஜி ரோ டிகிரியைத் தவிர பெரியதாய் எதையும் சாதிக்க வில்லை என பல இடங்களில் பல விமர்சனங்களைக் கேள்வி பட்டுள்ளேன். மதுரை புத்தகத் திருவிழாவின் போது எஸ்.ரா. புத்தக வெளியீட்டு விழாவில்  அவர் பேசிய பேச்சை கேட்டுப்பலரும் படிக்காமல் கதைக்கிறான் என என் காது படப் பேசக் கேட்டுள்ளேன். ஏதோ சாருவை கிழிக்க பதிவு போட்டுள்ளேன் என்று கருத வேண்டாம்.
   
       ”புத்தக வெளியீட்டு விழா என்றால் சாருவை அழைக்காதீர்கள் அவன் வம்பு பிடித்தவன்,கிழித்து விடுவான்” என அன்று சாரு பேசிய போது எனக்கும் அப்படித்தான் பட்டது.   ஆனால்,  அவரின் எழுத்துக்களைப் படிக்கும் போது எனக்கு ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்தி , தன்னிலை விளக்கம் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றே தெரிகிறது. ஆனந்த விகடனில் சாரு  எழுதுவது அவரின் டைரிக் குறிப்புகள் போல உள்ளன என்று பலர் விமர்சித்தாலும் , அவை இன்றைய சமூக அவலங்களை தனக்கு தெரிந்த விசயங்களுடன் ஒப்பிட்டு , பின் நவீனத்துவத்துடன் எழுதுவதை புரிந்துக்கொள்ள வேண்டும்.


                  சரி விசயத்துக்கு வருவோம்....இந்த மாத உயிர்மையில் எந்திரன் பற்றி எழுதி என் குடும்பத்துக்கே பிடித்தவர் ஆகிவிட்டார். ஆமாம் , ஒரு வாய்ச் சொல் வீரர் அல்ல என்பதை நிருபித்துவிட்டார். தனக்கு மனதில் பட்டதை , தாம் அனுபவத்தில் பெற்றதை கொண்டு , நல்ல சினிமாக்களை உண்மையான நிலைக் கொண்டு விமர்சிப்பதில் சாரு என்றும் சோடைப் போனதில்லை என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார்.
 
    எந்திரன் ஒரு வியாபார நோக்கில் அனைவராலும் புகழப்பட்டப் படம் என்பதை ஆணித்தரமாக , ஆதாரப்பூர்வமாக சொல்ல , தமிழகத்தில் எந்த ஒரு எழுத்தாளரும் முன் வராதப் போது துணிந்து ”ரஜினிக்கு எந்திரன் வேடம் போட்டதும் தேங்காய் சீனிவாசன் மாதிரி ஆகி விட்டது ஒரு துயரம் ” என மார்தட்டிச் சொல்ல சாருவால் தான் முடியும்.

      எந்திரன் படம் பார்த்தவுடன் என் மனைவியின் அண்ணண் மாதவன் ,”மாப்பிள்ளை ....இது ஐ ரோபார்ட். டெர்மினேட்டர் படங்கள், மற்றும் பைசெண்டினியல் மேன் படங்களின் கலவை, ஆனால் அந்த படங்களைப் பார்த்தால், இது குப்பை என்று தான் சொல்லுவீங்க... தமிழனை ஏமாளியாக்கும் விசயம்” என விமர்சித்தார் , மேலும் என் பிளாக்கில் எழுதவும் சொன்னார். நமக்கு எதுக்கு வம்பு என நான் இழுத்து மழுப்பி விட்டேன்.


        நான் முதல் முறையாக படம் பார்த்த போது , எனக்கு பிரமாண்டம் எதுவும் தெரியவில்லை ,அதுவும் ரஜினி ரசிகர்களுடன் பார்த்ததால் அந்த உணர்வோ (அவர்களின் ரசனையுடன், சேட்டைகள் கத்தல்களுடன் பார்த்ததால், படம் என் மனதில் ஒட்டவில்லை என்று நினைப்பு ) என எண்ணி மீண்டும் ஒரு ஏ செண்டரில் படம் பார்த்தேன். அப்போதும் அதே உணர்வு வர எனக்கு இப்படம் குறித்து விமர்சனம் எப்படி எழுதுவது அது நமக்கு எதிர்வினையை ஏற்படுத்திவிடுமோ என்ற பய உணர்வு.

