தூறல் போட ஆரம்பித்து இருந்தது. இந்த தூறல் நோற்றோ தொடங்கியது. இது எப்படியும் வலுத்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது அது சோவ் என்று கொட்ட தொடங்கியது . அட நனைந்து போய் விட்டேன். வெகு நாள் ஆகிவிட்டதல்லவா..! யாருக்கு தான் ஆசையிருக்காது. அதுவும் அன்பு மழையில் நனைவதற்கு. நல்ல சகுணம் பார்த்து நெட்டை திறந்து, இரயிலுக்கு முன் பதிவு செய்து, என்னை அன்புடன் அழைத்து சென்ற தமிழ்வாசி மழைக்கான இடி முழக்கம்.
இரயில் திண்டுக்கலை தொட்டதும் மின்னியது தனப்பாலாய்.. ஹாய் என சிரித்த முகத்தோடு வாழ்த்துக்கள் தெரிவித்து தூற ஆரம்பித்தது. கோணங்கியின் மதினிமார் கதைகள் அசைப்போட்ட படி , பல மதினிமார்களை நோட்டமிட்டு நகர்ந்தது இரயில் . இரவு பணியின் அயர்ச்சியில் உறங்க துடித்த தழிழ்வாசியின் கண்களை அயரச்செய்யாமல் தொடர்ந்து அலறிய அலைப்பேசியில் பட்டிக்காட்டான், ஸ்கூல் பையன், நாய்நக்ஸ் என அரட்டையுடன் வலுத்த மழை மதியம் எங்களை நனைத்தது.
சங்கவி, ராஜா, அட ஏகப்பட்ட சரவணங்க பாஸ்.. இப்படி அன்புமழையில் நனைந்த போது, அட சங்கவி புத்தகம் வெளியிட அகநாழி வாசு கடைக்கு செல்ல முற்பட என் மனசு மணிஜி வாசுவை நோக்கி பயணப்பட்டது. மதுமிதா எனக்கு ஸ்கூல் பையனை நியமித்து அவரை சைதாப்பேட்டையில் வாசு கடையில் விட சொல்ல... கே ஆர் பி செந்தில் அட நான் அங்கு தான் செல்கிறேன் வாருங்கள் என ஸ்கூல் பையனை இந்த ஆசிரியருக்கு உதவ வேண்ட , அவர்களை பின் தொடர்ந்தோம். ஸ்கூல் பையனும் தலைமையாசிரியர் என்று தெரிந்தவுடன் மிகவும் பணிவுடன் நடக்க தொடங்கினார். ( ஆசிரியர் என்று தெரிந்து தான் ஸ்கூல் பையனை எனக்கு உதவிக்கு அனுப்பினாரோ...!) அன்பு மழையில் அவரின் வாகனம் பறந்தது.
பாலங்கள் தன் பாடியை காட்டி ஆங்காங்கு இன்னும் முழுமையாக முடிக்காப்படாமல் அவதிக் கொடுக்க ... நெருக்கம் நிறைந்த சென்னை சந்துகளை கடந்தோம். மோகன் குமாரின் புத்தகம் வெளியிட , ஜாக்கி சேகர்,கேபிள் சங்கர், மணி ஜி, சரவணக்குமார், வாமுகோமு, அதிஷா , பத்மா, தாமோதர் சந்துரு, வால்பையன் என அன்பு நெஞ்சங்கள் குழுமியிருக்க... வாசு ஒரு படி மேலே போய் இந்த நிகழ்வுக்கு மதுரை சரவணன் வந்தது பெருமையாக இருக்கிறது என அன்பை கொட்டி பொருமழையில் நனைய வைத்தார்.
மறுநாள் சொல்ல தேவையில்லை அத்தனை பதிவுகள் இரண்டு நாளில் படித்திருப்பீர்கள். அது என்னப்பா ஒரு குடும்பமே பதிவு எழுதுகிறார்கள் என ஆச்சரியப்படுத்தினார்கள் டெல்லியிலிருந்து வந்து. ...! அப்போது என் மனைவி , மக்கள் கண் முன் வந்து மறைந்தார்கள். அந்த வகையில் எனக்கு எப்போதும் என் இரண்டு மச்சினன்களும் எழுத ஆதரவு அளிப்பது எனக்கு என் பணிக்கு வலு சேர்க்க உதவுவதை இத்தருணத்தில் நினைத்துப் பார்த்தேன். தருமி என் ஆசான் வழிக்காட்டி. என் போன்ற மாணவர்களுக்கு தோழன் எது சரி எது தவறு என்பதை தட்டி கேட்பவர், தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவர். தன்க்கு தெரிந்த விசயத்தை பற்றி மட்டும் எழுதி என்றும் அனைவர் மனதில் நிற்பவர். இன்றும் பாடம் கற்றுத்தருபவர். ஆம். தெரிந்ததை மட்டும் எழுது. ஆம் ... கல்வி . அது சார்பாக எழுதும்போது வரும் வரவேற்பு தனித்தான். பத்மா மேடம் என் வாசகர் என தன்னை என்னிடம் அறிமுகப்படுத்தியது நான் தொடர்ந்து எழுத கொடுத்த டானிக்காகவே கருதுகிறேன்.
அட என்ன மனிசனப்பா.. இந்த பாமரன் என்ன பேச்சு.. அட தம்பியை பற்றி சொல்லி எங்களையும் கண்ணீர் விட செய்தார். சிரிக்க செய்தார். சிந்திக்க செய்தார். ஒரு திரைப்படத்தை பார்த்த ஒரு திருப்தி. நிஜமான எழுத்துக்கள் தான் வெற்றிப்பெறும் என்பதற்கு அவரே சாட்சி.
