Monday, November 8, 2010

மதுரை- திருப்பூவணம் சிவன் கோவில்

    திருப்பூவணம் கோவில் பெயர்காரணம் மிகவும் நம்மைக் கவருவதாகவே உள்ளது. கோவில் தன்னுள் கொண்டுள்ளக் கதை என்னை மீண்டும் மீண்டும் அதனுள் புதைந்துள்ளக் கதைகளை அறியவே என்னை பலமுறை திருப்புவணம் அழைப்பதாகவே உள்ளது. மீண்டும் செல்ல முயற்சித்துள்ளேன்.




   காசியில் இருந்து அஸ்தியை கரைத்து மீதியைக் கரைக்க இராமேஸ்வரம் வருகிறார் . வரும் வழியில் மதுரையைக் கடந்து , இராமேஸ்வரம் நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் போது , திருப்புவணம் என அழைக்கப்படும் , இக்கோவில் உள்ள ஆற்றுப்பகுதியில் தங்கியுள்ளனர். அப்போது அவர்களின் வழி போக்குக்கு துணையாக வந்தவன் , பசிக்கவே, பாத்திரத்தை திறக்கிறான், அதில் அஸ்திக்கு பதிலாக எலும்புகள் பூவாகவே காட்சி அளிக்கின்றன. பின் மறுபுறம் இருந்த , பாத்திரத்தை திறந்து , உணவு அருந்தி , தன் பயணத்தைத் தொடருகிறார்கள்.


      இராமேஸ்வரம் சென்று கரைக்க அஸ்தியை எடுக்கும் போது, அது மீண்டும் சாம்பலாகவே காட்சி அளிக்கிறது.  துணைக்கு வந்தவன் தான் கண்ட காட்சியை அவர்களிடம் காட்ட, அவர்கள் மீண்டும் வந்து , இங்து வந்து பார்க்கும் போது , அது மீண்டும் பூவாகவே நறுமணத்துடன் காட்சி தருகிறது. அங்கு கரைத்து விட்டு செல்கிறார்கள். ஆக, பூ வாக காட்சி தந்து , இறந்தவருக்கு மோட்சம் தந்ததால், இவ்விடம் திருப்பூவணம் என அழைக்கப்படுகிறது.

    ஆகவே, இராமேஸ்வரத்தை விட , இங்கு வந்து அஸ்தியைக் கரைப்பவர்கள் அதிகமே. அனைத்து பாகுதியிலும் வந்து , அஸ்தியை கரைக்கின்றனர். நாங்கள் செல்லும் போது பலர் அஸ்தி கரைக்க வந்து இருப்பதைக் கண்டு மிரண்டு போனேன். அவ்வளவு கூட்டம். இங்கு அஸ்தி கரைத்தால் அவருக்கு மோட்சம் உண்டாகுமாம். அது மட்டுமல்ல , நம் குடும்பத்தில் யாராவாது இறந்து அவர்களுக்கு அஸ்தி கரைத்து , அதற்கான சடங்குகளை செய்யாமல் விட்டு , அக்குடும்பத்தை சேர்ந்த யாராவது இறந்து , அவர்களுக்கு கரைத்தால், அவர்களின் முன்னோர்களுக்கும் மோட்சம் கிடைக்குமாம். அதானாலே , இங்கு அஸ்தி கரைத்து சடங்கு செய்பவர்கள் அதிகம்.

        இங்குள்ள நந்தி திரும்பியுள்ளது. அதற்கும் ஒரு கதை சொல்லுகிறார்கள். சம்பந்தர் அக்கரையிலிருந்து சிவனை நோக்கி பதிகம் பாட, பாட, சிவன் பூவாக மாறி ஆற்று நெடுகிலும் தோன்றுகிறார், அதைக் காண லிங்கம் திரும்பியதால், அப்படியே திரும்பிய படி உள்ளது . அதற்கு முன்பு வரை அது நேராக சிவனை நோக்கியே இருந்தது என கதை கூறுகின்றனர்.


சிவபுராணம் பார்ப்போம்... தொடரும்.

5 comments:

Chitra said...

நிறைய தகவல்களுடன், நல்ல பகிர்வு. நன்றிங்க.

ஸ்ரீராம். said...

அஸ்தி விஷயம் புதிதாகக் கேள்விப்படுகிறேன்..

test said...

நல்ல பகிர்வு, நன்றி!

ஆயிரத்தில் ஒருவன் said...

நல்ல பகிர்வு அருமை, திருப்பூவனம் என்பதே சரியான பெயர் ஆனால் இந்த அரசு பேருந்துகளில் திருப்புவனம் என்றே பலகைகளில் உள்ளது. பெயரை கூட சரியாக எழுத முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

சிவராம்குமார் said...

நல்ல பதிவு சரவனணன்! நன்றி !

Post a Comment