      ஆனால், கதைக் கரு நம் தமிழ் சினிமாவுக்கு புதிது. அதை ஹாலிவுட் ரேஞ்சுக்கு பேசி , பேசி , படத்தை ஒரு எதிர்பார்ப்புடன் பார்க்க செய்த டெக்னிக் சன் குழுமத்திற்கு மட்டுமே உரித்தான வியாபார டெக்னிக் ஆகும். அதுவும் இப்படத்திற்கு டிக்கெட் ஐநூறு , இருநூறு  என்ற விசயம் தான் என் மனதை உறுத்தியது. எனக்கும் சாரு போன்று ஒரு வித உணர்வு , ரஜினி ரசிகர்கள் கொண்டு நல்ல ஒரு படம் என்ற ரீதியில் அதிகமான டிக்கெட் விற்று , ரஜினியையும் நம்மையும் சேர்த்து ஏமாற்றிய உணர்வு.




       ”....எந்திரன் பற்றிய சினிமா விமர்சனம் , அந்தப்படம் நன்றாக இருந்தது, இல்லை என்பதாக எழுத முடியாமல் ஒரு சமுக விமர்சனமாக எழுத வேண்டியிருக்கிறது.குப்பைப் படம் எடுப்பது பற்றிப் பிரச்சனையே இல்லை . ஆனால், ஊடக பலத்தை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே அது ஒரு சிறந்த படம், ஹாலிவுட்டுக்கே சவால் என்பதாக நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி?”

      மேற்சொன்ன சாருவின் கருத்துக்கள் தான் என்னையும் வாட்டியது . பொழுது போக்கு  படம் என்பதை காட்டிலும் , இப்படத்திற்கான வியாபார யுத்திகள் , பாமர ரஜினி ரசிகர்களின் ஒரு வார சம்பளத்தை ஒரு டிக்கெட்டில் பிடுங்குவதாக இருந்தது. இது தமிழனை ஏமாற்றும் வித்தையாகவே எனக்கு பட்டது. ரஜினி இனியாவது அவரின் ரசிகர்களின் ஒரு நாள் சம்பளத்தை மனதில் கொண்டு வியாபார ஊத்திகளை வகுக்க தம் தரப்பு நியாங்களை எடுத்துரைப்பாரா? வர்த்தக ரீதியில் பார்த்தால் திரையிட்ட அனைவருக்கும் லாஸ் என்றே வருகிறது ரிசல்ட். ஏனெனில் பல பிரிண்ட்,  பல தியேட்டர்கள் , என்பதால் அனைவரும் பார்த்தாகி விட்டது. பின் எப்படி...லாபம். சமீபத்திய பிளாக்கர் சந்திப்பில் ஒருவர் தன் கை சுட்ட கதையை சொல்லக் கேட்க முடிந்தது.


         சாரு மேடையில் பேசுவது போலவே...இந்த விமர்சனத்தில் தன் கோபத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.
”ஷங்கருக்கு ரஜினி மீது என்ன கோபம் என்று தெரியவில்லை . அவ்வளவு தூரம் அந்த நல்ல நடிகரை சிறுமைப்படுத்தியிருக்கிறார். விஞ்ஞானி ரஜினிக்கு ஒப்பனைக்காரர் யார்? பாக்யராஜ் மாறு வேடத்தில் வரும் போது ஒரு ஒட்டுத்தாடியுரன் வருவார். அது காற்றில் பறக்கும் போது ரசிகர்கள் கிண்டலாக விசில் அடிப்பார்கள் . அப்படி ஒரு ஒட்டுத்தாடியை ஒட்டியிருந்தார்கள் விஞ்ஞானி ரஜினிக்கு .”


    “எந்திரன் விஞ்ஞானி ரஜினி, ஐஸ்வர்யா, ரொபார்ட் ரஜினி ஐஸின் மேல் கொள்ளும் காதல் ஆகிய பகுதிகள் பைசெண்ட்டனியல் மேன் லிருந்து உருவியவை என்றால் எந்திரன் ரஜினி வில்லனாக மாறுவதிலிருந்து ஐ ரொபார்ட் என்ற படத்திலிருந்து உருவியது. அதாவது, எந்திரனின் முதல் பாதி பைசெண்ட்டனியல் மேன் பின் பாதி இஅ ரொபார்ட்  .   .... காட்சி காட்சியாக , வசனம் வசனமாக உருவியிருக்கிறார்கள். ...”

