ஆசிரியர் பணி என்பது
புனிதமானது. ஆனால் இன்று கொச்சைப்படுத்திப் பேசப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள
வேண்டும். எப்படி படிக்க வைக்க வேண்டும்? வகுப்பறையில் மாணவர்களை கண்டித்து , தண்டனை
கொடுப்பது மாணவர்களின் நலனுக்கு என்பது உங்கள் உரிமை. இதை மாணவர்களும் புரிந்து கொள்ளவில்லை.
இதற்காக சட்டங்கள் இயற்றி இருப்பதை நான் ஒப்புக் கொள்ளவது அல்ல. இப்போதுள்ள அரசு இதற்கு
ஒத்து போகிறது. இதற்கு பள்ளிக் கல்வியை காரணமாக சொல்லக்கூடாது.
கற்பிக்கும் முறைகள்
பல உண்டு. ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பல கற்பிக்கும் முறைகளை படித்திருப்பீர்கள்.
எந்த முறை சிறந்தது, உங்கள் மாணவர்களுக்கு எது சிறந்ததோ, அதை பயன்படுத்துங்கள். எங்கள்
கிராமத்தில் ஒரு சொல்லாடை உண்டு. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும் . பாடுகிற மாட்டை பாடிக்கறக்கணும்.
அது போல மாணவனுக்கு எது உகந்தது என்பதை உணர்ந்து கற்றுக் கொடுங்கள்.
”கொள்வான் கொள்கை
அறிந்து அவன் உள கற்று கொள்ள செய்ய வேண்டும்”. அறுபது முதல் நாற்பது மாணவர்கள் உள்ள
வகுப்பறையில் , ஒவ்வொரு மாணவனும் அவனுக்கு தான் சொல்கிறீர்கள் என்ற மனநிலையை உருவாக்க
வேண்டும். நீங்கள் சொல்லும் கருத்து அனைவருக்கும் பொருந்தும் விதமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவனையும் தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டும்.
குழந்தை வீட்டில் ஓடும்,
எதையாவது பொருளை எடுத்து விளையாடும். தெரிந்து கொள்ள வேண்டும் ஆவலில் தான் எடுக்கும்,
தடுத்து நிறுத்தாமல், அதனை தெரிந்து கொள்ள
அனுமதிக்க வேண்டும். அதை தான் பள்ளிகளிலே செய்ய வேண்டும். மட்டம் தட்டி பேசக்கூடாது. மாணவன் உங்களுக்கு தெரியாத கருத்துக்களை
கேட்டால், அதனை புறக்கணிக்கும் விதமாக மாணவனை குறை சொல்ல கூடாது. தெரிந்து பின் கூறுங்கள்
. விடையளியுங்கள். உங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளுங்கள். அதனை போக்க முயற்சி எடுங்கள்.
ஆசிரியர்கள் பதில் தெரிந்தவர்களாக , நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.
ஆவலை தூண்ட வேண்டும்.
மாணவர்களிடம் பேசுகின்ற நேரத்தில் முகமலர்ந்து இருந்தால், பயம் இன்றி கேட்பார்கள்.
நீங்கள் எப்பொழுதும் ஒரு உதாரண மனிதராக இருக்க வேண்டும். மாணவர்கள் முழுவதுமாக ஆசிரியரை
தான் நம்புவார்கள். குழந்தையிடம், அப்பா ’தப்பு’ என்று சொன்னாலும், ’இல்லை’ , ’இல்லை’ எங்கள்
ஆசிரியர் சொல்லி கொடுத்தது தான் சரி என்பார்கள். அவர் யுனிவர்சிட்டியில் கணித பேராசிரியராக
இருப்பார், ஆனால் அவரை குழந்தை நம்பாது. ஆசிரியரை குழந்தைகள் முழுமையாக நம்புகின்றன.
