எழுத்தாளர்களில் மிகவும்
மாறுபட்டவர்.
யாரையும் சாடுவதில் எந்த தயக்கமும் காட்டாதவர். இதனாலே பலரின் மோசமான விமர்சனங்களுக்கு உட்படுபவர். இல்லை என்பதை இல்லை என்றும் , இருக்கு
என்பதை இருக்கு என்றும் உண்மையான வாழ்க்கை வாழ்பவர். தன் நண்பர்கள், வாசகர்கள் மத்தியில் போலியாக வாழாமல் உண்மையாக வாழ்வதால் கோபத்தையும் பாசத்தையும் அபட்டமாக காட்டுபவர். இவர் வட்டத்தில் உண்மையான மனநிலையில் வாழ்வதால், இவரால் எதையும்
கேட்க முடிகிறது . எதையும் தைரியமாக சொல்லவும் முடிகிறது. இதற்கு எதிர்மறையாளர்கள்
வைத்திருக்கும் பெயர் பிச்சை. அதற்கும் பதில் அளிப்பவர்.
காரிய சாமர்த்தியம் மிகுந்தவர்களில்
இருந்து மாறுபட்டு , நிகழ்கால
நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து , தன் கருத்துக்களை யாரையும் சாராமல் , வேண்டியவர்கள் பக்கம் சாயாமல், தில்லாக
, தான் தன் சார்ந்த சமூகத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்
என்ற இலட்சியத்தை சுமந்து விமர்சன கட்டுரை எழுதுபவர் .
உதயக்குமாரின் போராட்டம் நேர்மையானது, உண்மையானது, நாடகத்தன்மையற்றது
என வக்காலத்து வாங்கும் எழுத்தாளார்கள் மத்தியில் , உதயக்குமாரின் போராட்டத்தை தோலுரித்துக்காட்டுகிறார்,
‘சலவையாக்கப்பட்ட சிந்தனைகள்’ என்ற தன் கட்டுரையில் இவர்.
திரை விமர்சனம் என்றாலும் இந்த சினிமாவை என்னால் ஐந்து நிமிடம்
கூட உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என பொட்டில் அறைந்த மாதிரி விமர்சிப்பவர். வாசகர்
மனநிலை யறிந்து செயல் படுபவர்கள் மத்தியில் சமூக அக்கறை கொண்டு நடப்பவர். தனக்கென ஒரு
வட்டத்தை (அரசியல் ) வகுத்து செயல்படுபவர்கள்
மத்தியில் எதிலும் சிக்காமல் , அரசை எதிர்ப்பவர் மட்டும் அல்ல, நல்ல கருத்துக்காக ஆதரிக்கவும்
செய்பவர். முன்னாள் முதல்வரின் மகன் தன் தந்தைக்கு அவரின் மகனின் திருமணப் பத்திரிக்கையை
கொடுப்பதை செய்தியாக்கிய போது கடுமையாக சாடியவர். எந்திரனை எந்திரிக்காத அளவு விமர்சனம்
செய்தவர். இன்று தமிழக அரசின் செயலுக்கு பாராட்டு
தெரிவிப்பவர்.
மக்களுக்காக வாழும் எழுத்தாளர் என்ற உயர்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவர் மனதை அரசு எதிர்ப்பு கொள்கையால் சலவை செய்யாமல், மக்கள் நல சிந்தனையால் சலவை செய்துள்ளதால்,
பிற எழுத்தாளர்களைப் பார்த்து கேட்கிறார்,
“ எழுத்தாளர்கள் எப்போது விஞ்ஞானிகளாயினர்? “
இன்று தினமலர் 13.1.2013 பக்கம் 9 ல் வந்துள்ள இவரின் கட்டுரையை
படித்து பார்த்து இதுவரை நான் கூறிய எழுத்தாளர் யார் என்று அறிந்து கொள்ளுங்கள்.
இரண்டாவது பாராவில் உள்ள சிவப்பு எழுத்துக்களை வரிசையாக
சேர்த்தால் இவர் யார் என்று தெரியும்.
4 comments:
Absolutely right.
ஓ! நீங்கள் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொண்டீர்களா ... அவரா ..?
அவரா...????
நீங்கள் ரசிக்கும் எழுத்தாளர் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்...
வலையுலகில் அவரை படாதபாடு படுத்துகிறார்கள்... பாவம் அவர்.
பகிர்வுக்கு நன்றி
ayyaa athu s ramakirshnan ...ithellaam too much.
Post a Comment