Monday, April 16, 2012

எரிகற்கள்…


சுமந்து வரும்
புத்தகப் பை
சுட்டிக்காட்டுவது
அவனின் மனச்சுமையையும் தான்…!

எத்தனையோ அடக்கு முறைகளையும்
அதன் விளைவுகளையும்
கற்றுத் தரும் ஆசிரியருக்கு
ஏன் புரியவில்லை
அவர்களின் அடக்கு முறை…!
வகுப்பறைகளில்
ஆசிரியர்களின் சூரிய வட்டத்தில்
நட்சத்திரங்களாய் ஜொலிக்கும்
மாணவர்கள்…
வெளியில் வந்தவுடன்
எரிகற்களாய்
இலக்கை அடையும் முன்
எரிந்து சாம்பலாவது ஏன்..?


8 comments:

விச்சு said...

நன்றி சரவணன். இருவரும் கிட்டத்தட்ட ஒரே கருத்தினை பதிவாய் பகிர்ந்துள்ளோம். மிக்க மகிழ்ச்சி.

Unknown said...

அழகான வரிகள் நண்பா

நல்லா தான் இருக்கு

பாலா said...

மோசமான ஆசிரியர்களுக்கான சாட்டையடி.

reneshravi said...

super

reneshravi said...

superb i enjoyed it suppppppppppppppppperrrrrrrrrrrrrrrrr............

நம்பிக்கைபாண்டியன் said...

அருமை அருமை!

எம்.ஞானசேகரன் said...

நல்ல கேள்வி, நல்ல கவிதை!

சித்திரவீதிக்காரன் said...

வகுப்பறைகளில்
ஆசிரியர்களின் சூரிய வட்டத்தில்
நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் மாணவர்கள்…வெளியில் வந்தவுடன்எரிகற்களாய் இலக்கை அடையும் முன்எரிந்து சாம்பலாவது ஏன்..?\\
மொட்டமனப்பாடந்தான்.

கல்வி குறித்த தங்கள் கவிதைகளும், பதிவுகளும் அருமை.

Post a Comment