90 டிகிரி மனதை நொருக்கியது. என்னைப் போன்றா ஆசானின் மனங்களில் ஒலித்துக் கொண்டிருந்க்கிறது.
அட சென்னை ... கடைசியில் போடா வெண்ணை என்று சொல்லியது. அந்த வட பழனி பஸ் ஸ்டாப் அடைந்த போது.. ஒரு ஆண் மகன். ஒரு பெண் அதுவும் குண்டு பெண். அவளை இவன் டிராப் செய்கிறான். ( அப்படி தான் அர்த்தம் கொள்ள வேண்டும்) அவள் அவன் கைகளை பற்றுகிறாள். அவன் சரி போய் வருகிறேன் என்கிறான். ஹெல்மெட் அணிந்திருந்தான். தலையில் அப்படியே இருந்தது. அவள் அவன் கைகளை முத்தமிடுகிறாள். கண்களில் பிரிவின் வலி தெரிகிறது. கூடியிருந்த மக்கள் எவரும் கண்டு கொள்ள வில்லை. என் வயிற்று எரிச்சல் மட்டும் தொடருகிறது. பக்கத்தில் தமிழ்வாசி வாசிக்க முடியாமல் திசையை திருப்புகிறார். அவள் இன்னும் கைகளை பிடித்து கொஞ்சம் நேரம் இருந்து விட்டு போ என்கிறாள். அவன் எதோ சொல்ல. அவள் அப்படியே அணைக்கிறாள் . மார்பு முட்டி (ஹக் செய்தல்) அவனை கன்னத்தில் முத்தமிடுகிறாள். அருகில் இருக்கும் போலீசும் இதை கண்டு கொள்ள வில்லை. அட வயிற்று எரிச்சல். அவனும் இப்போது அவளை ஹக் செய்கிறான். இருவரும் ஏக்கமுடன் பிரிகிறார்கள். அவளை நான் பார்க்கிறேன். அப்போது தான் அவள் என்னைப் பார்த்தாள்..... அட போங்கப்பா....
முதல் நாள் இரவு ஒன்பது மணி மேலிருக்கும் கமலா தியேட்டரில் இருந்து ஏவிம் ஸ்டுடியோ எதிரில் உள்ள லாட்ஜ்க்கு வந்தேன். பாவம் அத்தனை நெருக்கடி... இருசக்கர வாகனம் கூட நகர முடியாத ஒரு போக்குவரத்து இடஞ்சல். எத்தனை ஏக்கங்களுடன் தூக்கங்களுடன் குழந்தைகளை பிரிந்து கணவன் மனைவி இருவரும் பயணிக்கிறார்கள். இவர்கள் இரவில் உறங்கி , காலை பயணத்தை தொடரும் போது காணமல் போகும் குழந்தைகளின் எதிர்காலத்தை பட்டணத்தில் தொலைத்து விடுகிறார்கள்...
அன்பு மழையில் நனைந்தாலும்.. சென்னைவாசிகள் இருப்புக்கள் குறித்து கனத்த மனதுடன் பஸ் ஏறி வந்தேன்....!

16 comments:
சந்திப்பில் சந்தித்தவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்க முடிஞ்சது.
நன்றி சரவணன்.
வருகைக்கு நன்றி
கலக்கல் தலைவரே...
உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி, பதிவில் என் பெயர் சேர்த்தமைக்கு மிக்க நன்றி...
உங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி. சந்தோசமா சொல்லிட்டு கடைசில மனம் கனக்க வச்சு முடிச்சுட்டிங்க.
சுவாரஸ்யம்.
மகிழ்ச்சி நண்பா.
சந்திப்பில் அதிகம் பேச முடியாமல் போய்விட்டது சரவணன்! அடுத்த முறை சந்திப்போம்! இன்றைய (03/09/2013) சென்னை தினமணியில் பதிவர்கள் சந்திப்பு பற்றிய புகைப்படம் வெளியிட்டு இருக்கிறேன்.
தினமணி.காம் சென்று E பேப்பரில் பார்க்கவும்!
அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
சந்தித்ததில் மகிழ்ச்சி...
உங்கள் பார்வையே தனி...!
அன்பு மழையில் நனைந்த நினைவுகள்..
பாராட்டுக்கள்..!
சந்திததில் மிக்க மகிழ்வு சரவணன்.. சென்னை பெருநரக வாழ்வினை ஒரே நாளில் புரிந்துள்ளீர்கள்..
80 சதவீத சென்னை வாழ்மக்கள் நரக வாழ்வினை தான் வாழ்கிறார்கள். என்றாவது ஒரு நாள் மற்ற 20 சதவிகித மக்களின் வாழ்வு நிலையை பெற்று விடுமொமென நம்பிக்கையுடன்...
ஹக் செய்வதும் கையில் முத்தமிடுவதும் அவ்வளவு குற்றமா?
வலைப்பதிவர்கள் திருவிழாவில் தாங்கள் கலந்து கொண்டதை ஆர்வத்துடனும் , வடபழனி பஸ்நிலைய காட்சியினை ஒரு ஆசிரியரின் நோக்கில் ஆதங்கத்துடனும் பகிர்ந்தமைக்கு நன்றி!
தங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி சார்...
நீங்கள் மேற்கூறிய காட்சியை பார்த்துப் பார்த்து சலித்து விட்டது சார்.. நாய்க்காதல் என்பார்களே அந்த கலாச்சாரம் நோக்கி தான் சென்னை செல்கிறது..
பொது இடத்தில ஆபாசம் என்பது மலிந்து விட்டது
Post a Comment