Thursday, September 1, 2016

குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளே!

சிற்றுளிகளிடம் தோற்றவன்...!
*
இன்று மதியம் குழந்தைகளுக்கு வாய்ப்பாடு எளிமையாக கற்பது குறித்து கற்று கொடுத்தேன்.
"சார் , இவ்வளவு ஈசின்னு தெரியாம போச்சு ...இப்ப 20 வரை வாய்ப்பாடு எளிமையாக தெரியுமே" என தர்ஷினி கூறினாள்.
நான் பெருமையாக , இன்னும் நிறைய விசயம் தெரியும். ஒரு நாளைக்கு ஒண்ணு தான் என்றேன்.
அருகில் இருந்த யுவராணி, நீங்க பெரிய ஆள் என்றால் நான் சொல்வதை சொல்லுங்க என்றாள்.
"ம்.. கேளு சொல்லுவேனே" என்றேன்.
ஒரு பேருந்தில் எட்டு பேர் புறப்பட்டார்கள் என நிறுத்தினாள்.
ம் கேளு என்றேன்.
நான் சொல்றதை சொல்லுங்க என்றாள். நான் அவள் சொல்வதை போன்றே கூறினேன்.
அடுத்த நிறுத்தத்தில் எட்டு பேரும் இறங்கிவிட்டார்கள். என்றாள். நானும் அதேப்போல் கூறினேன்.
இப்ப பேருந்தில் எத்தனை பேர் என கேட்டாள். இப்ப பேருந்தில் எத்தனை பேர் என்றேன். அட சொல்லுங்க சார் என அதட்டினாள்.
நான் உணர்ச்சி வயப்பட்டு , ஏன் அதட்டுற , எல்லாரும் இறங்கிட்டா பேருந்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றேன்.
சார், நீங்க சரியான முட்டாள். நான் சொல்றதை தானே சொல்ல சொன்னேன். கேள்விக்கு பதிலா கூற சொன்னேன் என்றாள். சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர் .
" கல்லும் தகரும் தகரா கொல்லுலை கூடத்தினால் " என்றாள் பவித்ரா .
குழந்தைகள் மிக எளிமையாக ஆசிரியரின் கனத்தை உடைத்து விடுகிறார்கள். அதிகாரம் உடையும் போது ஜனநாயகம் பிறக்கிறது என்பதை உணர்கின்றேன். ஜனநாயக வகுப்பறையே குழந்தைகளை நம்மோடு என்றும் ஒன்றிணைக்கும்.
மதுரை சரவணன்

4 comments:

G.M Balasubramaniam said...

அதிகாரம் உடையும் போது ஜனநாயகம் பிறக்கிறது உண்மையாகவா பல நேரங்களில் அடக்கி ஆள்வதே நிகழ்கிறது

Yarlpavanan said...


அருமையான பதிவு
தங்கள் பணி தொடர வேண்டும்!

'பரிவை' சே.குமார் said...

குழந்தைகள் மடக்கிவிட்டார்கள்...
அருமை.

NAGARJOON said...


Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Corporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace

Post a Comment