Tuesday, October 21, 2014

காதல் கவிதை

முழுநிலவு
--------------------
உயரத்திலிருந்து பறக்கும் பருந்தின் கண்கள்
கூர்மையாக்கி கொத்தக் காத்திருக்கின்றன
என்னைப்போலவே...
பார்வை வேறுயெங்கும் இல்லை
என்பதறிந்தும் ரசிக்கின்றாய்
கண்டும் காணாதும்...
கடல் அலையின் இடைவிடா மோதல்
தொடர்ந்து கரையை முட்டிக்கொண்டிருக்கின்றது
கரைக்கும் அலைக்குமான விளையாட்டாய்
நம் பார்வை
ஏழு வகுப்புகள் கடந்தும் ஏழு தோழனை எதிரியாக்கியும்
எதிரியாய் இருக்கும் உன் சகோதரனை நண்பனாக்கியும்
உன் தாய்க்கு பலசரக்கு வாங்கி கொடுத்தும்
உன் தந்தைக்கு பல சரக்குகள் வாங்கி கொடுத்தும்
சிந்துபாத் கதைகளை விட கடுமையான இடர்பாடுகளை
கடந்து எப்போதும் உன்னோடு இருக்கும்
எந்தன் உயிர் உன் இதழ் விரிகையில் பறக்கிறது
அள்ளிக்கொள்கின்றாய் சொல்லிக்கொள்ளாமலே.
கதவு தட்டும் சத்தம் கேட்கின்றது
திறக்கின்றேன் இரவின்
வானத்தில் நட்சத்திரங்களுக்கு மத்தியில்
முழுநிலவாய் நீ.
மதுரை சரவணன்.

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையின் வரிகள் மிக அருமையாக உள்ளது..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருவக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

Post a Comment