Friday, August 30, 2013

மெட்ராஸ் கபே....!


அட மெட்ராஸ் பட்டணம் ....அங்க காபி சாப்பிடப் போகும் பற்றி நினைத்தாலே பல நினைவுகள் அள்ளி வருகின்றன.

  பசுமை நடை சார்பாக நடைப்பெற்ற புரட்சிகரமான 25 வது நடையில் நண்பர்களை  சந்தித்து உரையாடிய மகிழ்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்த வாரம் அதை விட மிகப்பெரிய அளவில் நாம் நண்பர்களை சந்திக்க போகிறோம் எனும் பொழுது  மனதுக்குள் அளவில்லா மகிழ்ச்சி.

எங்கு சென்றாலும் அதில் மாணவர்களுக்கு எதாவது விசயம் இருக்குமா என்று தான் ஆராய்வேன். பல தடவை கீழக்குயில் குடிக்கு சென்று வந்திருக்கிறேன்.  ஒவ்வொரு தடவையும் செல்லும் போது புது புது விசயங்களை வெளிவிடுகிறது மலை. அது சேகரித்து வைத்துள்ள ரகசியங்களின் குவியல்கள் தான் மலையோ என எண்ணத் தோன்றுகிறது. அதோப் போல ஒவ்வொரு முறையும் பாடம் கற்றுத் தருகிறது. அதனால் தான் சமணர்கள் அங்கு பள்ளி நிறுவினார்களோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஆலம் விழுதுகளைப் போல வேர் பரப்பி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது பல கதைகளை சொல்லி மலை.

“உயிர்குடி” என்பது தான் மருவி கீழக்குயில்குடி என்று இன்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் உள்ள செட்டிப்புடவு பகுதியில் உள்ள சிற்பம் செட்டியாரைப் போல இருப்பதால் இப்பகுதிக்கு செட்டிப் புடவு என பெயர் காரணம் வந்தது என்ற கதையை கேட்ட மாணவர்கள் பெயர்காரணங்கள் வரலாற்றில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருப்பார்கள். ( அன்று விழாவில் நிறைய பள்ளி மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்) .

 சில மன வருத்தங்கள். அந்த வாய்ப்பும் மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது. அரசு பள்ளி பொதுவாக சொன்னால் தமிழ் வழிக்கல்வி மாணவர்கள் வரவில்லையே என்பது மன நெருடலை தந்தது.  இருப்பினும் முத்துகிருஷ்ணன் குழுவினர் அளித்த உணவு அதை மறக்க செய்தது.

கீழக்குயில் குடி மறைந்து வைத்துள்ள கதைகள் ஏராளம். சமணர்களை சைவர்கள் கொன்றார்கள் என்பது ஒரு கதை தான் என்று பெரும் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டது இம்முறை மலை.  இம்மலை இப்போது உள்ளது போல மூன்று மடங்கு இருந்ததாம். நம் மாபியா மலைக்கள்ளர்கள் மன்னிக்கவும் மலைக்கொள்ளையர்கள் வந்த பிறகு இம்மலையை சுரண்ட தொடங்கினர். ஆனால், இது சமண மலை என்பதால் எந்த தீங்குக்கும் செவி மடுக்காமல் அப்படியே இருந்தது. இருந்தாலும் இக்கொள்ளையர்களின் சுரண்டல் தாங்கமல் ஒரு நாள் ஓ வென்று அழுததாம். அட அழுகை நிஜாமானது அல்ல.. அதாவது சுரண்டலின் தொடர்ச்சி மலை சரிந்தது. இதன் அலறல் வெடிச்சத்தம் போல பல மடங்கு அப்பகுதியில் எதிரொலித்துள்ளது. இதில் ஆச்சரியம் அங்கு வேலை பார்த்த கல்லுடைக்கும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் காயமின்றி உயிர் பிழைத்துள்ளனர். அட அன்று அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல். அதுவும் அக்குவாரியின் முதலாளி வேட்பாளர் என்பதால் அனைவருக்கும் விடுப்பு. ஆகவே அதை அறிந்து மலை அழுதுள்ளது. அனைவரின் உயிரையும் காத்துள்ளது. அட சமண மலையாச்சே பலி நடக்குமா?

இப்பேர்பட்ட சமணர்களை சைவ சமயத்தவர் கொன்று இருப்பார்களா? கேட்பது நம் வரலாற்று பேராசிரியர் சங்கர லிங்கம். அனல் புனல் வாதம் நிகழ்ந்து இருக்கலாம். கழுவேற்றம் ஒரு கட்டுக்கதையாக தான் இருக்க முடியும் என்கிறார்.

அட மெட்ராஸ் கபேன்னு தலைப்பை போட்டுட்டு.. என்ன கட்டுக்கதை சொல்லுற என கேட்டு விடாதிங்க... ?

இதுவும் மெட்ராஸ் கபே மாதிரி மெட்ராஸை கலக்குற விசயம் தானுங்க...!

நாளை நான் சென்னைக்கு செல்கிறேன் . அதுவும் தமிழ்வாசியுடன் . அங்கு தருமி அய்யா வருகிறார்கள். அவர்களுக்கு சீனா அய்யா இல்லாதது வருத்தமாம். இருந்தாலும் எங்கள மாதிரி பழசுகள் வருவதால் வருகிறாராம்.!

மலையோடு பேசியது போல பிளாக்கருடன் உரையாடலையும் பதிவிடுவேன். அது சரி இப்ப ரயிலுக்கு நேரமாச்சு... அட இப்ப படுத்தா தனுங்க காலையில வைகை எக்ஸ்பிரச பிடிக்க முடியும்.

எல்லோரும் ஒன்று கூடுவோம்.. மகிழ்வோம். கருத்துக்களை பகிர்வோம். தொடர்புகளை விரிவுபடுத்துவோம்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உயிர்க் குடி தகவல்கள் அருமை

ஸ்ரீராம். said...

இதே இடத்தைப் பற்றிய உங்கள் முந்தய கட்டுரைகள் படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட அப்போது உங்கள் வலைப் பக்கம் வந்ததுதான் என்று நினைக்கிறேன். இப்போது நீங்கள் முகநூல் பக்கத்தில் ஷேர் செய்வதால் உடனே அறிய முடிகிறது. அடுத்து மதுரை வரும்போது இங்கு செல்ல முயற்சிப்பேன். எவ்வளவு நேரப் பயணம், மதுரையிலிருந்து?

'பரிவை' சே.குமார் said...

உயிர்க்குடி தகவல் அருமை...
பதிவர் சந்திப்பில் கலக்கி வாருங்கள்...
மதுரைக்கு அருகில்தான் இருக்கிறதா உயிர்க்குடி?

மதுரை சரவணன் said...

ஆமாம் குமார் ,ஸ்ரீராம் . பெரியாரில் இருந்து 21 நம்பர் பஸ் கீழக்குயில் குடிக்கு செல்கிறது. அது மலையடிவாரத்தில் இறக்கிவிடும் பேருந்து. மதுரை பெரியாரிலிருந்து நாகமலை வழிப்போட்டு செல்லும் எல்லா பேருந்துகளும் கீழக்குயில் குடி பஸ் நிறுத்தத்தில் நிற்கும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்லலாம். மதுரை வந்து என்னை அழையுங்கள் நான் அழைத்துச் செல்கிறேன்.

Post a Comment