அப்படி இருக்கும் பட்சத்தில் , நேர்மையானவர்களாவும், உதாரண புருசர்களாகவும் வாழ்ந்தால்
தான் குழந்தைகள் நம்மை மதிக்கும்.
எங்கிருந்தாலும்
ஆசிரியரை மாணவர்கள் ஆசிரியராக தான் பார்க்கிறார்கள். பெரிய பதவியில் இருந்தாலும் ,
எத்தனை ஆண்டுகளானாலும், என்னுடைய ஆசிரியர் என்று தான் சொல்வார்கள். ஒரு கிளார்க் மேனேஜரான பின் , அவர் கிளர்காக இருந்த
காலத்தில் இருந்த மேனேஜரை இவர் என் மேனேஜர் என்று கூறுவதில்லை. இதேப்போல பல துறைகளை
சொல்லலாம். என்னுடைய ஆசிரியரை மட்டும் எந்த காலத்திலும் தன்னுடைய ஆசிரியர் என்று தான்
சொல்வான். இப்படி பட்ட துறையில் பணியாற்றும் உங்களை பாராட்டுகிறேன்.
மனம் நிறைவாக செயல்பட
வேண்டும். இந்த உன்னத பணியை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்பட
வேண்டும். மாணவர் மனம் குளிர வேண்டும் . அப்படி செய்வதற்கு உங்கள் திறமையை வளர்த்து
கொள்ள வேண்டும். சிறப்பாக செய்தால், உங்களை மாணவர்கள் நல்ல நிலமையில் இருக்கும் நேரத்தில்
எண்ணிப் பார்த்து பாராட்டுவார்கள். அந்த விதத்தில் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.
நானும் , என்னுடைய
உயர் கல்வி துறை டைரக்டரும் ஒரு சமயத்தில் தெருவில் நடந்து சென்றோம். எதிர் திசையில்
இருந்து ஒருவர் கை அசைத்து என்னை கூப்பிட்டார். நானும் கை அசைத்து நிற்க சொல்லி ரோட்டை
கிராஸ் செய்து பேசிவிட்டு திரும்பி வந்தேன். ”யாரது உங்க மகனா?” என்று கேட்டார் டைரக்டர். ”இல்லை, இவன் என் ஸ்டுடண்டு”, என்றேன். நீங்களும் உங்கள் மாணவர்களை மாணவனா ? மகனா? என தெரியாத
அளவிற்கு பழக வேண்டும்.
டெல்லியிலிருந்து
சென்னைக்கு குடியேறிய சமயம் நடந்த நிகழ்வு . தமிழகத்தின் சீப் செகரட்ரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை
பார்க்க வேண்டும் என்று அவரை போனில் அழைத்து அட்ரஸ் பெற்றுக் கொண்டேன். 4 லேக் தெரு
என்று கூறினார். நானும் சரியாக அந்த ஏரியாவில் வந்து 4 லேக் தெருவில் நின்று கேட்கிறேன்.
அப்படி யாரும் இல்லையே என்கின்றனர். அப்போது செல்போன் கிடையாது. இவ்வளவுக்கும் அவர்
கடந்த மாதம் தான் சீப் செகரட்ரியாகி ரிடையர்டு ஆனவர். அடுத்த வீட்டில் விசாரிக்கிறேன்.
அதற்கு அடுத்த வீட்டில் விசாரிக்கிறேன். யாருக்கும் தெரியவில்லை. அதற்கு அடுத்த வீட்டில் இருப்பவரிடம் அனுமதிப் பெற்று, அவர் வீட்டிலிருந்த போன் மூலம் , அவரிடம் பேசினேன். நான் முதலில் சென்று விசாரித்த இடத்திற்கு அருகில்
சந்து மாதிரி போகிறது . அதில் நாலாவது வீடு தான் அவர் வீடு. அருகில் இருப்பவர்களுக்கே
அவரை அடையாளம் தெரியவில்லை.