        சாருவைக் கொண்டாடுவோம். சாரு ஒரு தமிழன் என்ற ரீதியில் அடிக்கடி வருத்தமடைவதைப் பார்த்திருக்கிறேன்.” கேரளாவில் பாருங்கள் ... எழுத்தாளரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள் . ஆனால் , தமிழ்நாட்டில் நிலமை வேறு ... “   
தமிழ் நாட்டில் அந்த காலம் வெகு விரைவில் வரும். ஆம். இன்று ஒரு விமர்சனத்திற்கு என் குடும்பத்தில் அனைவரும் உங்களைக் கொண்டாடுகின்றனர் என்றால் நிச்சயம் அது போல காலம் வெகு விரைவில் வரும் என்று தான் அர்த்தம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் , எதையாவது படித்து விட்டு , அதை ஒரு  காதில் வாங்கி , அப்படியே மறு காதில் வெளியிடும் காலம்  மாறி, எழுத்தாளர் யார் .பயமின்றி தெளிவாக எழுதியுள்ளாரே என எழுத்தாளரை விமர்சிக்கும் காலமாக குடுமப்ங்கள் மாறி வருகின்றன.

     ஊசிய பண்டத்தை தங்கக் தட்டில் வைத்துக் கொடுத்தால் சாப்பிட முடியுமா? என்ற கேள்வி  ஒன்றே எந்திரன் மீது  சாரு கொண்டுள்ள கோபத்திற்கு உதாரணமாகும்.

            சாரு உண்மையிலேயே ஒரு மனம் கொத்தி தான்... தொடரட்டும் உங்கள் புகழ் . தமிழகமும் உங்களைக் கொண்டாடட்டும்.
 

 
   

20 comments:

குடுகுடுப்பை said...

எந்திரன் படம் பார்த்து, எந்த வித உணர்வும் எனக்கு வரவில்லை, உதாரணமாக குருவி பார்த்த பின்னர் வந்த கடுப்போ அல்லது ஒரு நல்ல/சுமாரான படம் பார்த்த திருப்தியோ கூட வரவில்லை, நண்பர் ஒருவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பாருங்கள் என்றேன், இப்போது என் மேல் ஏகக்கடுப்பில் இருக்கிறார்.

சாருவின் மேல் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தவிர்க்கமுடியாத எழுத்தாளரே.

வருண் said...

***சாரு உண்மையிலேயே ஒரு மனம் கொத்தி தான்... தொடரட்டும் உங்கள் புகழ் . தமிழகமும் உங்களைக் கொண்டாடட்டும்.***

இதை அவருக்கு தனிமடலா அனுப்பி இருந்தால், அவர் சைட்ல போட்டு உங்க புகழ் பாடி இருப்பார். கவலைப் படாதீங்க, இந்தப் பதிவை அவ்ர் சைட் பண்ணுவதுக்கும் ஜாண்ஸ் இருக்கு.

நீங்க ஏன் இப்படி ஜால்ரா அடிக்கிறீங்க? எந்திரன் ஒரு மட்டமான படம்னு உங்க மனசைத்தொட்டு அடிச்சு சொல்லலாம் சாரு ஜால்ரா இல்லாமல்! என்ன பயம் உங்களுக்கு? உங்களுக்கே உங்க கருத்துமேலே நம்பிக்கை இல்லையா?

என்னவோ போங்க. சாரு, மனம் கொத்தியா என்னனு தெரியலை. நீங்க என்னனு இந்தப் பதிவில் இருந்து தெரியுது.

You can remove this response if you find that offensive. Nothing personal here! I just expressed what I felt without using any filter!

ஸ்ரீராம். said...

No comments...!

ஆமினா said...

