Wednesday, September 3, 2014

வயதானவர்களுக்கு மட்டுமேயான சீரியஸ் பதிவு.

வயசாகிடுச்சு..!
-----------------------------

இன்று மதியம் வகுப்பறைகளைப் பார்வையிட சென்றேன். 

“சார்..நல்லா இருக்கீங்களா..” என வாஞ்சையுடன் என் கையை பிடித்தான் அன்று என்னுடன் பந்து விளையாடி உயிர் எழுத்துக்களைக் கற்றுக் கொண்ட மாணவன். 

பெயர் மறந்து போனதால், “டேய் தம்பி நல்லா இருக்கீய்யா..?” என கேட்டேன். ம்.. என சிரித்தான். 
“டேய் மணிகண்டா என்ன அட்டை வைத்திருக்கிறாய் ?” என்றேன். 

அருகில் நின்றிருந்த மாணவன் என் பெயரை மட்டும் சொல்ல மாட்டீங்கிறீங்க என ஆதங்கப்பட்டான்.

சாரிடா தம்பி பெயர் மறந்து போச்சு.. என்றேன். அன்னீக்கு(அன்று ) வந்த போதும்..பெயர் மறந்து போச்சுன்னு சொன்னீங்க...”

“சாரிடா தம்பி...சாருக்கு வயசாச்சு இல்லை..(என சொல்லியவாரு யோசித்து ).அசார்.. சரிதானே..” என்றேன்.

“சார்..நான் ஹமீது ”என்றான்.
”சாரிடா மன்னிச்சிடு..ஹமீது” என்றேன்
”எப்ப பாரு..ஹமீது ஹமீதுன்னு உங்க கிட்ட பெயரை சொல்லி சொல்லி எனக்கு தான் வயசாகிட்டு வருது.. நீங்க தான் சின்ன பிள்ளை மாதிரி பெயரை மறந்து போகிடுறீங்க...” என்றான்.

எப்படி சிந்திக்கிறார்கள் குழந்தைகள். நாம் தான் பேச மறுக்கிறோம். குழந்தைகள் நம்மை விட நன்றாகவே சிந்திக்கிறார்கள்.

மதுரை சரவணன்.

3 comments:

Unknown said...

வரவிருக்கிற வலைப் பதிவர் சந்திப்பை எப்படி சிறப்பா நடத்துறதுங்கிற சிந்தனையிலேயே இருப்பீங்க ,அதான் இந்த மறதி!
த ம 2

G.M Balasubramaniam said...

இந்தப் பெயர்கள் மட்டும் மறந்துபோவது போகப் போக இன்னும் அதிகரிக்கும்.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Post a Comment