நான் ஒருமுறை சிங்கப்பூர்
சென்றிருந்தேன். அனைவருக்கும் தெரிந்த சாப்பிங்க் செண்டரில் சாப்பிங் செய்து கொண்டிருந்தேன்.
திடீரென்று ஒரு குரல், “அய்யா வணக்கங்கய்யா…” யாருப்பா தெரியலையே என்றேன். அவன் என்னை
சரியாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறான். அய்யா நான் 66ல் உஙக் கிட்ட மாணவனா இருந்தேன்.
எங்க இங்க?என்று கேட்டேன். நான் ஆப்பிரிக்காவில வேலை செய்யுறேன். போற வழியில சிங்கப்பூரில் பொருட்கள்
வாங்கி செல்லலாம் என்று வந்தேன். நீங்க டெல்லியில இருக்கீங்கன்னு சொன்னாங்க.. நீங்க
இப்ப சிங்கப்பூர்ல்ல இருக்கீங்களா? 12 ஆண்டுகளுக்கு முன் கிண்டி காலேஜில் என்னிடம்
படித்த ஒருவன் டெல்லியில் நான் இருந்த விபரத்தை தெரிந்து வைத்துள்ளான். இரண்டு மாணவர்கள்
சந்தித்தால் என்ன நிகழும். ஆப்பரிக்க காட்டில் வாழும் ஒருவன் டெல்லியில் நான் இருந்த விபரத்தை
அறிந்து வைத்துள்ளான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆசிரியர்களாகிய உங்களை ஆயுளுக்கும் நினைத்துப்
பேசிக் கொண்டிருப்பார்கள். அதுவும் மோசமாக இருந்தால் இன்னும் கூடுதலாகதான் பேசுவார்கள்.
மதிப்பீடு செய்வது
எதற்கு? தேர்வுக்கு மாணவன் எவ்வாறு படிச்சுருக்கான் என்பது தெரியவா? தேர்வு
மதிபெண்கள் அதை மட்டும் காண்பிக்கவில்லை. எத்தனை மதிப்பெண் பெற்றுள்ளார்கள்? மாணவர்கள் அனைவரும் சராசரியாக 50 க்கு மேற்பட்ட மதிப்பெண்கள்
எடுக்கிறார்கள் . நீங்கள் சரியாக சொல்லிக்
கொடுத்திருந்தால் அனைவரும் 100 மதிப்பெண்கள்
பெற்றிருப்பார்கள். மதிப்பீடு செய்வது, தேர்வு என்பது
1.
நீங்கள்
கற்று கொடுப்பது சரிதானா என அறிந்து கொள்ள.
2.
நீங்கள்
சரியாக கற்றுக் கொடுக்க பயிற்சிகளின் தேவையை அறிய, பூர்த்தி
செய்ய மதிப்பீடு உதவுகிறது.
3. அரசு
கல்விக்கு செலவு செய்வது பயனுள்ளதா என தெரிந்து கொள்ள
மதிப்பீடு உதவுகிறது. ஆட்சியாளர்கள்
சரியாக இருந்தால் பயிற்சியை முறையாக தந்திருப்பார்கள். ஆசிரியர்களிடம் குறை இருக்கிறதா?
மாணவர்களிடம் குறை இருக்கிறதா? என்பதை அறிந்து அசம்பிளியில் விவாதித்து இருப்பார்கள்.
இப்போது இந்த ஆட்சியில் இவை செய்யப்படுவதில்லை.
தொடர் மற்றும்
முழுமையான மதிப்பீடு செய்தால், நாம் கற்பிக்கும் முறை சரிதானா? என அறிய முடியும். நம்மிடம்
உள்ள குறைகளை நீக்கி , மாணவர்களுக்கு குறையின்றி கற்பிக்க வேண்டும். நமக்கு மனநிறைவு
ஏற்படும். நாம் காரியத்தை சரியாக செய்தோம் என்றால் மகிழ்ச்சியாக இருப்போம். நாம் மகிழ்ச்சியாக
இருந்தால் மென்மேலும் வளர்வோம். நாடு செழிக்கும்.