சன் டீவில போடுற விளம்பரத்தை பார்த்தாலே பயமா இருக்கும். இப்பலாம் விளம்பரம் போடும் முன்பே வேற சேனல் மாற்றிவிடுவேன். சும்மா உக்கார்ந்துட்டு இருக்குறவனையும் அடிச்சு தியேட்டருக்கு போன்னு விரட்டுற மாதிரி இருக்கும். இது போதாததுக்கு டாப் டென் மூவியில் மொக்கை சன் குழுமம் படமும் முதல் இடத்தில் நிற்பதை பார்த்து அதையும் வெறுத்தாச்சு. கண்டிப்பா படம் பார்ப்பவர்கள் தமிழ் படத்தை மட்டுமே பார்த்தவராக இருந்தால் ஆஹா ஓஹோன்னு சொல்லலாம். மத்தபடி சொல்ல ஒன்னுமில்லை :)

ராம்ஜி_யாஹூ said...

ஷங்கரின் ரஜினியின் வரலாற்றில் மிகவும் சலிப்பான படம் இதுவே. அதிசயப்பிறவி என்ற படம் கூட மேல்.

சிவராம்குமார் said...

எந்திரன் ஒரு மொக்கை படம்ங்கிரதுல எந்த சந்தேகமும் இல்லை!!!

அன்புடன் மலிக்கா said...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படியெல்லாம் நறுக்கென கணக்கிடும் சாரு...கடவுளைக் கண்டேனில்(நித்தி) சறுக்கிவிட்டுதே!
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

ரஹீம் கஸ்ஸாலி said...

நண்பருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

test said...

நல்லா சொன்னிங்க சரவணன்!
//ஆனால், ஊடக பலத்தை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே அது ஒரு சிறந்த படம், ஹாலிவுட்டுக்கே சவால் என்பதாக நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி?”//

நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான்! :)

bogan said...

அந்தக் கட்டுரையில் ஒரே ஒரு விசயம்தான் எனக்கு பெரிய முரண்பாடாகத் தெரிந்தது.இந்த அபத்தத்தில் ரஜினியின் பங்கு எதுவும் இல்லை எதுவும் இல்லை என்பது போல் எழுதியிருந்தார்.மார்லன் பிராண்டோ [!]போன்ற நடிகரை சங்கரும் சன் டிவியும் சேர்ந்து சதி செய்து கேவலப் படுத்திவிட்டது போல் எழுதியது ஒரு சமரசம் என்றே நான் கருதுகிறேன்.ரஜினி சமீபத்தில் இயக்குனர் சங்க விழாவில் பாலச்சந்தர் பேட்டியில்எனக்கு பெரிய கமர்சியல் படங்கள் பண்ணவே விருப்பம் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார் .இந்தியில் அமிதாப் போன்று துணிச்சலான ரோல்கள் பண்ணத் தயாராக இல்லாத போது இந்த மாதிரி ஆபாசங்கள் வந்து கொண்டேதான் இருக்கும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

தலைவரே.. சன்டிவி வெட்டி விளம்பரம் பண்ராங்க.. சரி.. சாரு பண்ரது என்னவாம்? நான் பிக்பாக்கெட்ல ஆரம்பிச்சு இப்போ நான் “கிகலோ”ல போய் நிக்குது. அவரோட எழுத்து ரொம்ப சிம்பிள். ஊர் ஒருபக்கம்போனா நாம மறுபக்கம் போகணும்.. அவ்ளோதான்.. விகடன்ல எழுதுற “மனங்கொத்திப் பறவை” - மொத ரெண்டு வாரம் எல்லாமே சுயசொறிதல்னு நொம்பலப்பட்டதால கொஞ்சம் மாத்தி எழுதுறாரு.. அதுவும் ரொம்ப நாள் முன்னாடியே பிளாக்ல எழுதுனதையே ரீமிக்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு.. “எந்திரன்” நல்லாயில்லைன்னு எழுதினா அவரு நல்ல எழுத்தாளரா? என்ன கொடுமை சார் இது? அப்புறம் புத்தக அறிமுகத்துக்கு எல்லாம் அவரக் கூப்பிடுறாங்க பாருங்க.. அவுங்களச் சொல்லனும்.. எல்லாம் நம்ம தலையெழுத்து..:-((

ரிஷபன் said...

