Tuesday, November 9, 2010

ம்துரை-திருப்பூவணம் சிவன் கோவில் 3

 திருப்பூவணத்தில் அசுவமேதயாகம் நடந்தது என்பதை சொன்னால் நம்பவா முடிகிறது? அந்த யாகத்தின் பின்னனியில் கிடைத்த கோவில் சொத்து ,இன்று அரசியல் மாற்றத்திலும், வேகமான கால மாற்றத்திலும் கோவில் சொத்து  தனி நபரின் உரிமையாக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் போது மனம் மிகவும் வேதனையடைகிறது.

”பிரமனூர் கணக்கு வழக்கும் , திருப்பூவணத்தின் கிழக்கும் , மேற்கும் சொல்ல முடியாது “ என்ற பழமொழி உண்டு.

        நள மகாராஜா திருப்பூவணத்தில் அஸ்வமேத யாகம் செய்துள்ளார். அதனால் கிடைத்த மண் பொன் அனைத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்துள்ளார். அதற்கான ஆவணங்கள் அழிந்துள்ளன. எப்படி என்பது தெரியாது என்கின்றனர். மடப்புரம், மற்றும் பிரமனூர் கிராமம் முழுவதும் கோவிலுக்கு உரிமையுள்ளவை.

இக்கோவில் முஸ்லீம் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டுள்ளது. பல மன்னர்களால் ஒவ்வொரு அடுக்காக கட்டப்பட்டுள்ளது. இக் கோவில் கோபுரத்தில் சிற்பங்கள் இல்லை. படத்தைப்பார்த்தாலே தெரியும். இன்றும் கோவில் நுழையும் போது கட்டப்படாத ஒரு கோபுர தூண் உள்ளதை காண முடிகிறது.


    இங்கு உள்ள சிவன் சுயம்பு ஆகும். மேலும் இங்குள்ள சிவனின் நெற்றியில் திரிசூலம் அடையாளமுள்ளது.இக்கோவில் வடகிழக்கே அமைந்துள்ளக் கோவில் ஆகும். இக்கோவிலில் தினமும் விளக்கு போடப்படுகிறது. பிறகோவில்களில் அம்மாவசை அன்று மட்டுமே விளக்குப்போடப்படும் . தினம் விளக்குப்போடுவதால், இங்கு கிரிகைகள் செய்யப்படுகின்றன. தினம் அம்மாவாசை தரிசனம் அளிக்கும் ஒரே கோவில் திருப்பூவணம் சிவன் கோவில் ஆகும்.

     இங்குள்ள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி அன்று சொர்க்க வாசல் திறகிறார்கள். சிவன் கோவிலில் வேறு எங்கும் சொர்க்க வாசல் திறக்கப்படுவதில்லை என்கின்றனர். 


 
          இக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன். பிரம்மதீர்த்தம், மணிகர்ணிகைத்
தீர்த்தம், லெட்சுமி தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என்பன அவையாகும்.


         மணிகர்ண தீர்த்தத்தில் குளித்தால், செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து விடும் என்றனர். உடனே என்னுடன் வந்த ரவி முந்திக்கொண்டு தீர்த்தமாடினார். நானும் என் பாவங்களைத் தொலைத்தேன்.
      
          சிவனே தனக்கு சிலை வடித்த ரச வாத புராணத்தை அடுத்த இடுகையில் பகிர்கிறேன்... தொடரும்.




 

4 comments:

Ramesh said...

முதல்பந்தியில் கலக்கம்.
அருமை தெரியாத சிறுமை போல.
நல்ல தகவல்

முகுந்த்; Amma said...

நம்ம ஊரு சிறப்புகளைப் பற்றி அருமையா தொகுத்து தர்றீங்க. திருப்புவனம் தெரியும் ஆனா சிவன் கோவிலுக்கு போனதில்லை.

நன்றிங்க.

Thenammai Lakshmanan said...

திருப்புவனம் சென்றிருக்கிறேன்.. சிறுவயதில்.. பகிர்வுக்கு நன்றி சரவணன்..

குட்டிப்பையா|Kutipaiya said...

எங்க ஊரு தேய்ன் :) நன்றி..

Post a Comment