இது வேதா அகாடமி சார்பில் மதுரையில் திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சிசிஇ பயிற்சி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்ரீதர் வழங்கி, அவர் எழுதிய சிசி இ சார்பாக தெளிவான புத்தகங்கள் (2 வால்யூம்) வெளிடீட்டு விழாவில் முன்னாள் வயிஸ் சான்ஸ்சலர், (பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்) எஸ். முத்துக்குமரன் பேசிய உரை.
விழாவில் இரண்டாவது பாகம் மட்டும் தான் இருந்தது. விரைவில் முதல்,இரண்டாம் பாக புத்தகங்களை படித்து , அதற்கான மதிப்பீட்டை விரைவில் எழுதுகிறேன்.
8 comments:
*
முக்கியமான பதிவு.. தோழர்..!
முன்னால் துணைவேந்தர் அய்யா திரு. எஸ். முத்துக்குமரன் அவர்கள்,
தன்னுடைய பழுத்த அனுபவத்திலிருந்து எடுத்துக் காட்டியிருக்கும் சம்பவங்களும்,
அதன் உள்ளீடாக இருக்கும் கருத்துச் செறிவும்.. கவனிக்கத்தக்கது.
இன்றைய காலக்கட்டத்துக்கு மிக மிக அவசியமான ஒன்றும் ஆகும்.
தொடர்ந்து கல்வி சார்ந்தும், மாணவர்களின் நலன் கருதியும் அக்கறையோடு, அதனுள் செயல்படும் தடுமாற்றங்களையும் சுட்டிக்காட்டி, உடனடி தேவைகளையும் குறிப்புணர்த்தும் மூத்த ஆசிரியர்களின் வழிக்காட்டுதல் பயன்பட வேண்டும்.
அனைத்து ஆசிரிய நெஞ்சங்களின் நல்லெண்ணத்துக்கும்
வாழ்த்துக்கள்.
ப்ரியங்களுடன்
இளங்கோ
யாவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு....!
நல்ல கட்டுரை ஐயா! CCE முறை அரசு பள்ளிகளில் மட்டும் பின்பற்றப் படுகிறது. தனியார் பள்ளிகளில் கோச்சிங் முறைகளே தொடர்கின்றன. பெற்றோரும் அதையே விரும்புகின்றனர். சென்னை ஒட்டயுள்ள ஒரு புகழ் பெற்ற மெட்ரிக் பள்ளி ஒவ்வோர் ஆண்டும் மாநில அளவில் முத்ளிடன்களைப் பெறுவார்கள். ஒரு என் மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, நான் வேலை செய்யும் பள்ளியில் பயன்படுத்திய இராடசஸ்தானிஸ் சல்லடை என்ற கணித உபகரணத்தை மகனிடம் அவனது ஆசிரியரிடம் கட்டும்படி கொடுத்து அனுப்பி இருந்தேன். அது என்ன என்பதே அந்த கணித ஆசிரியைக்கு(முதுகலைப் பட்டம் பெற்றவர்) தெரியவில்லையாம். தமிழ் ஆசிரியர் மட்டும் அதைப் பார்த்து பாராட்டினாராம். இவர்கள் வழங்கும் கல்விதான் தரமான கல்வி என்று ஏற்றுக் கொள்ளபடுகிறது.
மாற்றம் எல்லா இடத்திலும் வரவேண்டும்
அன்பின் சரவணன் - பதிவு அனைவராலும் படிக்க வேண்டிய பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//ஆசிரியர்களாகிய உங்களை ஆயுளுக்கும் நினைத்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதுவும் மோசமாக இருந்தால் இன்னும் கூடுதலாகதான் பேசுவார்கள். //
ஹா ... அப்படியா? அதனால் தானா ...?!
எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...
முக்கியமான பகிர்வு....
Post a Comment