ரஜினியும் வியாபார தந்திரங்களில் இருக்கிறார்.. ஒரு படத்திற்கு ஆயிரம், ஐநூறு என்று டிக்கட் வைப்பது பகல் கொள்ளை.. அதற்கு அவர் துணை போவது என்ன சாமர்த்தியம் ?

Muruganandan M.K. said...

தெளிவாகச் சொன்னீர்கள். நன்றி
தீபாவளி வாழ்த்துக்கள்..

Prabu M said...

ரொம்ப குழம்பியிருக்கீங்களோனு தோணுது...
ரெண்டு தடவ பாத்து இருக்கீங்க...
ஒருதடவ பார்த்தபோதே பிடிக்கலைன்னாலும் பிடிக்கலைதான்...
இருந்தாலும் உங்கமேல பிழையிருக்குமோனு நெனெச்சு ரெண்டாவது தடவைபோயிருக்கீங்க...
உங்க உறவினர் சொன்னப்போ எழுதாம ஏன் மழுப்பிட்டீங்க என்று புரியவில்லை..
உங்க ப்ளாக்குல உங்க கருத்தை சொல்ல என்ன தடையோ என்று தெரியவில்லை...
நீங்க சொல்லணும் சொல்லணும் என்று நினைத்துக்கொண்டிருந்த விஷயத்தைச் சாரு சொல்லியிருக்கிறார்...
அதுனால நீங்க அவரைக் கொண்டாடுறீங்க.... அவரு சொல்ற 'எல்லா' விஷயங்களும் உங்களுக்கு உடன்பாடு தானா!! (கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிற சங்ககதிகளும் சேர்த்துதான்!)
"எந்திரன்" பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியதுதானே சார்.. இதுக்கு எதுக்கு சாரு??!!

Victor Suresh said...

//ஆனால், ஊடக பலத்தை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே அது ஒரு சிறந்த படம், ஹாலிவுட்டுக்கே சவால் என்பதாக நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி?//

படம் குப்பை -- ஓகே
ஊடக பலம் -- ஓகே
ஒட்டு மொத்த சமூகத்தையே நம்ப வைத்தது???

கேப்பைல நெய் வடியுதுன்னு சொல்லலாம். சிலர் நம்பவும் செய்யலாம். எழுத்தாளர் நித்தியானந்தாவைக் கடவுள்னு நம்பினது போல. அதுக்காக முழு சமூகமா நம்பியது? பூனைக் கண்ணைக் கட்டிட்டா, உலகமே இருட்டாயிடுமா?

ஆனந்தி.. said...

ம்ம்...போகன்,வருண்,கார்த்திகை பாண்டியன் சொன்னதும் கூட யோசிக்க வைக்குது சரவணன் சார்...சில எழுத்தாளர்கள் எதிர்மறையாவே பேசி தன்னை வித்தியாச படுதிக்கிரமாதிரி ஒரு மாயை கூட உருவாக்கிகிறாங்க...நம்ம கருத்தை நாமலே நம் ப்ளாக் இல் சொல்வதில் எந்த தயக்கமும் வேணாம் சார்...சாருவை விட உங்கள் ரசனைகள்,விமர்சனங்கள்,எண்ணங்கள் தரமாய் இருக்கலாம்னு நம்புங்கள் எங்க ஊரு சரவணன் சார்..நன்றி..வாழ்த்துக்கள்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அவை இன்றைய சமூக அவலங்களை தனக்கு தெரிந்த விசயங்களுடன் ஒப்பிட்டு , பின் நவீனத்துவத்துடன் எழுதுவதை புரிந்துக்கொள்ள வேண்டும்.//
பின் நவீனத்துவத்துடன் அப்படின்னா என்ன தலைவரே?
//கேரளாவில் பாருங்கள் ... எழுத்தாளரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள் . //
நான் பார்த்ததே இல்லையே.எத்தனை தடவை கேரளாவுக்குப் போயிருக்கேன்.அங்க நிறைய நண்பர்கள் வேற.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......சாரு சொல்ற எல்லாம் சரின்னு நம்பிட்டீங்க போல.

பனித்துளி சங்கர் said...

::))

Valentin said...

Gram w Fruit Cocktail każdego dnia w tym kasynie-https://top10casinoexpert.pl/casino/inter-casino/

Post a Comment