பள்ளி செயலர் திரு பி . சௌந்தர பாண்டியன் தலைமை ஆசிரியர் சரவணன் மாணவர்களுடன் தீபாவளி வெடி வெடித்து மகிழும் காட்சி.
டாக்டர் .டி.திருஞானம் துவக்கப்பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் பள்ளிச் செயலர் திரு. பி. சௌந்தர பாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது . ஆசிரியர்கள் சார்பாக தாய் , தந்தை அற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது . இதன் மூலம் சுமார் பதிமூன்று குழந்தைகள் பயனடைந்தனர்.
மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வெடி வெடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் மூத்தோர்கள் உதவியுடன் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வெடிக்காத வெடிகளை சேகரித்து , அவற்றின் மருந்தை ,பிரித்துக் காகிதத்தில் கொட்டி, பின் எரிப்பதால் ஆபத்து ஏற்படும் என்று விளக்கி கூறப்பட்டது. ஆகவே, வெடிக்காத வெடிகளை தண்ணீரில் போடவும் வேண்டும் என்றும் , மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
மெர்குரி பொருத்தி மகிழும் மாணவிகள் , உதவும் தலைமை ஆசிரியர் மற்றும் செயலர்
வெடி வெடிக்க வில்லையெனில் , உடனே அதை எடுத்து கையில் பார்க்கக் கூடாது.
மேலும் கண்ணிற்கு அருகில் கொண்டுச் சென்ற பார்க்கக் கூடாது. அதன் மீது தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். எக்காரணம் கொண்டும் வெடிகளை வெடிக்கும் போது பாதுகாப்பற்ற முறையில் பாட்டில் வைத்தோ , அல்லது வேறு காயம் ஏற்படும் பொருளை கொண்டு மூடியோ வெடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
வெடி இருப்பது தெரியாமல் யாரும் சென்றால் , வெடி வெடிப்பதை அறிவுறுத்தவும் என சொல்லப்பட்டது.வயதானவர்கள் பாதையைக் கடந்தப் பின் வெடி வெடிக்கவும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வெடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
வெடி வெடித்து மகிழும் எம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்.
மாணவர்களுக்கு பாதுகாப்பாக வெடி வெடிப்பது பற்றி சொல்லும் போது , இந்திரா ஆசிரியர் , குறுக்கிட்டு , மாணவர்களை ஆடு , மாட்டு , நாய்களின் வால்களில் வெடிகளை கட்டி தொங்க விட்டு வெடிப்பதை தவிர்க்க சொல்லவும் என்றும் , அவைகளும் நம்மை போன்று உயிருள்ள பிராணிகளேஎன்று அறிவுறுத்த சொன்னார்.மேலும் நோயாளிகள் இருப்பின் வெடி வெடிப்பதை தவிர்க்கவும் என்றும் மருத்துவமனை அருகில் வெடி வெடிக்கக் கூடாது எனவும் சொல்லச் சொன்னார். அதுவும் சொல்லப்பட்டது.
மாணவர்கள் வெடி வெடித்து மகிழ்ந்தனர். ஆசிரியர்களும் மாணவர்களுடன் வெடி வெடித்து மகிழ்ந்தனர். விழா முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஆசிரியர்கள் மாணவர்களுடன் மனநிறைவான தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அனைவரும் மகிழ்ச்சியுடன் இன்று காணப்பட்டனர். குழந்தைகளுடன் தீபாவளிக் கொண்டாடுவது எனக்கு பேரானாந்தத்தைக் கொடுத்தது. சிறிய உதவியாகிலும் நான் சொன்னவுடன் கொடுத்து , ஏழை மாணவர்களும் புத்தாடை அணிய உதவிய என் ஆசிரிய பெருந்தகைகளுக்கு இத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
17 comments:
// ஆசிரியர்கள் சார்பாக தாய் , தந்தை அற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது . இதன் மூலம் சுமார் பதிமூன்று குழந்தைகள் பயனடைந்தனர்.//
நெகிழ்வான பதிவு சார். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவர் களுக்கும், எங்களின் இனிய 'தீபாவளி' நல் வாழ்த்துகள்.
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் சரவணன் நிறைவான பதிவு. உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துகள்
அருமை சரவணன் சார்!
நெகிழ்வான பதிவு.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சரவணன்.
பள்ளியில் இப்படி கொண்டாடுவதும் சொல்லிக் கொடுப்பதும் அழகு. நம்ம மதுரை மதுரைதான்...தீபாவளி வாழ்த்துக்கள்.
வாழ்த்திய அன்பு உள்ளத்துக்கும் அதன் சொந்தங்களுக்கும் நட்புக்கும் இந்த உள்ளத்தின் இனிய ஒளித்திருநாள் வாழ்த்துக்கள். இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..
மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...
தங்களின் அரிய சமுதாயப்பணி தொடர... வாழ்த்துக்கள்..சரவணன்.
பட்டாசு வெடிக்கும் சரியான மூறைகளை சொல்லிக் கொடுத்தது பாராட்டுக்குரியது. இம்மாதிரி விஷயங்கள், பெற்றோர் சொல்லுவதைவிட, ஆசிரியர்கள் சொன்னால் அதிகக்கவனம் எடுப்பர் பிள்ளைகள்.
தீப ஒளி வாழ்த்துகள்.
தங்களின் பதிவை படிக்கும் சமயம் என்னுள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்குகின்றது...
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்...
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள், நல்ல அறிவுரைகள் கூடிய பகிர்வு.
இனிய தீபாவளி கொண்டாட்டம்.
அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துகள்.
வித்தியாசமா கொண்டாடி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
என்னுடைய இத்தனை வருஷ வாழ்க்கையில் எனக்குப் பிடித்த முதல் வாத்தியாராய் நீங்கள்தான் இருப்பீர்கள் என்று படுகிறது![நமக்கு வாய்ச்சவங்க அப்படி!]
உங்கள் பணி மற்றும் சேவை இன்னும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
நன்றி...
அன்பின் சரவணன் - துவக்கப்பள்ளியில் மாணவச் செல்வங்களுடன் தீபாவளி கொண்டாடியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment