காஞ்சனா…! கல்லூரி முடித்த சில நாட்களிலே அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை. அவளிடம் இதுவரை இவ்வளவு அருகில் …. அதுவும் பேச சந்தர்ப்பம் அமைந்ததேயில்லை. இருந்தாலும் இந்த முறை தைரியத்தை வரவழைத்து பேசிவிட்டான். அவள் அவனின் கனவு தேவதை. பள்ளி பருவத்தை கடக்கும்வயதில் , அவனுக்கு மட்டுமல்ல அவனுடன் படிக்கும் அத்தனை விடலைப்பையன்களுக்கும் தான். எத்தனையோ முறை அவளை தொட முயற்சித்து இருப்பார்கள். கடைசி வரைஅவளின் விரலைக் கூட அவர்களால் தொட இயல வில்லை. ஆனால், இன்று அவளே தொட்டு பேசிய போது … இழந்த ஒன்றை பெற்ற மகிழ்ச்சி.
அவன் படித்த பள்ளியின் சத்துணவு ஆயா வேத வள்ளியின் ஒரே மகள் காஞ்சனா. அப்போது அவளுக்கு இருபது வயதிருக்கும். இவனுக்கு பதிநான்கு. அவளின் எடுப்பான முகம்.துரு துரு கண்கள். கருப்பு என்று சொல்லிவிட முடியாத ஒருவித கவர்ச்சியான நிறம். மொத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்கச் செய்யும் அங்கங்கள். பால் உறுப்புகளை தூண்டும்விதத்தில் குனிந்து நாவல் பழத்தை விற்கும் அழகு , பள்ளியின் ஆண் ஆசிரியர்களையும் பழம் வாங்கி சாப்பிட தூண்டும்.
“நீ முருகன் தானே….?கணக்கு பிள்ளை மகன் தானாடா…? எப்படா மருதைக்கு(மதுரைக்கு) வந்தீங்க…?”
அக்கா என்று சொல்ல மனமில்லாமல், “ஆமாங்க… நீங்க……..எப்படி இருக்கீங்க…?”
“ அட நெடு நெடுன்னு வளர்ந்திட்டையாடா… என்ன விட மூத்தவனாட்டம் தான் இருக்க .. பரவாயில்லை சும்மா காஞ்சனான்னே கூப்பிடு..”
மனதிற்குள் சிரித்தான். எத்தனை முறை பெயர் சொல்லி அழைக்க முயற்சித்திருப்போம். இரவு படுக்கையில் கனவில்… அப்போதும் எத்தனை தடுமாற்றங்கள் . காஞ்சனா அக்கா, சீ…காஞ்சனா.. ம்கூம்… அடியே வாடி.. அப்படி பார்க்காதே .. எத்தனை எத்தனை புலம்பல்கள்.. அந்த வலியை சொல்லி மீள முடியாது. அவனின் எண்ண ஓட்டங்கள் பள்ளி நாட்களைநோக்கி பயணித்தன. அவளுக்காகவே விடுமுறை நாட்களிலும் பள்ளி இயங்காதா ? என பல முறை துவண்டிருப்பான். கணக்கு வாத்தியாரிடம் வேண்டி விரும்பி சிறப்புவகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து , வெள்ளி , சனிக் கிழமைகளில் பள்ளி விட்டு செல்லும் போது, நாளைக்கு ஸ்பெசல் கிளாசு வந்திருங்க என கொஞ்சி வரசெய்து இருப்பார்கள்.காஞ்சனாவுக்காக அழுகிய பழங்களையும் , கலர் கலர் மிட்டாய்களையும் பிடிக்காவிட்டாலும், வாங்கி அவளையே சுவைப்பது போல சுவைத்து இருப்பார்கள்.
”காஞ்சனா… (தடுமாறி ) கல்யாணமாயி.. “
“கழுத்தில கயிற காணாம்ன்னு கேக்கிறியா…”
“வெறும் கழுத்தா ..அப்ப பார்த்த மாதிரியே இருக்கீயேன்னு கேட்டேன்….”
”அத ஏண்டா.. கேக்குற.. எங்க ஆத்தா.. நல்லா கல்யாணம் பண்ணி கொடுத்தா…அது பெரிய கதை .. பிடிக்கலை … அத்துகிட்டு வந்திட்டேன்…”
”என்ன காஞ்சனா.. சொல்லுற… உன்னை போயி.. “
“எல்லா ஆம்பளைகளும் அப்படி தாண்டா.. என் கஷ்டம் என்னோட… நீ என்ன செய்யுற சொல்லு..”
“நான் படிச்சுட்டு கொரியர் சர்வீஸ் வச்சுருக்கேன்.. அப்படியே அரசு வேலை கிடக்குன்னு மேற்கொண்டு படிக்கிறேன்.. அத விடு .. உன் கதைய சொல்லு”
மனதிற்குள் ஒரு பல்பு தோன்றி சிரித்தது. புருசன் இல்லை .. இவளை கவுத்திட வேண்டியது தான். அந்த வயதிலேயே முருகனும் அவனின் பணக்கார நண்பன் கணேசனும் அவளைகவுத்த பல முறை முயற்சித்திருப்பார்கள். நூறு ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு இருபது ரூபாய்க்கு வேண்டிய , வேண்டாத, விரும்பிய, விரும்பாத என எல்லா பொருட்களையும்வாங்கி விட்டு .. மீதி கொடுக்கும் போது ..” என்ன காஞ்சு.. இப்படி பொழைக்க தெரியாத புள்ளையா.. இருக்க..? ஐம்பது ரூபா கொடுத்தா .. எம்பது ரூபா கொடுக்கிற…?மீதி முப்பதுமட்டும் கொடு.. என் மேல பாசம் இருக்கலாம் அதுக்காக.. இப்படியா …முதலுக்கு நஷ்டம் வர மாதிரி பொழப்பு நடத்திற… முருகன மாதிரி பசங்க அப்படியே முழுங்கிட்டுபோயிடுவாங்க.. என் மேல ஒரு இதுன்னா.. வீட்டுக்கு கூப்பிடு வந்திட்டு போறேன்..” என்பார்கள். (என்னாடா பெயர் சொல்லி அழைக்கிறேன்னு திட்டினா.. கணேசன் மட்டும் காஞ்சுபோன பழத்தை வித்தா எப்படி கூப்பிடுவாங்களாக்கும்.. என நக்கல் அடிப்பான்)
“உங்களுக்கு உடம்புக்கு ஒரு மாதிரி தான் இருக்குது… பாத்துடா.. எங்கேயும் இப்படி பேசி உத பட்டுக்க போறீங்க.. “ என ரசித்து அவள் விரல் படாமல் விரட்டும் அழகிற்காக பலமுறை பல நூறுகளை கணேசன் இழந்துள்ளான்.
இந்த சந்திப்பு இத்துடன் முடிந்து விடக் கூடாது . இது தொடர வேண்டும் என்ற முஸ்திப்புடன் திட்டமிட தொடங்கினான்.
”என் செல்போன் நம்பர் இந்த விசிட்டிங் கார்டில இருக்கு .. உனக்கு எதாவது நம்பர் இருக்கா.. கொடு காஞ்சனா. “ தன் விசிட்டிங்க கார்டை நீட்டினான்.
காஞ்சனா .. காஞ்சனா என பேச்சுக்கு பல முறை அழைத்து தன் ஏக்கத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல்.. தனக்கு உரிமைப்பட்டவள் என காட்டிக் கொள்ள பலமுறை பெயர்சொல்லி அழைத்தான். அவளுக்காக எதையும் இழக்கவும் கொடுக்கவும் தாயாராக இருப்பது போல காட்டிக் கொண்டான். கணவனை இழந்த பொழுதிலிருந்து இது போன்றஎத்தனை உரிமை குரல்களை கேட்டிருப்பாள். காஞ்சனா என்ற பெயர் உச்சரிக்கும் வெப்பிலிருந்து தன்னை காக்க போராடியிருப்பாள். இருந்தாலும் இந்த முறை முருகன் அழைத்ததுபிடித்திருந்தது. அதற்கு அவனின் விடலையில் அவன் செய்த குசும்பு தனமும் காரணமாக இருந்திருக்கலாம். தன் காயத்திற்கு மருத்து தேடிய அவளுக்கு அவன் அழைத்ததுஇதமாகவே இருந்தது.
”காஞ்சு கணேசன் என்னடா.. ஆத்தில குளிக்கும் போது செத்து போயிட்டானாமேடா.. நீ கூட போயிருந்தியா…?”
“நான் போகல.. அவன் இஞ்சினியரிங்க காலேஜ் படிக்கிறப்ப.. அந்த பசங்களோட போயி .. செத்து போயிட்டான்.. என வலது கையே ஒடிச்ச மாதிரி இருந்துச்சு தெரியுமா?.. “
”ரெம்ப ஜாலியான பையன்..” என அவர்களின் பேச்சு நீடித்து இருவருக்குள்ளும் ஒரு இணைப்பை உருவாக்கியது. முருகனும் அவளின் வீட்டு விலாசத்தை பெற்று கொண்டான்.அவளும் இவனின் விலாசத்தை பெற்றுக் கொண்டாள். திக்கற்று திரிந்த அவளுக்கு அவனின் பேச்சு சோகத்தை மறக்க செய்து, தன் இயல்பை திருப்பி தந்திருந்தது. படரும்கொடிக்கு ஒரு கம்பமாக இருக்கலாம் என அவனும் தினமும் தொலை பேசியிலும் , நேரிலும் சந்தித்து பேசலானான்.
“கணேசனும் , நீயும் எத்தனை முறை என் கைகளை தொட நினைத்து தோற்று போயிருப்பீங்க.. இப்ப நான் உன்னை தொட்டு தொட்டு பேசிறேன்.. நீ இப்பவும் தொட பயப்படுறே…”
“இல்ல காஞ்சனா… நானும் பல முறை தொடணும் .. தொடணும்ன்னு..”
அவளுக்கு அவனின் இழுப்பான பேச்சு புரிந்து போயிற்று.
“ என்னடா.. தொட தானே வேணும் எங்க வேணும்னாலும் தொட்டுக்க.. நீ தொடுறதுக்கு ஏங்கினா காஞ்சு டா… “ என சூடு ஏற்றினாள்.
“இல்ல .. பேனில பேசும் போது நல்லா தான் பேசுறேன். . உன் வீட்டில தனியா பேசும் போது தான் .. எனக்கு இப்படி தோணுது.. எனக்கு எப்படி சொல்றதுண்ணு தெரியலை..”
அவனின் உள் நோக்கம் தெளிவாக புரிந்தவளாக..
“என்னாடா. .. எதையும் தெளிவா பேசுடா… நான் தான் கூச்சப்படாம கிட்ட வந்து பேசிறேன்.. நீ எப்பவும் ஒதுங்கியே போறா… என்ன பசங்கடா.. “
“ஆனா உனக்கு அந்த மாதிரி எண்ணம் இருக்கான்னு தெரியல… ஆனாலும் என் மனசு சொல்லாமலும்.. கேட்காமலும் இருக்க மாட்டீங்குது…”
“எல்லாம் புரியுது…. ஆனா..”
“என்ன காஞ்சனா…ஆனா ஆவன்னான்னு இழுக்கிற… பயமா இருக்கா… “
“எதுக்குடா பயப்படணும்…யாருக்குடா …”
“அதுயில்ல… உன்னை கூப்பிடுற மாதிரி நான் வேறு பொம்பளைகிட்ட போயிறுப்பேனோன்னு ….”
“…….”
“உனக்கு வேணும்னா.. நான் எயிட்ஸ் டெஸ்ட் எடுத்து கொடுக்கட்டா… அதுக்கு பின்னாடி…”
“எனக்கு எந்த டெஸ்டும் தேவையில்ல.. நானே.. பாஸிட்டிவ் தான்…”
“என்ன சொல்ற…?”
“என் புருசனோட சண்டை யில்லை …பாவி எனக்கு எயிட்ஸ் கொடுத்துட்டு ஓடி போயிட்டான்.. எங்க இருக்கான்னு தெரியல… அதுனால உன்னோட எந்த டெஸ்டும் தேவையில்லை… உனக்கு விருப்பன்னா ….”
“ச்சே…. அப்படி ஒண்ணும் இல்லை.. எனக்கு நேரமாயிடுச்சு… நாளைக்கு வரேண்…”
இதே போல எத்தனையோ முருகன் அவளை விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என ஓடியிருப்பார்கள். உண்மையில் அவள் ஒரு நெகடிவ் என்பது அவளுக்கும் விபத்தில் இறந்த அவளின் கணவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
1 comment:
//இது போன்றஎத்தனை உரிமை குரல்களை //
Post a Comment